Latest Updates
-
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்!
மார்ச் 24 அன்று மீன ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...
மார்ச் 24 ஆம் தேதி மீன ராசியில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மீன ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குகிறது.
கிரகங்களின் சேர்க்கை அனைவருக்கும் நன்மை மற்றும் தீமைகளை அளிக்கிறது. சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்திருக்கும் போது புதாதித்ய யோகம் உருவாகும். அந்த வகையில் சூரியன் மற்றும் புதன் மீன ராசியில் சேர்வதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. ஏற்கனவே சூரியன் 2022 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறியுள்ளார். இந்நிலையில் 2022 மார்ச் 24 ஆம் தேதி புதனும் மீன ராசிக்கு செல்கிறார்.

இதனால் மார்ச் 24 ஆம் தேதி மீன ராசியில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம் என்பதால், பல ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களை பெறுவார்கள். ஆனால் மீன ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குகிறது. அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, இந்த வீடு வருமான வீடாகும். ஆகவே ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் இந்த யோகத்தால் அதிகரிக்கும். திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். மேலும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாக வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பொருளாதார நிலை மேம்படும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இந்த பத்தாவது வீடு தொழில், வேலை, வியாபார வீடாகும். ஆகவே இந்த ராசியைச் சேர்ந்த வியாபாரிகள் லாபத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வருமான உயர்வைப் பெறுவார்கள். மொத்தத்தில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த ஒன்பதாம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கிறது. ஆகவே இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் பெறுவார்கள். மேலும் அனைத்து வேலைகளிலும் வெற்றியைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த வீடு கூட்டாண்மை, திருமண வாழ்க்கை போன்றவற்றின் வீடாகும். ஆகவே கன்னி ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த வீடு பணம், பேச்சு ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் திடீரென்று பண வரவைப் பெறுவார்கள். மேலும் நீண்ட நாட்களாக கைக்கு வர வேண்டிய பணம் இக்காலத்தில் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
