Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரங்க வாழ்க்கை சூப்பரா இருக்கப் போகுது...
ஏப்ரல் 15 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
நவகிரகங்களின் தலைவர் சூரியன் மற்றும் புத்திகாரகன் புதன். கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரகங்களின் சேர்க்கையும் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் பயணிக்கும்.

கிரகங்களில் வேலை, வியாபாரம், பேச்சு போன்றவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறார். தைரியம், பதவி- கௌரவம் மற்றும் ஆட்சி-நிர்வாகம் போன்றவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறார். சூரியனும், புதனும் ஒன்றாக ஒரு ராசியில் இருந்தால், அப்போது மங்களகரமான புதாதித்ய யோகம் உருவாகும்.

மேஷத்தில் புதாதித்ய யோகம்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு சென்றார். மறுநாள் ஏப்ரல் 8 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு சென்றார். இந்த மேஷ ராசியில் புதன் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்லவிருக்கிறார். அதே போல் மார்ச் 15 ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணித்த சூரியன், ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்றார். ஏப்ரல் 15 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
புதனும், சூரியனும் மேஷ ராசியின் முதல் வீட்டில் இணைவதால், இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியம், நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவை அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் முதலீடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாவதால், இக்காலத்தில் உங்களின் கௌரவம் உயரும். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தால் நன்மை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இக்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைகிறார்கள். சொந்த ராசியில் புதன் சூரியனுடன் இணைவதால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் தீரும். முக்கியமாக இக்காலத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
புதன் மற்றும் சூரியன் சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் இணைகிறார்கள். இதனால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்தித்த தடைகள் இக்காலத்தில் நீங்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் உயரும்.



Click it and Unblock the Notifications
