Latest Updates
-
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
தனுசு ராசியில் உருவாகியுள்ள புதாதித்ய யோகத்தால், அடுத்த 14 நாட்கள் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது..
தனுசு ராசியில் சூரியனும், புதனும் இணைந்திருப்பதால், டிசம்பர் 16 ஆம் தேதியில் தனுசு ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த யோகம் 5 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு இடையே, ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்கின்றன. இதில் சூரியனும், புதனும் இணைந்திருந்தால், அது புத ஆதித்ய யோகம் என்று அழைக்கப்படும். இந்த யோகம் வெவ்வேறு வீடுகளில் சிறப்பான பலன்களைத் தருகின்றன.

அந்த வகையில் 2021 டிசம்பர் 10 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார், பின் 2021 டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். தனுசு ராசியில் சூரியனும், புதனும் இணைந்திருப்பதால், டிசம்பர் 16 ஆம் தேதியில் தனுசு ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் டிசம்பர் 29 ஆம் ததி வரை இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த யோகம் 5 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. இப்போது தனுசு ராசியில் உருவாகியுள்ள புத ஆதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எம்மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் காண்போம்.

மேஷம்
தனுசு ராசியில் உருவாகியுள்ள புத ஆதித்ய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நல்லதாக இருக்கும். இந்த யோக காலத்தில் இந்த ராசிக்காரர்களிடம் செல்வம் சேர பல வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டப்படுவார்கள் மற்றும் இக்காலத்தி பேச்சால் பலரது மனதை வெல்வார்கள். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் விரும்பிய அனைத்தையும் மிக எளிதில் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் அன்பானவரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்
தனுசு ராசியில் உருவாகி இருக்கும் புத ஆதித்ய யோகத்தால், மிதுன ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மைகளை வழங்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மேலும் இக்காலத்தில் எந்த ஒரு வேலையிலும் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கடகம்
புத ஆதித்ய யோகத்தால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும் மற்றும் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பணம் அதிகம் சேர்வதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமைகள் பாராட்டப்படும் மற்றும் பெரிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். எனவே வாழ்வில் முன்னேற இக்காலத்தை முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, புத ஆதித்ய யோகத்தால் பண விஷயம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் வேலை பாராட்டப்படும் மற்றும் வேலைத் தொடர்பாக நல்ல சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வையும் பெறலாம். இக்காலத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான முழு பலனையும் பெறுவீர்கள். வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு, இக்காலம் லாபம் கிடைக்கும் வகையில் மிகவும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். இக்காலத்தில் உங்களின் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

தனுசு
தனுசு ராசியில் உருவாகியுள்ள புத ஆதித்ய யோகத்தால், வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அதோடு அதற்கான நல்ல வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த அலுவலகத்திலேயே பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் பணிகள் அனைவராலும் சிறப்பாக பாராட்டப்படும். இந்த காலத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் பெரிய சாதனை படைப்பீர்கள் மற்றும் இது உங்கள் குடும்பத்தையும் பெருமைப்படுத்தும்.



Click it and Unblock the Notifications