புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உங்க ராசி இதில் உண்டா?

புதன் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு காலை 11.15 மணியளவில் இடம் பெயர்கிறார். மகர ராசிக்கு செல்லும் புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை காண்போம்

நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படும் புதன் புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கிறது. புதனின் பலன்கள் அது எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒருவரது ராசியில் புதன் தவறான நிலையில் இருந்தால், அது அந்த ராசிக்காரர்களை பதற்றமாக வைத்திருப்பதுடன், எந்த ஒரு விஷயத்தையும் மோசமான அணுகுமுறையுடன் கையாள வைக்கும்.

Budh Rashi Parivartan 2021 Mercury Transit in Capricorn On 29 December Effects on Zodiac Signs in Tamil

இத்தகைய புதன் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு காலை 11.15 மணியளவில் இடம் பெயர்கிறார். இப்போது மகர ராசிக்கு செல்லும் புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கடினமாக உழைப்பீர்கள். அரசாங்கம் அல்லது நிர்வாக பதவியில் பணிபுரிபவர்களுக்கு மரியாதை கிடைக்கும். கணக்காளர்கள் மற்றும் நிதித்துறை மற்றும் முதலீட்டு வங்கியில் பணிபுரிபவர்கள் கணிசமான வளர்ச்சியுடன் சாதகமான காலகட்டத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் வேலையை மாற்ற திட்டமிடுவீர்கள். வியாபாரிகள் நிதி பற்றாக்குறை அல்லது முதலீடுகள் காரணமாக சில சவால்களை சந்திக்க நேரிடும். இந்த போக்குவரத்துக் காலத்தில் உங்கள் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலுக்கு இவர்கள் உதவுவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்களுக்கு இது சிறந்த காலம். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றியுடன், நல்ல பலனும் கிடைக்கும். செல்வத்தை குவிப்பீர்கள். வழக்கறிஞர் அல்லது நீதிபதியாக இருந்தால், வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் மத நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். சில பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு நன்கு அறிவுரை வழங்குவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் குடும்பத் தொழிலில் தலைமை தாங்குபவர்களுக்கு சாதகமான காலம் இருக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல காலம். உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். அதிக குறும்புத்தனமாக இருப்பீர்கள். உற்சாகத்தில் மிகவும் உயர்ந்தவராகவும், உங்கள் பேச்சில் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். இது இக்காலத்தில் உங்கள் சக்தியை அதிகரிக்கும். சில உடல்நல பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள். இதைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை உண்ணவும். மனதை அமைதியாக வைத்திருக்க தியானம் செய்யுங்கள். உங்கள் தாயுடன் சில தவறான புரிதல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணமானவர்கள் தங்கள் துணையிடமிருந்து சிறிது விலகி இருப்பதை உணர்வார்கள். இந்த காலகட்டத்தில் துணையுடன் சில தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு சாதகமான காலம். உங்கள் நண்பரிடமோ அல்லது நண்பரின் நண்பர்கள் மூலமாகவோ உங்கள் வாழ்க்கைத் துணையைக் காணலாம். இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணத்தை திட்டமிடுவீர்கள். இக்கால கட்டத்தில் எதிர்காலத்தில் சாதகமான வாய்ப்புகளை கொண்டு வரும் சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். எந்தவொரு குறுகிய கால முதலீடுகளையும் செய்ய சிறந்த நேரம். ஏனெனில் அவை இறுதியில் நல்ல லாபத்தைத் தரும். உங்கள் பணி வெளிநாட்டு சந்தைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலத்தில் உங்கள் தாயுடன் சில மோதல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். சொத்து வாங்குவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பெரிய செலவினங்களைச் சந்திப்பதில் சிரமம் ஏற்படலாம். நீங்கள் ஏதேனும் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருந்தால், உங்கள் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். வங்கித் துறையில் இருப்பவர்களுக்குச் சாதகமான காலகட்டம் இருக்கும், ஏனெனில் உங்களின் பேச்சுத்திறன் மற்றும் நம்பகத்தன்மையால் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவீர்கள். விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இருக்கும். வேலை மாற்றம் அல்லது இடம் மாற்றத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு சாதகமான காலகட்டம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நண்பர்களுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம். இருந்தாலும், அதைப் பேசி தீர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறன்களைப் பயன்படுத்துவீர்கள். உங்கள் வேலையை விடாமுயற்சிடன் செய்வீர்கள். அரசாங்க பணிபுரிபவர்கள் அல்லது சட்டம், ஒழுங்கு தொடர்பான பணிகளை செய்பவர்களுக்கு இது சாதகமான காலம். இக்காலத்தில் சட்ட விதிகளை முறையாக பின்பற்றுவீர்கள். இது மாணவர்களுக்கு சாதகமான காலம். தங்கள் பொழுதுபோக்கு அல்லது திறமைகளை ஒரு தொழிலாக மாற்ற விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் முயற்சி செய்தால் நற்பலன் கிடைக்கும். திருமணமாகி நற்செய்திக்காக காத்திருப்பவர்களுக்கு, அந்த நல்ல செய்தி கிடைக்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் ஆசைகளை நிறைவேற்ற ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். இது உங்களின் வருமானத்தை விட செலவுகளை அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அவர்களின் உடல்நலம் சற்று பாதிக்கப்படும் என்பதால் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் சொத்தில் முதலீடு செய்ய விரும்பலாம் அல்லது மூதாதையர் சொத்துக்களிலிருந்தும் பலன்களைப் பெறலாம். சட்டத் துறையில் பணிபுரிபவர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்பத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நல்ல காலமாக இருக்கும். விடாமுயற்சியுடன் பணிபுரிந்தவர்கள் உங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுவதால், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் ஒரு சம்பள உயர்வைப் பெறலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலமானது வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் நல்ல வாய்ப்பும் கிடைக்கும். தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ, நண்பர்களுடனான உறவு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். உடன் பணிபுரிபவர்கள் உங்களை கீழே தள்ள முயற்சிக்கலாம். எதுவாயினும் உங்கள் வேலையில் கவனத்தை செலுத்துங்கள். இடமாற்றத்தை எதிர்பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நீங்கள் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் அவர்கள் இக்காலத்தில் உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால், அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நீங்கள் இக்காலத்தில் சிறந்த தகவல் தொடர்பு திறன் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வால் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். உங்கள் தாயுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் ஆரோக்கியமான பந்தத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் மூலம் தங்களின் வாழ்க்கைத் துணையைக் காண்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில்முனைவோருக்கு சாதகமான காலம் இருக்கும். நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது எதிர்காலத்தில் நிறைய நன்மைகளைத் தரும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆற்றல் மிக்கவராகவும், உங்களைச் சுற்றியிருப்பவர்களால் அதிகம் பேசப்படுபவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் பெற்றோருடன், குறிப்பாக உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். தூக்கம் அல்லது நரம்பு மண்டலம் தொடர்பான சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நல்ல புரிதலைப் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் தொழிலில் உங்கள் துணையின் உதவியைப் பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் பணமாகவும், பொருளாகவும் சில ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. குழந்தைகளால் கஷ்டங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்; அப்போதுதான் நீங்கள் ஓரளவு வெற்றி பெற முடியும். இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்; இல்லையெனில், நீங்கள் நோய்வாய்ப்படுவீர்கள். வாழ்க்கையில் பல விஷயங்களால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே தினமும் தியானம் செய்யுங்கள். இக்காலத்தில் வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். MNC அல்லது Global நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். வேலைக்காக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் அது பல பயனுள்ள முடிவுகளைத் தராது. இக்காலத்தில் உங்கள் செலவு மிக அதிகமாக இருக்கும். மேலும் சில திடீர் அல்லது எதிர்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் சட்ட அமலாக்கத்தில் அல்லது இராணுவத்தில் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் வலுவான வெற்றியைப் பெறுவீர்கள் மற்றும் நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில சொத்துக்கள் மூலம் நல்ல தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் எந்தவொரு முறைகேடு அல்லது ஊழலிலும் ஈடுபட மாட்டீர்கள். நிலம் அல்லது சொத்தில் முதலீடு செய்வதன் மூலமும் நீங்கள் லாபம் பெறலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். மேலும் உங்கள் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மாணவர்களும் தங்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இந்த காலம் உங்களுக்கு மிகவும் மங்களகரமான ஒன்றாக இருப்பதாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, December 27, 2021, 14:30 [IST]
Desktop Bottom Promotion