Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
இந்த படத்தில் உங்களுக்கு முதலில் எந்த விலங்கு தெரிகிறது என்று சொல்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான குணாதிசயத்தைக் கூறுகிறோம்.
நமது மூளையானது மர்மமான முறையில் செயல்படுகிறது. நாம் ஒன்றை பார்ப்பதற்கு கண்கள் வேண்டுமானால் உதவலாம். ஆனால் ஒன்றை நாம் பார்க்கும் போது, அதை நமக்கு காட்சிப்படுத்தும் வழியையும் விதத்தையும் நமது மூளை தான் இயக்குகிறது. ஆகவே தான் ஒருவரின் குணாதிசயம்/ஆளுமையைத் தீர்மானிக்க உளவியல் நிபுணர்கள் மூளை டீசர்கள் மற்றும் புதிர்களைப் பயன்படுத்துகின்றனர்.
எப்படி ஒருவரது குணாதிசயங்களை அவர்களின் நடத்தை, பார்க்கும் விதம், கண்கள், காது, மூக்கின் வடிவம் என்று பல விஷயங்களைக் கொண்டு அறிய முடிகிறதோ, அதேப்போல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தைக் கொண்டும் அறியலாம். இந்த படத்தை ஒரு குழு மக்களிடம் காண்பிட்டால், அது பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி காட்சிப்படுத்தப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை சிறிது நேரம் பார்த்தால், விலங்குகளை வேறுபடுத்த அறியலாம். ஆனால் முதல் பார்வையில் நமக்கு தெரியும் விலங்கு நமது குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது.

இப்போது இந்த படத்தில் உங்களுக்கு முதலில் எந்த விலங்கு தெரிகிறது என்று சொல்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான குணாதிசயத்தைக் கூறுகிறோம்.

வரிக்குதிரை தெரிந்தால்...
இந்த படத்தை பார்த்ததும் முதலில் நிறைய வரிக்குதிரைகளை நீங்கள் பார்த்தால், நீங்கள் மற்றவர்களுடன் திறம்பட பேசும் ஆற்றல் கொண்டவர். அறிக்கையின் படி, நீங்கள் வேடிக்கையான மற்றும் மிகுந்த செல்வாக்கு மிக்க நபர். எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். தனியாக இருக்கும்போது மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். நம்பமுடியாத தகவல் தொடர்பு திறன் கொண்டதால், மற்றவர்கள் உங்களைப் பின்தொடர்வார்கள். ஒரே விஷயத்தை தொடர்ந்து செய்ய பிடிக்காது. ஆகவே அடிக்கடி புதிய விஷயங்களை முயற்சிப்பீர்கள்.

சிங்கம் தெரிந்தால்...
பலருக்கும் சிங்கம் தான் முதலில் தெரிந்திருக்கும். சிங்கத்தைப் பார்க்க முடியாதவர்கள், இந்த படத்தின் மையப்பகுதியைப் பாருங்கள் தெரியும். இந்த படத்தில் சிங்கம் பின்னணியில் மறைந்துள்ளது. மையத்தில் நிற்கும் வரிக்குதிரையின் காதுகள் அதன் கண்கள், அதேசமயம் இரண்டு வரிக்குதிரைகளின் கழுத்து அதன் மூக்கின் தோற்றத்தை அளிக்கிறது. முதலில் சிங்கத்தைப் பார்ப்பவர்கள் அதிக விருப்பத்தையும், மன உறுதியைக் கொண்டிருப்பார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வகையான மக்கள் இயற்கையாகவே தலைவருக்கான குணங்களைக் கொண்டிருப்பார்கள் மற்றும் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள்.

வரிக்குதிரை மீது பறவை அமர்ந்திருப்பது தெரிந்தால்...
வரிக்குதிரை மீது சிறிய பறவை அமர்ந்திருப்பதைப் பலரும் கவனித்திருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் வரிக்குதிரை மீது பறவை அமர்ந்திருப்பதைக் கண்டால், நீங்கள் எதிலும் சரியாக இருக்க வேண்டுமென நினைப்பவராக இருப்பீர்கள். உண்மையில் இது மிகச்சிறந்த குணம். மேலும் நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு ஆராய்ந்து பின்னரே எடுப்பீர்கள்.

சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஒரே நேரத்தில் தெரிந்தால்...
உங்களுக்கு சிங்கமும் வரிக்குதிரையும் ஒரே நேரத்தில் முதலில் தெரிந்தால், நீங்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் திறம்பட செய்யும் ஆற்றல் கொண்டவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதோடு எதையும் பிரச்சனையின்றி சமநிலையில் பராமரிப்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications