Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
புரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் நீங்களும் குபேரன் தான்….
புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சகலவித சங்கடங்களில் இருந்தும் விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்தது என்ற ஐதீகம் உள்ளது. அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். பெருமாளை வணங்குபவர்கள், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விரதமிருந்து, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சாமி தரிசனம் செய்து வழிபடுவர்.

வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆகவேண்டும். அப்படி, அதுபோன்ற தருணங்களில் நமக்கு உறுதுணையாகவும், நம்பிக்கையாகவும் உடனிருப்பது கடவுள் ஒருவரே. அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதற்கு ஏராளமான முறைகள் கூறப்படுகின்றன.
அந்த வகையில், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சகலவித சங்கடங்களில் இருந்தும் விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் நாம் இப்போது, பெருமாளுக்கு துதிக்கப்பட கூடிய பெருமாள் காயத்ரி மந்திரம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்...

பெருமாள் காயத்ரி மந்திரம்:
ஓம் நிரஞ்சனாய வித்மஹே!
நிராபாஸாய தீமஹி!
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!
பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக கருதப்படுவது பணப்பிரச்சனை தான். அத்தகைய பணப்பிரச்சனையில் இருந்து விடுபட இந்த மந்திரம் பெரிதும் உதவக்கூடியது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஆண்டியாக இருப்பவர் கூட குபேரனாக மாறிவிடலாம் என்று ஆகம விதி கூறிகிறது.

மந்திரத்தை உச்சரிக்கும் முறை:
* புரட்டாசி மாதத்தில் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தப்பத்தமாக சூரிய நமஸ்காரம் செய்யவும்.
* பின்னர். பூஜை அறையில் விளக்கேற்றி, பெருமாள காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
* நேரமிருப்பவர்கள் 108 முறை உச்சரிக்கலாம். நேரமில்லாதவர்கள், இந்த பெருமாள் காயத்ரி மந்திரத்தை 11 முறையாவது உச்சரிக்க வேண்டும்.
* ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
* நம் வாழ்வில் எத்தகைய துன்பத்தை சந்திக்க நேர்ந்தாலும், கடவுளின் துணை இருந்தால் அதிலிருந்து சுலபமா வெளிவர முடியும்.
* அனைத்து வித சங்கடங்களில் இருந்தும் விடுபட இந்த பெருமாள் காயத்ரி மந்திரம் ஒன்றே போதுமானது.
* அவசர வேலையாக வெளியில் செல்லுபவர்கள், இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மன அமைதியும், செய்யும் வேலையில் வெற்றியும் கிடைப்பது உறுதி.
* பெரும் செல்வந்தராக வேண்டுமென்ற எண்ணத்தோடு மட்டும் இந்த மந்திரத்தை உச்சரிக்காமல், பெருமாளின் ஆசி கிடைக்க வேண்டுமென்று நினைத்து மனதார பிரார்த்தியுங்கள்.

எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்?
* தொழில் அல்லது வியாபாரத்தில் உள்ள பண வரவு பிரச்சனை விலக இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
* உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தடங்கல் இருந்தால் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
* வாழ்வில் எப்போதுமே கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
* ஜாதகத்தில் கிரக நிலைகளின் அமைப்பு சரியில்லாதவர்களும் இதனை சொல்லலாம்.
* மனதில் முழு பக்தியுடன் யார் இந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அவர்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

குபேரனே உச்சரித்த மந்திரம் இது
பெரும் செல்வந்தரான குபேரனே ஒருமுறை அனைத்து செல்வங்களையும் இழக்கும் நிலை உருவானதாம். அப்போது, தன்னை காப்பாற்றி வேண்டி, குபேரனே இந்த பெருமாள் காயத்ரி மந்திரத்தை தான் தினந்தோறும் உச்சரித்து வந்தாராம். அவர் இந்த மந்திரத்தை உச்சரித்ததன் பலனால், அவர் இழக்க இருந்தா செல்வங்கள் அனைத்தும் அவருக்கே திரும்ப கிடைத்தனவாம். எனவே, செல்வத்தை இழக்கும் சூழலில் உள்ள ஒருவர், இந்த பெருமாள் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து பலன்களையும் பெறுவர் என்ற ஐதீகம் நடைமுறையில் உள்ளது.



Click it and Unblock the Notifications
