Latest Updates
-
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா?
ஆகஸ்ட் மாதம் 4 முக்கிய கிரகங்களின் இடமாற்றத்தால், இந்த 4 ராசிக்கு அட்டகாசமா இருக்கப் போகுது...
கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கிறது. கஸ்ட் மாதத்தில் 4 கிரகங்கள் இடம் மாறவிருக்கின்றன. இது 12 ராசிகளிலும் வெவ்வேறு முடிவுகளைக் கொடுக்கும்.
கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கிறது. ஒருவரின் ஜாதகம் மற்றும் அதில் உள்ள கிரக நிலைகளை கணக்கிடுவதன் மூலம், இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். ஆகஸ்ட் மாதத்தில் 4 கிரகங்கள் இடம் மாறவிருக்கின்றன. இது 12 ராசிகளிலும் வெவ்வேறு முடிவுகளைக் கொடுக்கும். சிலருக்கு அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். இன்னும் சிலர் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் 4 கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றுவதால், 4 ராசிகள் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இக்கட்டுரையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்த கிரகங்கள் எந்த ராசிக்கு எப்போது இடம் மாறுகின்றன மற்றும் எந்த ராசிக்காரர்கள் அதிக பலனைப் பெற போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

புதன் பெயர்ச்சி
ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதத்தில் 4 கிரகங்களின் நிலை மாறவுள்ளது. அதில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் கிரக பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இந்த நாளில் புதன் சந்திரனின் கடக ராசியில் இருந்து சூரியனின் சிம்ம ராசிக்கு இடம் மாறுகிறது. இங்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை புதன் இருக்கும். பின்னர் கன்னி ராசிக்கு இடம் மாறும்.

சுக்கிர பெயர்ச்சி
இரண்டாவதாக, ஆகஸ்ட் 11 ஆம் தேதி கிரக மாற்றம் நிகழ்கிறது. இந்நாளில் சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ராசியில் 25 நாட்கள் பயணித்து, பின்னர் செப்டம்பர் 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம் மாறுவார்.

சூரிய பெயர்ச்சி
மூன்றாவதாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த ராசியில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்கு இடம் மாறுவார்.

புதன் பெயர்ச்சி
நான்காவதாக புதன் பெயர்ச்சியாகும். புதனின் இடமாற்ற காலம் சுமார் 14 நாட்கள் ஆகும். இத்தகைய நிலையில், புதன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி இடம் மாறுகிறார். இந்த புதனின் மாற்றம் உங்களுக்கு பல வழிகளில் நன்மையளிக்கும். இந்த கன்னி ராசியில் புதன் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை இருப்பார்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்த 4 கிரகங்களின் இட மாற்றத்தால் 4 ராசிக்காரர்கள் மிகவும் நன்மை அடைவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
4 கிரகங்களின் இட மாற்றத்தினால், மேஷ ராசிக்காரர்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பார்கள். அலுவலகம் அல்லது வீடு எதுவாயினும், உங்களின் வேலை அனைத்து இடங்களிலும் பாராட்டப்படும். இக்காலத்தில் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். ஆனால் அதற்கு ஏற்ப நல்ல பலனையும் பெறுவீர்கள். இக்காலத்தில் பல புதிய வெற்றிகளை அடைவீர்கள். இயந்திர தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், கைவினை கலைஞர்களுக்கும் இந்த காலம் மிகவும் உகந்ததாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கும் 4 கிரகங்களின் இடமாற்றம் பயனளிக்கும். பணியிடத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். வேலையில் பதவு உயர்வுக்கான வாய்ப்புள்ளது. உங்களின் எதிரிகளை இக்காலத்தில் எளிதில் தோற்கடிப்பீர்கள். உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆனால் இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் 4 கிரகங்களின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். இந்த மாதத்தில் உங்களின் ஆற்றலும், நம்பிக்கையும் அதிகரித்து இருக்கும். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் இக்காலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் நீங்கள் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டீர்கள். வணிகர்களுக்கு நேரம் முக்கியமாகும்.

துலாம்
ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகள் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். உழைக்கும் மக்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும். இதனால் இந்த மாதத்தில் வருவாய் சிறப்பாக இருக்கும். கூடுதலாக, கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியமான காலம். இக்காலத்தில் உங்களின் திறமை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். அரசு பணிபுரிபவர்கள் சலுகைகளைப் பெற வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
