For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணக்கஷ்டங்களால் மனக்கஷ்டமா? இந்த பரிகாரங்களை பண்ணுங்க கை மேல் பலன் கிடைக்கும்...

|

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடி அலைபவர்கள் பலர் காரணம் எத்தனையோ பிரச்சினைகளால் சிக்கி மன நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். தீராத நோய்கள், கடன் பிரச்சினைகள், வம்பு வழக்குகள் போன்றவைகளால் மன கஷ்டத்திற்கு ஆளாகின்றனர். அதே போல அவமானங்கள், அசிங்கங்கள், குடும்ப பிரச்சினைகளால் மன கஷ்டத்திற்கு ஆளாகின்றனர். பில்லி, சூனியம், ஏவல்களாலும் மன நிம்மதி இழந்து நோய் வாய்படுகின்றனர். இதற்கு சில பரிகாரங்களை செய்தாலே போதும் மன நிம்மதி தானாக தேடி வரும்.

Astrological Remedies for Family Problems

கடன் பிரச்சினை இன்றைக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். ரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும். செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடலாம். செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்வினை கோளாறு நீங்கும்

செய்வினை கோளாறு நீங்கும்

சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும். ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் வைக்கலாம். ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது. விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

லட்சுமி கடாட்சம் வரும்

லட்சுமி கடாட்சம் வரும்

சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும். பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

பணவரவுக்கு பரிகாரம்

பணவரவுக்கு பரிகாரம்

செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலைத் தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.

குலதெய்வ பிரார்த்தனை

குலதெய்வ பிரார்த்தனை

வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும். மேலும், மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்கச் செல்வம் சேரும். தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அமாவாசையில் நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.

குபேர கால பூஜை

குபேர கால பூஜை

வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி வரை உள்ள நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும். தாமரை திரி போட்டுக் குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும். வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி தாயார் உள்ள படத்தை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும். சுத்தமான நீரில் வாசனைத் திரவியம் கலந்து இரு வேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் சேரும்.

ராகு காலத்தில் விளக்கு

ராகு காலத்தில் விளக்கு

துர்க்கைக்கு இராகு காலத்தில் விளக்கேற்றுவது நல்லது. இராகு காலத்தில் கடைசி அரை மணி நேரமான அமிர்த கடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.

திருமணத்திற்கு பரிகாரம்

திருமணத்திற்கு பரிகாரம்

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி ஒற்றுமை

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூக்கள் போட்டு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் சகா சண்டை போடும் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

புத்திரபாக்கியம்

புத்திரபாக்கியம்

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர புத்திரபாக்கியம் கிடைக்கும்.

சர்ப்ப தோஷம் நீங்க பரிகாரம்

சர்ப்ப தோஷம் நீங்க பரிகாரம்

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும். வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

குல தெய்வ சாபம் நீங்கும்

குல தெய்வ சாபம் நீங்கும்

வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும். எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

சனி தோஷம் நீங்கும்

சனி தோஷம் நீங்கும்

ஜாதகப்படி சனிபகவானின்பாதிப்பு குறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றவும் துன்பங்கள் தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astrological Remedies for Family Problems

Now you can end up your family problems with the help of astrological remedies,Sprinkle of holy water daily for 21 days in house is very powerful remedy to save your house the from bad energies.
Story first published: Tuesday, November 5, 2019, 14:05 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more