Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்....
பொதுவாக டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு நல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள். தங்களிடம் உள்ள அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு முடிந்த வகையில் உதவி செய்ய முயற்சி செய்வார்கள். முக்கியமாக நேர்மையானவர்களாக இருப்பர்.
ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது. அதோடு வருடத்தின் கடைசி மாதம் என்பதால், புதிய ஆண்டை வரவேற்கும் ஆர்வத்தில் இருப்போம். சொல்லப்போனால் இந்த மாதம் அனைவருக்கும் பிடித்த மாதம் என்றும் சொல்லலாம்.
ஆனால் இத்தகைய மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமா? பொதுவாக டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு நல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள். தங்களிடம் உள்ள அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு முடிந்த வகையில் உதவி செய்ய முயற்சி செய்வார்கள். முக்கியமாக நேர்மையானவர்களாக இருப்பர். அதே சமயம் விளையாட்டுத்தனமாகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, எந்த ஒரு சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பார்கள்.
இப்போது டிசம்பர் மாதத்தில் பிறந்த நான்கு வகையான மக்களைப் பற்றிக் காண்போம். இதில் நீங்கள் எந்த வகையினர் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் வகை
டிசம்பர் 1 முதல் 8 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் முதல் வகையினர். இந்த வகை மக்கள் எதையும் எதிர்த்து தனித்து வாழக்கூடியவர்கள். நிலைத்தன்மையும், ஸ்திரத்தன்மையும் அவர்களின் வாழ்க்கையின் தூண்களாகும். இதைப் பார்க்கும் பலருக்கு இவர்கள் திமிர்பிடித்தவர்களாக காட்சியளிக்கலாம். ஆனால் உண்மையில், அவர்கள் நம்பமுடியாத அளவில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

தொடர்ச்சி...
இந்த வகை மக்கள் வலுவானவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய மனம் வைத்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக அதை செய்துவிடுவார்கள். கருணையுள்ளம் கொண்டவர்கள் மற்றும் மன்னிக்கக்கூடியவர்கள் மற்றும் அதை மறந்தும் விடுவார்கள். இந்த குணங்கள் தான் இவர்களை சிறந்தவர்களாக காட்டுகின்றன. மேலும் இவர்கள் தைரியமானவர்கள், நல்ல பேச்சாளர்களும் கூட.

இரண்டாவது வகை
டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பிறந்தவர்கள் இரண்டாவது வகையினர். உங்களுக்கு பேசவோ அல்லது ஆலோசிக்கவோ யாராவது தேவையென்று நினைத்தால், இந்த வகை நபர்கள் சரியானவர்களாக இருப்பர். இவர்கள் தங்களின் உணர்ச்சியை சமநிலையில் பராமரிக்கக்கூடியவர்கள். வலிமையான மனிதர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கை தோன்றும் எந்த கஷ்டங்களையும், தடைகளையும் எதிர்த்து வாழக்கூடியவர்கள்.

தொடர்ச்சி...
இந்த வகை மக்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி காண்பார்கள். இவர்கள் எதை செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலையையும் அழகாக சமாளித்து வாழக்கூடியவர்கள். இவர்களின் தொழில் வாழ்க்கை எப்போதும் வெற்றிகரமானதாகவே இருக்கும். இவர்களுக்கு யானைப் போன்ற நினைவாற்றலைக் கொண்டவர்கள். எந்த விஷயத்தைப் பற்றியும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றும் நல்ல திறமையானவர்கள். இவர்கள் தங்களின் இலக்கை அடைவதிலும், கனவுகளை நிறைவேற்றுவதிலும், எப்போதும் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

மூன்றாவது வகை
டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான மக்கள் மூன்றாம் வகையினர். இவர்கள் திருமண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. ஆனால் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை நன்கு தெரிந்தவர்கள். இவர்கள் அரிதாகவே நோய்வாய்ப்படுவார்கள். மிகவும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் என்பதால், நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்கள் அனைத்திலும் அமைதியைத் தேடுவார்கள். அளவுக்கு அதிகமாக சிந்திக்கக்கூடியவர்கள்.

தொடர்ச்சி....
இந்த நாட்களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமான நட்சத்திரத்தில் பிறந்தவர்களாவர். இதனால் உலகையே ஆளும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு ஃபேஷன் மீது விருப்பம் இருக்கும். இவர்கள் எப்போதும் யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து தன் சொந்த காலில் வாழ நினைப்பார்கள். எல்லாவற்றிலும் சுதந்திரத்தை விரும்புவார்கள். இவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் ஒவ்வொரு வேலையையும் விரும்பி செய்வார்கள்.

நான்காவது வகை
இறுதியாக டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் பிறந்தவர்கள் நான்காம் வகையினர் ஆவர். டிசம்பர் மாதத்தின் இந்த நாட்களில் பிறந்தவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் மற்றும் மிகவும் இனிமையானவர்கள். இவர்கள் தங்களின் நண்பர்களை மிகவும் உன்னிப்பாக தேர்ந்தெடுப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டவர்கள்.

தொடர்ச்சி...
டிசம்பர் மாதத்தின் கடையில் பிறந்தவர்களுக்கு பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். நட்பு என்று வரும் போது, இவர்கள் தன் நண்பர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் கல்வி விவகாரங்கள் மற்றும் திருமண விஷயங்களில் அதிர்ஷ்டசாலிகள்.



Click it and Unblock the Notifications