Latest Updates
-
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம்
எந்தெந்த ராசிக்காரர்கள் பணத்தை ஊதாரித்தனமா செலவழிப்பார்கள்? தெரிஞ்சா வசதியா இருக்கும்ல
எந்தெந்த ராசிக்காரர்கள் பணத்தை தண்ணி மாதிரி செலவழிப்பார்கள் என்பதை பற்றி இங்கே விளக்கமாகக் கொடுத்திருக்கிறோம். அது தெரிஞ்சா கொஞ்சம் ஈஸியா தான இருக்கும். அந்த தொகுப்பைப் பற்றி இங்கே காண்போம்.
பணத்தை சேமிப்பது மிகவும் முக்கியம் தான். ஆனால் சில பேர்கள் தங்கள் சந்தோஷத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவழிப்பார்களாம். இப்படி பணத்தை செலவழிப்பதற்கும் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிடம். ஆமாங்க இந்த ராசிக்காரர்களுக்கு ஷாப்பிங் என்றால் போதும் உடனே கிளம்பிடுவாங்களாம்.

பணத்தை செலவழிப்பது தான் இவர்களுக்கு சந்தோஷம் என்று நம்புவார்கள். இந்த ராசிக்காரர்களிடம் அருணாசலம் படம் மாதிரி எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் செலவழிக்கும் பந்தயத்திற்கு தயாராக இருப்பார்களாம். அப்படிப்பட்ட 6 ராசிக்காரர்களைப் பற்றி தான் நாம் இங்கே காண போகிறோம்.

மேஷம்
இந்த ராசிக்காரர்கள் உற்சாகமாக இருக்கிறதுக்கு என்றே பிறந்தவர்கள். பணத்தை சரியான வழியில் செலவழிப்பதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு புதுசு புதுசா ஆடைகளை பார்த்து விட்டால் போதும் கொஞ்சம் கூட தாமதிக்க மாட்டார்கள். வாங்கிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். நிறைய வரவு செலவு திட்டங்கள் இருந்தாலும் ஷாப்பிங் செய்வதில் இவர்கள் சிறு குழந்தைகள் தான். எப்படியாவது அடம் பிடித்தாவது வாங்கி விடுவார்கள்.

சிம்மம்
இவர்களுக்கு கையில் பணம் இல்லாமல் இருக்கவே முடியாது. இவர்களை சந்தோஷப்படுத்த கையில் பணத்தை கொடுத்தாலே போதும் குஷியாகி விடுவார்கள். இவர்களுக்கும் ஷாப்பிங் தான் பிடிச்ச ஒன்று. அதிலும் குறிப்பாக ஆடைகளை வாங்கத்தான் அதிகமாக விருப்பப்படுவார்கள். அதிலும் பிராண்ட் போட்ட சட்டை அணியாமல் வெளியே வர மாட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்களே.

தனுசு
இந்த ராசிக்காரர்களும் தங்கள் பட்ஜெட்டை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் விலையுயர்ந்த ஆடைகள், புத்தகம், விலையுயர்ந்த ஹோட்டல்கள், விமானப் பயணம் போன்றவற்றிற்காக செலவழிப்பார்களாம். இவர்களுக்கு சாகசங்கள் என்றால் ரெம்ப பிடிக்குமாம். அதற்காக நிறைய செலவும் செய்வார்கள். இவர்களுக்கு பணம் என்பது ஒரு பொருட்டு அல்ல. வாங்கி சந்தோஷம் அடையவே விரும்புவார்கள்.

மிதுனம்
இவர்களுக்கு ஆடம்பரம், வேடிக்கை என்றால் ரெம்ப பிடிக்குமாம். அதற்காகவே தனியாக பணத்தை ஒதுக்கி விடுவார்களாம். இவர்கள் சில விஷயத்திற்காக மட்டுமே பணத்தை சேமித்து வைப்பார்கள். இல்லையென்றால் சம்பாதிக்க செலவழிக்க என்றே இருப்பார்கள்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் வேகமாக பணத்தை செலவழிக்கக் கூடியவர்கள். அதிலும் முதலீடுகளில் அதிகமாக பணத்தை செலவிடுவார்கள். புதிய தொழில்நுட்ப முதலீடுகள் என்றால் இவர்களுக்கு ரெம்ப பிடிக்குமாம். இந்த மாதிரியான எண்ணம் தோன்றினாலே போதும் பணத்தை எடுத்து செலவழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களும் பணத்தை தண்ணியாக செலவழிக்க கூடியவர்கள். இவர்களிடம் உதவி என்று வந்தவர்களுக்கு ஒருக்காலும் இல்லை என்று சொல்லமாட்டார்களாம். நண்பர்கள், உறவினர்கள் ஏன் அந்நியர்களுக்கு கூட தாராளமாக பணத்தை வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருப்பார்கள். தங்கள் கையில் பணம் இல்லையென்றாலும் முழுவதையும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்களாம்.



Click it and Unblock the Notifications