Latest Updates
-
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு காதலை விட எப்பொழுதும் சுயவெற்றியே முக்கியமாம்...பார்த்து பழகுங்கள்..
வாழ்க்கையில் காதல் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியும், அவர்களின் எதிர்காலமும் முக்கியம் ஆகும்.
வாழ்க்கையில் காதல் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியும், அவர்களின் எதிர்காலமும் முக்கியம் ஆகும். ஏனெனில் காதல் மட்டுமே ஒருவருக்கு வாழ்க்கையில் திருப்தியை கொடுத்துவிடாது. ஆனால் இது பெரும்பாலானோருக்கு புரிவதில்லை, அப்படி புரியும்போது அவர்களிடம் உழைக்க நேரமோ அல்லது உடலில் ஆற்றலோ இருக்காது.

சிலரோ இதற்கு எதிர்மறையாக சிறுவயது முதலே காதல் வாழ்க்கையை காட்டிலும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள்.வாழ்க்கையில் வெற்றி பெற்றால் காதல் தானாக தன் பின்னால் ஓடிவரும் என்று இவர்கள் நினைப்பார்கள். இந்த குணம் இவர்களுக்கு பிறவியிலேயே வந்திருக்கலாம். அதற்கு இவர்கள் பிறந்த ராசி கூட காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகள் காதலை விட வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு போட்டி போடுவது என்பது இரத்தத்திலேயே இருக்கும் குணமாகும். பணியிடங்களில் இவர்கள் எப்பொழுதும் போட்டி மனம்பான்மையுடன்தான் இருப்பார்கள். வெற்றிதான் இவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாமே. சிறுசிறு வெற்றிகள் இவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சி படுத்தாது. உச்ச வெற்றி மட்டுமே இவர்களுக்கு திருப்தியை தரும். ஒருவேளை நீங்கள் மேஷ ராசிக்கார்களை விரும்புபவராக இருந்தால் அவர்களின் இந்த குணத்தை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ரிஷபம்
கம்பீரம் மற்றும் நம்பிக்கையே இவர்களின் அடையாளமாகும். அவர்கள் எப்பொழுதும் தங்களின் இருப்பை தக்கவைத்து கொள்வார்கள் அதற்கு அவர்களின் வேலை ஒன்றும் விதிவிலக்கல்ல. அவர்களின் வசீகரம் எப்பொழுதும் மேலதிகாரத்தில் இருப்பவர்களை கவரும், இதனால் அவர்களுக்கு சாதகமான சூழல்கள் எப்போதும் நிறைந்திருக்கும். இவர்கள் காதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் வெற்றிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காதலுக்கு இவர்களிடம் இருக்காது.

சிம்மம்
மற்ற அனைத்து ராசிகளை காட்டிலும் சிம்ம ராசிக்காரகளுக்கு மேலாதிக்கம் மிகவும் அதிகமாக இருக்கும், சொல்லப்போனால் இது அவர்களின் வெற்றிக்கு சாதகமானதாகவே இருக்கும். தங்களுக்கு மற்றவர்கள் கட்டளையிடும் நிலையில் இருப்பதை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். பணியிடத்தில் எந்த தந்திரத்தை பயன்படுத்தி உச்சத்திற்கு வரவேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். அதே தந்திரத்தை இவர்கள் காதலில் வெற்றிபெறவும் பயன்படுத்துவார்கள். ஆனால் காதலை? வெற்றியா? என்றால் இவர்களின் தலை வெற்றியின் பக்கமே சாயும்.

கன்னி
மற்ற ராசிக்காரர்களை போல இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஆக்ரோஷமாக செயல்பட மாட்டார்கள். மாறாக இவர்கள் எப்பொழுதும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களின் உழைப்பே இவர்களுக்கான வெற்றியை பெற்றுத்தரும். அவர்களின் கடின உழைப்புதான் அவர்களை காதல் உறவுகளில் இருந்து எப்போதும் விலகியே வைத்திருக்கும், அவர்களே விரும்பினாலும் அவர்களின் சூழல் அவர்களை காதலில் ஈடுபட விடாது. அவர்களின் கவனம் எப்பொழுதும் வேலையிலேயே இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் அர்ஜுனன் போல தன்னுடைய இலக்கை நோக்கியே பயணிப்பார்கள். இதற்காக அவர்கள் உண்மையான காதலை கூட தவிர்க்க தயங்க மாட்டார்கள். இருப்பினும் தங்கள் காதலை தக்க வைத்து கொள்ள எப்பொழுதும் பொய் சத்தியங்களை செய்து கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெற்றி இவர்களுக்கு காதலை விட அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்.

கும்பம்
இவர்கள் தங்களுடைய அறிவாற்றல் மற்றும் கடின உழைப்பை எப்பொழுதும் தங்களின் முன்னேற்றத்திற்காகவும், பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துவார்கள். மற்றவர்களுடன் பழகுவதிலும், உறவுகளை பராமரிப்பதிலும் இவர்கள் அற்புதமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். தன்னுடைய முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் சுயநலமாக இருக்க இவர்கள் தயங்க மாட்டார்கள். எனவே வாய்ப்புகள் வரும்போது முன்னேற அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள எதையும் செய்வார்கள்.



Click it and Unblock the Notifications