Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த மூனு ராசிக்காரங்களும் இந்த பரிகாரத்தை செஞ்சே ஆகணுமாம்... இல்லாட்டி நஷ்டம்தான்
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான நேரம் கைகூடி வரும். தொழிலில் பங்குதாரர்களுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டு பெரும் லாபத்தை அடைவீர்கள். சுப காரியங்களுக்காக முயுற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கி அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தேடுகின்றவர்களுக்கு தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்களும் வாய்ப்புகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் உண்டாகும்.

ரிஷபம்
தொழில் சம்பந்தமான முதலீடுகளில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நன்மையை உண்டாக்கும். வீட்டில் உள்ளவர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் சென்றீர்கள் என்றால் தேவையில்லாத பிரச்சினைகளை உங்களால் தவிர்க்க இயலும். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் போது முக்கிய ஆவணங்கள் கொண்டு செல்வதை தவிர்ப்பது நல்லது. கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டுமென்றால் கவனமாக இருப்பது நல்லது. எந்தவொரு காரியமாக இருந்தாலும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் உண்டாகும்.

மிதுனம்
மனதுக்குள்ளே நினைத்து வைத்திருந்த காரியங்கள் அத்னையும் நிறைவேறும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். கண் சம்பந்தப்ப்ட்ட சின்ன சின்ன பிரச்னைகள் வந்துபோகும். வீட்டினுடைய பொருளாதாரம் கிடுகிடுவென உயரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சேர்ந்து பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

கடகம்
தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சி பெருகும். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் உங்களுககு சாதகமாகவே அமையும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிக்கான வாய்ப்புகள் வந்து போகும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விவாதங்களில் உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் அமையும்.

சிம்மம்
மனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்கள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பணிகளில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு பெற்றோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு தன லாபங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

கன்னி
உங்களுடைய உடன் பிறப்புகளினால் உங்களுக்கு ஆதரவற்ற சூழல்களே உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். புதிய ஆட்கள் யாரிடமும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது சற்று கவனமாக இருங்கள். கால்நடைகளின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உடல் சோர்வு அதிகரிக்கும்.

துலாம்
வழக்கத்தை விடவும் உங்களுடைய செயல்பாடுகிளல் வேகம் கொஞ்சம் அதிகாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். புதிய பொருள்களை வீட்டுக்காக வாங்கிச் சேர்ப்பீர்கள். மாணர்களுக்கு கல்வியில் சிறிது கவனம் தேவை. எதையும் தைரியத்துடன் கையாண்டு புதிய முடிவுகளைச் சிறப்பாக எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய புத்திக் கூர்மையினால் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் கலந்து கொள்ளும் போட்டிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். நீங்களே எதிர்பார்க்காத தன அதிர்ஷ்டத்தினால் தனவரவு உண்டாகும். புதிய நபர்களுடன் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் சுபச் செய்திகள் உண்டாகும். தாய்மாமனுடைய உறவுகளில் ஏற்பட்ட பிரச்னைகளை நீங்கி, உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் அமையும்

தனுசு
குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவுகள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் வாக்குவாதங்களின் மூலமாகவும் லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தப்பட்ட முதலீட்டில், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.

மகரம்
உயரம் அதிகமான இடங்களில் பணிபுரிகின்றவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நட்பும் நெருக்கமும் உங்களுககுக் கிடைக்கும். உங்களுடைய நற்செயல்களால் உங்களுக்குப் புகழ் உண்டாகும். இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு சுப செலவுகள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளுக்கு உதவி செய்துமனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல்கள் உருவாகும். கலைஞர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்
புதிய புதிய நுட்பமான வித்தைகளைக் கற்றுக் கொள்வீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். நிர்வாகத் திறமையினால் உங்களுக்கு இந்த வாரம் மேன்மை உண்டாகும். திருமண வரன்கள் அமையும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் சுப செலவுகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications