Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...
தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்டதை எடுக்க முயற்சி செய்தபோது, தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் பற்றி பார்க்கலாம். அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி இங்கு பார்க்கப் போகிறோம்.
சின்னக் குழந்தைகள் தான் எதிர்பாராத விதமாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டு கஷ்டப்படுத்தும். ஆனால் சில பெரியவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

சாப்பிடும் போது விபத்தாக எதையாவது விழுங்கி விடுவது பெரியவர்களுக்கு கூட நேருகிறது. அப்படித்தான் இங்கே ஒரு பொண்ணு ஸ்பூனை விழுங்கி உள்ளார். மீன் முள்ளை அகற்ற போய் இப்போ அறுவை சிகிச்சை வரை அவரை தள்ளி விட்டது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மீன் முள்ளை அகற்ற
மீன் சாப்பிடும் போது தொண்டையில் முள் குத்தியதால் அதை அகற்ற 5 அங்குல ஸ்டீல் ஸ்பூனை பயன்படுத்தி உள்ளார்.

ஸ்பூன் தங்கி 4 நாட்கள்
அப்பொழுது எதிர்பாராத விதமாக ஸ்பூனை விழுங்கி விட்டார். விழுங்கப்பட்டு 4 நாட்கள் ஆகியும் எந்த வித வலியும் அசெளகரியமும் அவருக்கு தெரியவில்லையாம். எனவே அதை அவர் கண்டுக்காமல் விட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை
4 நாட்களுக்கு பிறகே இவர் மருத்துவரை சந்தித்து உள்ளார். அப்பொழுது தான் லேசாக வலிக்க ஆரம்பித்து உள்ளது. மருத்துவர் அவருக்கு எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி போன்ற முறைகளைக் பயன்படுத்தி ஸ்பூனின் நிலையை கண்டறிந்துள்ளனர். சிறுகுடலில் சிக்கியுள்ள அந்த ஸ்பூனை அகற்ற டாக்டர்கள் படாத பாடுபட்டுள்ளனர்.

கடுமையான அறுவை சிகிச்சை
அந்த ஸ்பூன் சரியான நிலையில் இல்லாமல் வேற இருந்துள்ளது . எனவே அதை அகற்ற மருத்துவர்களுக்கு பெரும்பாடு ஆகிவிட்டது. முதலில் ஸ்பூனை சரியான நிலையில் அட்ஜெஸ்ட் செய்து பிறகு வெளியே எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறியது என்னவென்றால் இது மெட்டல் ஸ்பூன் என்பதால் குடலில் வீக்கமும், கீறல்களும் ஏற்பட்டுள்ளது.

இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்மணி பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று கூறியுள்ளனர்.
என்ன மக்களே இனியாவது பல் குத்தும் போது குண்டூசி, ஊக்கு பயன்படுத்தும் போது கவனமாக இருங்க. பிறகு நம்மளுக்கும் இந்த நிலை ஏற்படலாம். சிறிய தவறு பெரிய பிரச்சினைக்கு கொண்டு போய் விட்டுடலாம். எதிலும் கவனம் தேவை.



Click it and Unblock the Notifications