Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
ஆஞ்சநேயரின் பிறப்பிற்கும் இராமருக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா?
சிவன் ஏன் ஆஞ்சநேயராய் அவதாரமெடுத்தார், அவரின் பிறப்பிற்கு பின்னால் இருந்த காரணங்களும், ரகசியங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை ஆகும்.
இந்தியாவின் மாபெரும் இதிகாசமான இராமயணத்தில் இராமருக்கு அடுத்து அனைவரின் நினைவிலும் முதலில் வருவது ஆஞ்சநேயர்தான். ஏனெனில் இராமாயணத்தில் இவர் நிகழ்த்திய சாகசங்களும், தன் வால் நெருப்பை கொண்டு பாதி இலங்கையை எரித்தததும், இராமரின் மேல் இவர் கொண்டிருந்த தன்னலமற்ற பக்தியும் இவரை அனைவர்க்கும் பிடித்த கடவுளாக மாற்றியது.

இராமதூதரான ஆஞ்சநேயர் சிவனின் அவதாரம் என நாம் நன்கு அறிவோம், ஆனால் சிவன் ஏன் ஆஞ்சநேயராய் அவதாரமெடுத்தார், அவரின் பிறப்பிற்கு பின்னால் இருந்த காரணங்களும், ரகசியங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை ஆகும். இந்த பதிவில் ஆஞ்சநேயரின் பிறப்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியங்களையும், ஆஞ்சநேயரின் பிறப்பிற்கும், இராமருக்கு உள்ள தொடர்பு என்னவென்பதையும் பார்க்கலாம்.

ஆஞ்சநேயரின் தந்தை மற்றும் தாய்
ஆஞ்சநேயரின் தாயாரின் பெயர் அஞ்சனை என்பதாகும். அனுமனின் தந்தை வானர வேந்தன் கேசரி ஆவார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு அஞ்சனை மைந்தன் மற்றும் கேசரி நந்தன் என்ற புனைபெயர்கள் வந்தது. அஞ்சனை மைந்தன் என்பது ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த பெயராகும்.

அஞ்சனை
அனுமனின் தாயான அஞ்சனை உண்மையில் தேவலோகத்தை சேர்ந்த ஒரு தேவதை ஆவார். தேவர்களின் குருவாக இருந்த விரகஸ்பதிக்கு பஞ்சகஸ்தலா என்னும் உதவியாளர் ஒருவர் இருந்தார். அஞ்சனை செய்த தவறுக்கு இவர் அளித்த சாபத்தினால் அவர் பூமியில் பெண் குரங்காக பிறந்தார்.

சாப விமோட்சனம்
சாபம் அளித்த பஞ்சகஸ்தலாவே அதற்கான விமோட்சனத்தையும் அளித்தார். ஆனால் அது மிகவும் கடுமையான வழியாக இருந்தது. அந்த வழி என்னவெனில் அவர் சிவபெருமானின் அவதாரம் ஒன்றிற்கு பிறப்பு கொடுத்தால் மட்டுமே சாபம் தீர்ந்து அவர் தேவலோகம் திரும்ப முடியும் என்பதாகும்.

சிவபெருமானை நோக்கி தவம்
அஞ்சனையாக பிறந்த அவர் தன் சாபம் தீர வேண்டி சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தார். அவரின் கடுமையான தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவர் அஞ்சனை முன் தோன்றி அவர் விரும்பும் வரம் என்னவென்று கேட்டார். அதற்கு அஞ்சனை தாங்கள் என் மகனாக பிறக்க வேண்டும் என்று அஞ்சனை வினவ அந்த வரத்தை வணங்கினார் சிவபெருமான்.

இராமரின் தொடர்பு
மற்றொரு புறம் அயோத்தி அரசர் தசரதன் மகனுக்காக வேள்வி வளர்க்க தொடங்கினார். அப்போது அந்த வேள்வியில் இருந்து அக்னிதேவன் தசரதருக்கு ஒரு கிண்ணத்தில் சுவையான ஒரு அற்புத இனிப்பை வழங்கினார். அதனை அவர்களின் மனைவிகளுக்கு பங்கிட்டு கொடுக்கும்படி கூறினார். அப்போது அந்த திவ்ய பிரசாதத்தில் ஒரு பகுதியை கழுகு ஒன்று தூக்கி சென்றது.

சுமித்திரையின் பங்கு
கழுகு தூக்கி சென்றது தசரதர் மனைவி சுமித்திரையின் பங்கு ஆகும். பிரசாதத்தை சாப்பிடும் முன் அவர் குளிக்கச்சென்றபோது அதனை எடுத்து சென்ற கழுகு அந்த திவ்ய பிரசாதத்தை தியனத்தில் ஈடுபட்டிருந்த அஞ்சனையிடம் சேர்த்தது.

வாயுபகவான்
கழுகின் வடிவிலிருந்து வாயுபகவான் அந்த திவ்ய பிரசாதத்தை அஞ்சனையின் கையில் சேர்த்தார். அதை சாப்பிட அஞ்சனை அனுமனை பெற்றெடுத்தார். வாயுபகவான் அனுமனை தன் மகனாகவே கருதி அவருக்கு பல சக்திகளை வழங்கினார். அனுமனால் காற்றை விட வேகமாக பறந்து செல்ல முடியும். அதனால்தான் அவர் மாருதி என்னும் பெயர் பெற்றார்.

பவன்புத்திரன்
வாயுபகவானுக்கு பவன் என்னும் பெயர் உள்ளது. அவரின் அருளால் பிறந்தமையால் அனுமன் பவன்புத்திரன் என்னும் பெயர் பெற்றார். அனுமனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்தது சூரிய தேவர் ஆவார். இவரின் இசைக்கு குருவாக இருந்தது தேவரிஷி நாரதர் ஆவார். அனுமனின் ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் ஒரு காரணமும், கதையும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
