Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா?
விநாயகர் பொதுவாக அன்பான, அமைதியான கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரே சிலருக்கு கோபப்பட்டு சாபம் கொடுத்திருக்கிறார்
இந்து மதத்தை பொறுத்தவரை முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர்தான். இந்து மத வழிபாட்டில் விநாயகருக்கு இருக்கும் முக்கியத்துவம் நாம் நன்கு அறிந்ததுதான். எந்தவொரு சுபகாரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபடாமல் தொடங்கப்படாது, ஏனெனில் விநாயகரை வழிபட்டு நல்ல காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் சிறப்பாக முடியும் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆழமான நம்பிக்கையாகும்.

வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களில் இருந்தும், தடைகளில் இருந்ததும் நம்மை காப்பாற்றும் விநாயகர் பொதுவாக அன்பான, அமைதியான கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரே சிலருக்கு கோபப்பட்டு சாபம் கொடுத்திருக்கிறார், அதில் முக்கியமானவர் சந்திர தேவன் ஆவார். சந்திரன் மாதத்தில் பாதி நாட்கள் தேய்வதற்கும், ஒரு நாள் மறைவதற்கும் விநாயகரின் சாபம்தான் காரணம். விநாயகர் ஏன் சந்திரனை சபித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விநாயகர்
சிவன் மற்றும் பார்வதியின் மகனான பிள்ளையாரின் பலவீனம் என்றால் அது உணவுதான் குறிப்பாக இனிப்புகள். யார் இனிப்புகள் கொடுத்தாலும் அதனை வேண்டாம் என்று சொல்ல பிள்ளையாரால் முடியாது. ஒருமுறை பிள்ளையாரின் பக்தர் ஒருவர் அவற்றுக்கு ஏராளமான இனிப்புகளை வழங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிள்ளையார் நாள் முழுவதும் அங்கிருந்து கிட்டதட்ட அனைத்து இனிப்புகளையும் சாப்பிட்டார்.

கீழே விழுந்தார்
இரவு வந்ததும் விநாயகர் மீதமிருந்த இனிப்புகளை எடுத்து தன் இடுப்பில் வைத்துக்கொண்டு மெதுவாக நடந்து செல்ல தொடங்கினார். அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு இருந்ததால் அவரால் நடக்க முடியவில்லை, மேலும் இடப்பிலும் இனிப்புகள் இருந்தது அவருக்கு அசௌகரியத்தை உண்டாக்கியது. அப்பொழுது நிலைதடுமாறி பிள்ளையார் கீழே விழுந்தார். அவரின் இடுப்பில் இருந்த இனிப்புகள் அனைத்து திசைகளிலும் சிதறியது. அவரின் ஆடையும் கிழிந்தது.

சந்திரன்
கீழே விழுந்ததால் விநாயகர் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தார். எழுந்து தன்னையும் சுத்தப்படுத்தி கொண்டு, இனிப்புகளை சேகரிக்க தொடங்கினார். தான் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என்று அவர் நம்பினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சந்திர தேவன் இதனை பார்த்து விட்டார். அப்போது எப்போதும் முழுநிலவு இருக்கும். வளர்பிறை, தேய்பிறை, பௌர்ணமி, அமாவாசை என்று எதுவும் இல்லை.

சந்திரனின் கிண்டல்
விநாயகரின் பானை வயிறையும், அவர் விழுந்ததையும் பார்த்த சந்திர தேவன் பயங்கரமாக சிரிக்க தொடங்கினார். சந்திரனுக்கு எப்பொழுதும் தன் அழகு மீது கர்வம் இருக்கும். பிள்ளையாரின் பானை வயிறு, யானை முகம் போன்றவற்றை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்.

விநாயகரின் சாபம்
தான் கீழே விழுந்ததை பார்த்து உதவிக்கு வராமல் தன்னை பார்த்து சிரித்த சந்திரன் மீது விநாயருக்கு கோபம் வந்தது. சந்திரனை பார்த்து " சந்திர தேவா முதலில் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்து, உனக்கு உன் அழகின் மீது அதிக கர்வம் இருக்கிறதல்லவா? அதனால் இனி நீ வானத்தில் இருக்க மாட்டாய், எப்பொழுதும் உன் முகத்தை மற்றவர்களுக்கு காட்டமாட்டாய் " என்று சாபம் கொடுத்தார்.

சந்திர தேவன் கெஞ்சுதல்
பிள்ளையாரின் சாபம் சந்திரனின் குளிர்ச்சியை போக்கியது. தன்னை யாராலும் பார்க்க முடியாததை அவர் உணர்ந்தார். தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தின் வீரியத்தை அவரை புரிந்து கொண்டார். உடனடியாக பிள்ளையாரின் முன்பு வந்த சந்திரன் தனது தவறை மன்னிக்கும்படியும், சாபத்தை திரும்ப பெரும்படியும் பிள்ளையாரிடம் கெஞ்சினார்.

விநாயகரின் மன்னிப்பு
சந்திர தேவன் கெஞ்சுவதை பார்த்து பிள்ளையார் மனமுறுகினார். எப்பொழுதும் விநாயகர் எளிதில் மன்னிக்கக்கூடியவர். சந்திர தேவனை பிள்ளையார் மன்னித்து விட்டாலும் அவர் கொடுத்த சாபத்தை அவர்கள் திரும்ப பெற முடியாது என்பதை அவரை அறிவார்.

குறைக்கப்பட்ட சாபம்
பிள்ளையார் சந்திரனிடம் தன்னால் சாபத்தை திரும்ப பெற முடியாது என்று கூறினார். அதனை கேட்ட சந்திரன் மிகவும் வருத்தமுற்றார். ஆனால் தன்னால் சாபத்தை குறைக்க முடியும் என்று பிள்ளையார் கூறினார். அதன்படி " நீ கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மாதத்தில் ஒரு நாள் காணாமல் போவாய் அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு நாளில் முழுநிலவாய் பிரகாசிப்பாய் என்று கூறினார். இதனை கேட்ட சந்திரன் மகிழ்ச்சிடைந்து பிள்ளயாருக்கு நன்றி கூறினார்.

மற்றொரு நிபந்தனை
சந்திரனிடம் இன்னும் சாபம் இருக்கிறது என்று பிள்ளையார் கூறினார் .அதனால் அச்சமடைந்த சந்திரனிடம் " பயப்பட வேண்டாம், நீங்கள் என்னை சதுர்த்தி நாள் அன்று பார்த்து சிரித்தீர்கள், எனவே அந்த நாளில் உங்களை பார்ப்பவர்களுக்கு எல்லாம் சில பிரச்சினைகள் தோன்றும் என்று கூறினார். ஆனால் அவை விரைவில் குணமாகி விடும் என்றும் கூறினார். இந்த சாபத்திற்கு கிருஷ்ணரே ஒருமுறை ஆளானார்.



Click it and Unblock the Notifications