For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    இந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை உண்டாக்கும் தெரியுமா?

    |

    நமது ஜாதகத்தின் படியும், நமது ராசியின் படியும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ராசியான கற்கள் இருக்கும். அவற்றை சரியான விரலில் அணியும் போது அது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.

    ஆனால் சில கற்கள் மற்றும் உலோகங்கள் அனைவரும் அணியக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படி அனைவரும் அணியக்கூடிய, அணிந்து கொண்டிருக்கும் ஒரு பொருள்தான் வெள்ளி.

    Wearing Silver ring in your little finger can do wonders in your life

    வெள்ளி மோதிரம் அணிவது என்பது இன்றைய இளைஞர்கள் பலரிடமும் இருக்கும் ஒரு பழக்கமாகும். இதன் நன்மைகள் தெரியாமலேயே அதனை அணியும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. உண்மையில் வெள்ளி அணிவது உங்களுக்கு ஆரோக்கியரீதியான பல பலன்களை அளிக்கும், அதேசமயம் சரியான விரலில் மோதிரம் அணிவது உங்கள் வாழ்வில் அதிசயங்களையும் உண்டாக்கும். இந்த பதிவில் வெள்ளியை எப்படி பயன்படுத்துவது உங்கள் வாழ்வில் சிறப்பை உண்டாக்கும் என்று பார்க்கலாம்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
    ஜோதிடத்தின் படி வெள்ளி

    ஜோதிடத்தின் படி வெள்ளி

    ஜோதிட சாஸ்திரத்தின் படி வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திர கிரஹத்துடன் தொடர்புடையதாகும். இது நமது உடலில் இருக்கும் நீர் மற்றும் கபத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். சாஸ்திரங்களின் படி வெள்ளியானது ஒருவர் வாழ்க்கையில் பெருமையையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு அதனை அழகாகவும் மாற்றும்.

    வியாழன் மற்றும் சந்திரனின் அருளை பெற

    வியாழன் மற்றும் சந்திரனின் அருளை பெற

    வேத சாஸ்திரங்களின் படி வியாழன் மற்றும் சந்திர கிரகத்தின் அருளை பெற வெள்ளி உங்களுக்கு முழுமையாக உதவும். மேலும் இது உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுவதுடன் பல ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது.

    நேர்மறை சக்திகள்

    நேர்மறை சக்திகள்

    உங்கள் வீட்டில் பல்வேறு வடிவங்களில் வெள்ளியை சமயலறையில் வைப்பது, படுக்கையறையில் வைப்பது, விரல்களில் அணிந்து கொள்வது போன்றவை எப்போதும் உங்களை சுற்றி ஒரு நேர்மறை சக்தியை வைத்திருக்கும். இது மட்டுமின்றி இது மோசமான சூழ்நிலைகளில் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். சுண்டு விரலில் மோதிரம் அணிவதன் மூலம் அதிக ஆற்றலை பெறுவது எப்படி இரு மேற்கொண்டு பார்க்கலாம்.

    MOST READ: மார்ச் மாசம் பொறந்தவங்க எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான் ஏன் தெரியுமா?

    வெள்ளியும், தண்ணீரும்

    வெள்ளியும், தண்ணீரும்

    கடையில் உங்களுக்கு பிடித்த ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கி கொள்ளுங்கள். ஒரு வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்து ஒரு கப் தண்ணீரில் மோதிரத்தை இரவு முழுவதும் போட்டு வைக்கவும் இது ஆற்றலை சுத்திகரிப்பு செய்யும். அதன்பின்னார் அந்த மோதிரத்தை உங்கள் பூஜையறையில் வைக்கலாம் அல்லது நீங்கள் உங்கள் சுண்டு விரலில் கூட அணிந்து கொள்ளலாம். பின்னர் இந்த மோதிரத்தை சந்தனத்தில் நனைப்பதன் மூலம் அதிலுள்ள நேர்மறை சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள். இந்த மோதிரத்தை உங்கள் வலது கையின் சுண்டு விரலில் அணிந்து கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களும், அதிசயங்களும் நடப்பதை நீங்களே உணரலாம்.

    நல்ல பலன்கள்

    நல்ல பலன்கள்

    வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது இது உங்களின் அழகையும், ஆளுமையையும் அதிகரிக்கும், ஏனெனில் இது வியாழன் மற்றும் சந்திர கிரகத்துடன் தொடர்புள்ளது. இது உங்கள் மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் பரவ செய்யும்.

    ஆரோக்கிய பலன்கள்

    ஆரோக்கிய பலன்கள்

    உங்கள் ஜாதகத்தில் நிலவின் தாக்கமானது குறைவாக இருந்தால் அது உங்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அதனை பலவீனமடையவும் செய்கிறது. வெள்ளி மோதிரமானது சந்திரனின் தாக்கத்தை உங்கள் மீது அதிகரிப்பதுடன் உங்களுக்கு ஏற்படும் சளி, இருமல் மற்றும் மூட்டு வலிகள் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.

    வெள்ளி செயின்

    வெள்ளி செயின்

    ஒருவேளை உங்களுக்கு வெள்ளி மோதிரம் அணிவதில் அசௌகரியங்கள் இருந்தால் நீங்கள் வெள்ளி செயின் அணிய முயற்சி செய்யுங்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் மோதிரம் வழங்கும் அதே நன்மைகளை வழங்கக்கூடும். மேலும் இது உங்கள் தொண்டை சக்கரத்தை பராமரிக்க உதவும், சரியான முறையில் இதை அணிந்தால் அது உங்கள் தூக்க பிரச்சினை மற்றும் பேச்சு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

    MOST READ: இப்படி விளக்கேத்துனா லக்ஷ்மியோட அருளும் அதிர்ஷ்டமும் உங்க வீடு தேடி வரும் தெரியுமா?

    வெள்ளி பாத்திரங்கள்

    வெள்ளி பாத்திரங்கள்

    வெள்ளியை அணிவது மட்டுமின்றி வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பதும் கூட உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். வெள்ளி பாத்திரத்தில் தேன் அல்லது பால் குடிப்பது உங்களுடைய சளி மற்றும் இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ விரும்புபவர்கள் வெள்ளி உபயோகிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

    Read more about: cold astrology
    English summary

    Wearing Silver Ring in Your Little Finger Can Do Wonders in Your Life

    Do you know wearing Silver ring in little finger can give many health and spiritual benefits?
    Story first published: Friday, March 1, 2019, 17:50 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more