For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பிறந்த தேதியை வைத்து உங்களுக்கான முகூர்த்த நாட்களை கண்டுபிடிப்பது எப்படி?

எண்கள் என்பவை நம்முடைய குணங்களை மட்டுமல்ல, நம் வாழ்க்கையின் நிகழ்வுகளையும் கணக்கிடப் பயன்படும் என்பதை விளக்கி நம் பிறந்த தேதியை வைத்து முகூர்த்த எண் கணக்கிடுவது பற்றி பார்க்கலாம்.

|

ஒரு தனி நபரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுவது திருமணம். வாழ்வின் முற்பகுதியில் தனி ஆளாக வளர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவராக இணைந்து ஒரு மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்வது தான் திருமணம்.

Vivah Muhurat

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எடுக்கும் ஒரு முக்கிய முடிவாக கருதப்படுவது திருமணம். இந்த திருமண வாழ்க்கை சீராக பயணிக்க மற்றும் உங்கள் குறிக்கோளை இதன் மூலம் எட்ட நீங்கள் எடுக்கும் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம்

திருமணம்

காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் திருமண தேதி என்பது மணமக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திருமண தேதியை முடிவு செய்யும் முன் பல முறை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இதன்மூலம் ஒரு மகிழ்ச்சியான எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு தேதியை முடிவு செய்ய வேண்டும். திருமண தேதியை முடிவு செய்ய நியுமராலஜி ஒரு சரியான வழியைக் கூறுகிறது.

இதன்மூலம் தம்பதிகள் ஒரு தனித்துவத்தை தங்கள் வாழ்வில் உருவாக்க முடியும். ஒரு சிறப்பான மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியும். பிறந்த தேதியின்படி, 2019ம் ஆண்டிற்கான திருமண முகூர்த்தங்களை தேர்ந்தெடுப்பதற்கான வழியை இங்கே காணலாம்.

MOST READ: குன்றிமணி எண்ணெயை சாதாரணமா நினைக்காதீங்க... இத்தன விஷயத்துக்கு பயன்படும்...

நியுமராலஜி

நியுமராலஜி

ஜோதிடத்தைப் போலவே எண்கணிதமும் பழங்கால அறிவியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு வகை ஆகும். எண்களின் அறிவியல் படி எண்கணிதம் என்னும் நியுமராலஜி வழிநடத்தப்படுகிறது. தம்பதியரின் பிறந்த தேதியைச் சார்ந்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்த உண்மை அறியப்படுகிறது. இந்த வழியில், இது சில அதிர்ஷ்டம் அல்லது சில தேதியுடன் தொடர்புடைய பிரச்சனைகளை உறுதிப்படுத்த உதவுகிறது.

உள்ளுணர்வு மற்றும் கணிப்புடன் தொடர்புடையதாக இன்றைய எண்கணிதம் அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சிறந்த திருமண முகூர்த்தத்தைக் கணக்கிடுவது, உங்கள் திருமணத்தை திட்டமிடக் கூடிய சிறந்த தேதியைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உதவுகிறது, எனவே உங்கள் திருமண வாழ்க்கை மணமக்கள் இருவருக்கும் சிறந்த பலன்களைத் தந்து உதவுகிறது.

நியுமராலஜி எண்களை எப்படி கணக்கிடுவது?

நியுமராலஜி எண்களை எப்படி கணக்கிடுவது?

பிறந்த தேதி அடிப்படையில், எண்கணிதம் சில பொது வகைகளை வகைப்படுத்துகிறது. உங்கள் பிறந்த தேதியில் உள்ள எண்களை கூட்டுவதால் உங்கள் பிறப்பு எண்ணை அறிந்து கொள்ள முடியும். இதே முறையில் உங்கள் துணையின் பிறப்பு எண்ணையும் அறிந்து கொள்ளுங்கள். இதனால் தம்பதிகள் இருவரின் பிறப்பு எண்ணும் அறியப்படுகிறது. சிறந்த திருமண தேதிகளை அறிந்து கொள்வதற்கு இந்த இரண்டு பிறப்பு எண்களும் மிகவும் அவசியம் ஆகும்.

பிறப்பு எண்ணை எப்படி அறிந்து கொள்வது?

பிறப்பு எண்ணை எப்படி அறிந்து கொள்வது?

பிறப்பு எண்ணை கண்டுபிடிக்கும் முறை - பிறந்த தேதியின் எண்கள் + பிறந்த மாதத்தின் எண்கள் + பிறந்த வருடத்தின் எண்கள்

ஒவ்வொரு பிரிவின் அனைத்து எண்களையும் கூட்டி முதலில் ஓரிலக்க எண்ணாக மாற்றம் செய்து கொள்ள வேண்டும். கணக்கிடப்பட்ட ஓரிலக்க எண்கள் மூன்றையும் கூட்டி விடையாக வரும் அந்த ஓரிலக்க எண் உங்கள் பிறப்பு எண். உதாரணதிற்கு உங்கள் பிறந்த தேதி, 15 ஜூன் 1990, உங்கள் பிறப்பு எண்ணை கண்டறியும் முறையை இப்போது காணலாம்.

15 + 06 + 1990

(1+5) + (0+6) + (1+9+9+0)

6 + 6 + 19

6 + 6 + (1+9)

6 + 6 + 10

6 + 6 + (1+0)

6 + 6 + 1 = 13

1+3 = 4

15 ஜூன் 1990 ல் பிறந்தவருக்கான பிறப்பு எண் 4

இதே முறையை பின்பற்றி உங்கள் துணையின் பிறப்பு எண்ணை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

திருமண எண்ணை அறிந்து கொள்வது எப்படி?

திருமண எண்ணை அறிந்து கொள்வது எப்படி?

மணமகன் மற்றும் மணமகளின் பிறப்பு எண்ணை கூட்டி, ஒற்றை இலக்க எண்ணாக மாற்றிக் கொள்ளுங்கள். இரண்டு பிறப்பு எண்களையும் கூட்டுவதால் வரும் அந்த ஒற்றை இலக்க எண் திருமண எண்ணாகும்.

உதாரணதிற்கு மணமகனின் பிறப்பு எண் 4 என்று வைத்துக் கொள்ளலாம். மணமகளின் பிறப்பு எண்கள் 7 என்று வைத்துக் கொள்வோம். இவர்களின் திருமண எண் கண்டறியும் முறை எப்படி என்பதை இப்போது கீழே காணலாம்.

4 + 7 = 11

1 + 1 = 2

இந்த திருமண ஜோடியின் திருமண எண் 2.

முகூர்த்த எண்

முகூர்த்த எண்

திருமண எண்ணைக் அடிப்படையாகக் கொண்டு சிறந்த திருமண தேதியை எப்படி கணக்கிடுவது என்று தெரிந்து கொள்ளலாம்.

திருமண தேதியின் எண்களின் கூட்டல் 1 அல்லது 9 ஆக இருப்பது எந்த பிறப்பு எண்ணைக் கொண்ட தம்பதியருக்கும் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த தேதியாக கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, 22 நவம்பர் 2019 என்ற தேதியின் கூட்டல் எண் 9. ஆகவே இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக எல்லா நபருக்கும் விளங்குகிறது. ஆகவே, 2019ம் ஆண்டு விவாஹ முகூர்த்த தேதியை தேர்ந்தெடுப்பவர்கள், 1 அல்லது 9 ம் எண்ணை திருமண நாளின் கூட்டல் எண்ணாக இருக்கும் தேதியாக பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.

மணமகனின் பிறப்பு எண் மற்றும் மணமகளின் பிறப்பு எண்ணின் கூட்டலான திருமண எண்ணும் திருமண தேதியின் எண்ணும் ஒன்றாக இருப்பதைப் போன்ற நாட்களைத் தேர்வு செய்வதால் நன்மை உண்டு. உதாரணதிற்கு, உங்கள் திருமண எண் 4 என்றால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியின் கூட்டல் எண்ணும் 4 ஆக இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும். திருமண தேதியின் கூட்டல் எண் 1 அல்லது 9 மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்ணாகும். இந்த நாளில் திருமணம் புரியும் தம்பதியினர் மிகவும் சிறப்போடு வாழ்வார்கள். இந்த எண்கள் எந்த பிறப்பு எண்ணைக் கொண்டவருக்கும் பொருந்தும்.

மணமகனின் பிறப்பு எண் அல்லது மணமகளின் பிறப்பு எண்ணைக் கொண்ட திருமண நாளையும் தேர்ந்தெடுக்கலாம்.

திருமண எண், திருமண நாளை எப்படி பொருத்துவது?

திருமண எண், திருமண நாளை எப்படி பொருத்துவது?

திருமணம் செய்து கொள்ளும் ஜோடியின் பிறப்பு எண்களைக் கூட்டுவதால் கிடைக்கும் எண் திருமண எண் என்பதை நாம் அறிவோம்.

திருமண தேதி எண் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியின் கூட்டல் எண்ணாகும்.

உங்கள் திருமண எண்கள் 1 என்றால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதிக்கான கூட்டல் எண்ணும் ஒன்றாக இருப்பது சிறப்பு. திருமண எண்ணும் திருமண தேதிக்கான கூட்டல் எண்ணும் ஒன்றாக இருப்பது சிறப்பான திருமண தேதியாகும்.

விதி எண் மற்றும் திருமண தேதி எண் 1

விதி எண் மற்றும் திருமண தேதி எண் 1

ஒரு நபரின் பிறந்த நாளின் கூட்டல் எண்கள் என்பது விதி எண்ணாகும்.

விதி எண் 1 க் கொண்ட நபர் (1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்க 1 ஆக இருக்க வேண்டும்.

MOST READ: 2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா?

எண் 2

எண் 2

விதி எண் 2 க் கொண்ட நபர் (2, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 1 அல்லது 7 ஆக இருக்க வேண்டும்.

எண் 3

எண் 3

விதி எண் 3 க் கொண்ட நபர் (3 12, 30 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 3 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.

எண் 4

எண் 4

விதி எண் 4 க் கொண்ட நபர் (4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 1 அல்லது 7 ஆக இருக்க வேண்டும்.

எண் 5

எண் 5

விதி எண் 5 க் கொண்ட நபர் (5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 9 ஆக இருக்க வேண்டும்.

எண் 6

எண் 6

விதி எண் 6 க் கொண்ட நபர் (6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 6 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.

எண் 7

எண் 7

விதி எண் 7 க் கொண்ட நபர் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 1 அல்லது 2 ஆக இருக்க வேண்டும்.

 எண் 8

எண் 8

விதி எண் 8 க் கொண்ட நபர் (8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண் 1 ஆக இருக்க வேண்டும்.

எண் 9

எண் 9

விதி எண் 9 க் கொண்ட நபர் (9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 3 அல்லது 6 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.

MOST READ: ரத்ததானத்தால் தொடரும் எய்ட்ஸ் பிரச்சினை... யார் ரத்ததானம் செய்யலாம்? யார் செய்யக்கூடாது?

நியுமராலஜிப்படி திருமணம் செய்யக்கூடாத தேதிகள்

நியுமராலஜிப்படி திருமணம் செய்யக்கூடாத தேதிகள்

திருமண தேதியின் கூட்டல் எண்கள் 4, 8 அல்லது 5 என்று வரும் நாட்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக திருமண தேதியின் கூட்டல் எண் 5 என்றால், அது விவாகரத்தை உண்டாக்கும் என்று பொதுவாக அறியப்படுகிறது. ஆகவே திருமண தேதியின் கூட்டல் எண் 5 வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vivah Muhurat In 2019 By Date Of Birth

Numbers not only affect our character, but also the events that happen around us.
Desktop Bottom Promotion