Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது!
உங்களின் இந்த இரவு நேர சாதாரண செயல்கள் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லுமாம் தெரியுமா?
மஹாபுராணங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு புராணங்களில் முக்கியமான ஒரு புராணம்தான் விஷ்ணு புராணம் ஆகும்
நம் முன்னோர்கள் நமக்கு விட்டு வைத்து சென்றுள்ள விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் என்றால் அது வேதங்களும், புராணங்களும்தான். மஹாபுராணங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு புராணங்களில் முக்கியமான ஒரு புராணம்தான் விஷ்ணு புராணம் ஆகும். விஷ்னு புராணத்தில் பிரபஞ்சம், கடவுள்கள், அரசர்கள், முனிவர்கள், வாழ்க்கை முறைகள் என அனைத்தையும் பற்றி கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு புராணம் எந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இல்லை, ஏனெனில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த முனிவர்களின் படைப்புகள் ஒன்றாக தொகுக்கப்பட்டதே விஷ்ணு புராணம் ஆகும். விஷ்ணு புராணத்தில் கூறப்படும் முக்கிய கருத்துக்கள் வாழ்க்கை நெறிகள் பற்றியதாகும். அதன்படி நாம் தினமும் செய்ய சில செயல்களே நமக்கு பேராபத்தை ஏற்புத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் நாம் செய்யும் எந்த வேலைகள் நமக்கே ஆபத்தாகும் என்று பார்க்கலாம்.

விஷ்ணு புராணத்தின் அமைப்பு
விஷ்னு புராணத்தில் மொத்தம் ஆறு பாகங்களும் 126 அத்தியாயங்களும் உள்ளது. முதல் பாகத்தில் 22 அத்தியாயங்களும், இரண்டாவது பாகத்தில் 16 அத்தியாயங்களும், மூன்றாவது பாகத்தில் 18 அத்தியாயங்களும், நான்காவது பாகத்தில் 28 அத்தியாயங்களும், ஐந்தாவது பாகத்தில் 28 அத்தியாயங்களும், ஆறாவது பாகத்தில் 8 அத்தியாயங்களும் உள்ளது.

விஷ்ணு புராணம் கூறுவது என்ன?
விஷ்ணு புராணம் பெரும்பாலும் மாமுனிவர் மைத்ரேயருக்கும் அவரது குரு மகரிஷி பரஷருக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தமாய் இருக்கிறது. விஷ்னு புராணத்தில் மொத்தம் ஆறுபாகங்கள் உள்ளது . அதில் முதல் பாகம் அண்டத்தை பற்றியும், இரண்டாவது பாகம்பூமியை பற்றியும், மூன்றாவது பாகம் காலத்தை பற்றியும், நான்காவது பாகம் இராஜ்ஜியங்களை பற்றியும், ஐந்தாவது பாகம் கிருஷ்ணரை பற்றியும், ஆறாவது பாகம் விடுதலை பற்றியும் கூறுகிறது.

வாழ்க்கை பாடங்கள்
கலியுகம் தோன்றிய காலம் முதல் புராணங்களிலும்,வேதங்களிலும் மக்கள் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர். அவை அனைத்தும் நமது வாழ்க்கைக்கு ஏதோ ஒருவகையில் உதவும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். விஷ்ணு புராணம் நாம் செய்யும் வேளைகளில் சிலவற்றை மிதமான அளவில் மட்டுமே செய்யவேண்டும் என்று கூறுகிறது. அவை என்னென்ன வேலைகள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

குளிப்பது
குளிப்பது என்பது மனிதர்கள் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் அதிக முறை குளிப்பது மற்றும் அதிக நேரம் குளிப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் மேலும் உங்களை எளிதில் நோயில் விழவைக்கும். குளிக்கும் போது நேரத்தை வீணாக்காமல் அவர்களின் நோக்கம் என்னவோ அதனை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

தூங்கும் பழக்கம்
குளிப்பதை போலவே தூக்கமும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். அதிக நேரம் தூங்குவதும் சரி, குறைவான நேரம் தூங்குவதும் சரி இரண்டுமே உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை கணக்கில் வைத்துக்கொண்டு காலையில் எழ வேண்டும். பொதுவாக விஷ்ணு புராணத்தின் படி பிரம்ம முகூர்த்தத்தில் ஒருவர் எழுவது நல்லது.

பாலியல் நெருக்கம்
ஆண் மற்றும் பெண் இருவருக்குமான உடல் நெருக்கமும் மிதமான அளவிலேயே இருக்க வேண்டும், இல்லையெனில் வாழ்க்கையில் பிரச்சினைகள்தான் உருவாகும். இதற்கான சரியான காரணம் தரப்படவில்லை என்றாலும், அண்டவியலை மனதில் வைத்துக்கொள்வது நல்லது. அண்டவியலை பொறுத்தவரையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். அதேசமயம் அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்யவும் கூடாது. ஒவ்வொருவரின் உடலுக்கும் தேவைப்படும் அளவு மட்டுமே உடற்பயிற்சி செய்யவேண்டும். ஏனெனில் அனைவரின் உடலமைப்பும் ஒன்றுபோலவே இருக்காது, ஒவ்வொருவரின் உடலமைப்பும் மாறுபடும் அதற்கேற்றாற்போல உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவை
விஷ்ணு புராணம் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்பதை பற்றியும் கூறியுள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் செய்யக்கூடாத செயல்கள் என்ன என்பதை பற்றி விஷ்ணு புராணம் கூறியுள்ளது. பிரபஞ்ச விதிகளின் படி பூமியின் உருவாக்கத்தில் இந்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு காரணம் உள்ளது.

கிராஸ்ரோடுகளில் இருக்கக்கூடாது
இரவு நேரங்களில் கிராஸ்ரோடுகளுக்கு செல்வதையோ அல்லது அதன் வழியாக செல்வதையோ தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் பெரும்பாலும் அங்கே சமூத்திற்கு பொருந்தாத சக்திகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சாதாரண மனிதர்களுக்கு பல சிக்கல்களை உண்டாக்கும்.

சுடுகாட்டிற்க்கு செல்வது
இரவு நேரங்களில் சுடுகாட்டிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு எப்பொழுதும் எதிர்மறை சக்திகள் இருக்கும். இது உங்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இங்கிருந்து வெளிப்படும் புகை இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்லதல்ல.

தவறான சேர்க்கை
விஷ்ணு புராணம் மட்டுமின்றி அனைத்து நல்லொழுக்க நூல்களிலும் கூறப்படுவது தவறான குணம் கொண்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதாகும். தவறான குணம் கொண்டவர்கள் இரவு நேரங்களில் கண்டிப்பாக தவறான காரியங்களில் ஈடுபடுவார்கள், உங்களின் கர்மப்பலன் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்புகிறவர்கள் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். தவறான சகவாசமும் உங்களை நரகவாயிலில் நிறுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications