Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
பூண்டை இப்படிகூட உரிக்கலாமா?... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...
பூண்டு உரிக்கும் ஹேக் வீடியோ வைரலான கதையைப் பற்றி இந்த கட்டுரையில் பாருங்கள். இப்படியெல்லாம் கூட பூண்டு உரிக்க முடியுமா என்று பாருங்கள்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஹேக் ஆன்லைனில் பதிவிடப்ப்படும்போது, ஒரு சில ட்விட்கள் அதனை வைரலாக மாற்றுகின்றன. இதனால் அவை மிகப் பெரிதாக மாறி புகழ் பெறுகின்றன. இப்படி ஒரு ஹேக் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது பூண்டு உரிக்கும் ஒரு யுக்தி. சமையலில் ஆர்வம் உள்ள மக்கள், இந்த வீடியோவைக் கண்டு தங்கள் வேலையை சுலபமாக்கிக் கொள்ள முடியும்.

பூண்டு தோலை உரிப்பது என்பது வலி மிகுந்த மற்றும் நேரம் வீணாகும் ஒரு வேலையாகும். இந்த பூண்டு உரிக்கும் வீடியோ ஏன் இந்த அளவிற்கு பரவி வைரளாகி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
என்னப்பா பண்றாங்க?
பூண்டு உரிக்க ஒரு தனித்தன்மை பெற்ற யுக்தியைப் பின்பற்றும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தது '@VPestilenZ'.கொரியன் உணவுகளை அதிகம் சமைப்பவர்கள், சிறந்த முறையில் பூண்டு உரிக்க இந்த வீடியோவைப் பாருங்கள் என்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் ஒரு நபர், பூண்டு பல்லில் கத்தியை சொருகி இழுக்கும்போது அதன் தோல் தானாக நழுவி, தோல் உரிக்கப்ட்ட பூண்டு மட்டும் எளிதாக வெளி வருகிறது. பூண்டு தோல் உரிப்பவரின் கைகளில் பூண்டின் பசை ஒட்டாதவாறு எளிய முறையில் எந்த ஒரு சிரமும் இன்றி பூண்டு தனியாக தோல் தனியாக வந்துவிடுகிறது.
டுவிட்டரில் கலக்கும் விடியோ
தற்போது இந்த ட்வீட்டை பார்த்து இந்த வீடியோ எவ்வாறு வரவேற்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். வைரலான இந்த வீடியோவை இப்போது பார்க்கலாம்.
இந்த வீடியோ பகிரப்பட்டது முதல் இதுவரை 21 மில்லியன் முறை பார்க்கப்பட்டதாகவும், இந்த வீடியோவை உருவாக்கியவருக்கு டன் கணக்கில் நன்றிகள் குவிவதாகவும் கூறப்படுகிறது.
ஒரிஜினல் வீடியோவின் எதிர்வினைகள்
அசல் ட்விட்டைப் பார்த்த நெட்டிசன்களின் எதிர்வினைகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
பல மில்லியன் பேர் விரும்பி பார்த்த இந்த வீடியோவை சில முக்கிய பிரமுகர்களும் பார்த்து தங்கள் லைக்கை தெரவித்துள்ளனர் பிரபல மாடல் மற்றும் செஃப் க்றிஸ்ஸி டீகன் , அமெரிக்காவின் ஜனநாயக பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா ஒகாசியோ-கோர்டெஸ் போன்றவர்கள் இந்த தனித்தன்மை பெற்ற வீடியோவை பகிர்ந்து கமென்ட் செய்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பின்பு நீங்களும் இதே முறையில் பூண்டு உரிக்க முயற்சிக்கலாம்.



Click it and Unblock the Notifications
