Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
இந்த கிழமையில பிறக்கறவங்க இப்படி பெரிய தலைவரா வருவாங்களாம்... நீங்க எப்ப பிறந்தீங்க...
வியாழக்கிழமை பிறந்தவர்கள் பிறவியிலேயே பெரிய தலைவராகும் குணம் கொண்டிருப்பார்கள் என்பது பற்றி தான் இங்கு விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
வியாழன் என்றாலே அது குருபகவானைத் தான் குறிக்கும். வியாழக் கிழமை தான் அவருக்கு உகந்த தினமாக கூறப்படுகிறது. ஜோதிட கூற்றுப்படி வியாழன் கிரகமும் செல்வாக்கு உள்ள கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதனால் தான் இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் கூட மிகவும் செல்வாக்கு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். சரி வாங்க அதைப் பற்றி மேலும் பார்க்கலாம்.

பெர்சனாலிட்டி
வியாழக்கிழமை பிறந்தவர்கள் ரொம்ப அறிவாளியாக இருப்பார்களாம். தலைமைப் பண்பு என்பது உங்கள் கூடவே பிறந்தது. வாழ்க்கையை பற்றிய திறந்த கண் கொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் சிறந்த நகைச்சுவை சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள். இந்த சிறப்பு தன்மையே வாழ்வில் உங்களுக்கு நிறைய செல்வத்தை ஈட்டித் தரும்.
சாகசங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சுய துரோகம்
தொழில் துறை வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துபவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மிகவும் நேசிப்பவராக இருப்பீர்கள். சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே சுய துரோகம் செய்து கொள்வீர்கள். எனவே உங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதிக நம்பிக்கை வேண்டாம். இதனால் பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

தொழில்
வியாழன் அன்று பிறந்தவர்கள் ஆசிரியராக பணிபுரியவே பிறந்தவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு நடப்பதில் நீங்கள் திறமைசாலிகள். எனவே உங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு நல்ல பிணைப்பு இருக்கும். எனவே நீங்கள் கண்ணமூடிக்கிட்டு ஆசிரியராக முயற்சிக்கலாம். அப்படி இல்லையென்றால் அரசியலில் கூட உங்கள் கால்களை பதிக்கலாம். ஏனெனில் நீங்கள் பிறக்கும் போதே தலைவர் தான். நீங்கள் ஒரு சிறந்த லட்சியாவாதி. சேவை மற்றும் வணிகம் இரண்டும் செய்யலாம். சரியான திட்டமிடல் இரண்டு துறையிலும் ஜொலிக்க உதவும். நினைத்தால் பிரதமர் போன்ற உயர் பதவியில் கூட பணிபுரிவது உங்களுக்கு கடினமாக இருக்காது.

காதல் வாழ்க்கை
நீங்கள் புத்திசாலியாக இருப்பதால் உங்களிடம் ஆலோசனை பெறவே மக்கள் விரும்புவார்கள். உங்கள் புத்திசாலித்தனம் ஒன்றே போதும் மற்றவர்களிடம் உங்களை பிரபலமாக்கி விடும். எனவே நண்பர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவீர்கள். இதனால் உங்கள் துணையை கண்டுபிடிப்பதும் உங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது. உறவில் வாதங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க விரும்புவீர்கள். நீங்கள் காதல் சாகசங்களை நேசிப்பவராக இருப்பதால் உங்களுக்கு எப்பொழுதும் டிமாண்ட் அதிகம் தான்.

திருமணம்
நீங்கள் புத்திசாலி என்பதால் எப்படி உறவை பேண வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே உங்களுக்கு பொருத்தமான துணை அமைய வில்லை என்றால் சற்று சிக்கல் தான் வரும். இது உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை குலைக்க விடாதீர்கள். துணையுடன் வெளியே செல்வது ஊர் சுற்றுவது, வேடிக்கை என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குடும்பத்துடன் சரியான நேரம் ஒதுக்கி சந்தோஷமாக கழித்து வந்தால் உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications