For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பிறந்த தேதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரியுமா?

|

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது. ஏனெனில் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய பிறந்த எண் முக்கியப்பங்கை வகிக்கிறது. நியூமராலஜியின் படி நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்தும் நம்முடைய பிறந்த தேதியை வைத்து கணிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

உங்களுடைய எதிர்காலத்தை கணிக்க உதவும் போது உங்கள் பிறந்த தேதியால் உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்பதை கணிக்கமுடியாத என்ன? இந்த பதிவில் உங்கள் பிறந்த எண்ணின் படி உங்களுடைய பலவீனம் மேலும் நீங்கள் எதனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த எண் 1

பிறந்த எண் 1

1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகிறவர்கள். இவர்கள் அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள்.

பலவீனம்

பலவீனம்

இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஸ்டமானவராக கருதப்பட்டாலும் அவர்கள் அதிகம் செலவழிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதனையும் மீறி அவர்கள் தொடர்ந்து செலவு செய்தால் அவர்கள் கடினமான பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.

பிறந்த எண் 2

பிறந்த எண் 2

பிறந்த தேதி 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகள் இருப்பவர்களின் பிறந்த எண் 2 ஆகும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுகிறவர்கள்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களின் வெற்றிக்கு எப்பொழுதும் அவர்களின் சுயஒழுக்கம்தான் காரணமாக இருக்கும்...!

பலவீனம்

பலவீனம்

பிறந்த தேதி 2 ஆக இருப்பவர்கள் எளிதில் பதட்டமடைய கூடியவர்களாக இருப்பார்கள். சிலசமயம் அவர்களிடம் நம்பிக்கை குறைவாக இருக்கும். சிறிய சறுக்கல்கள் கூட அவர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்.

பிறந்த எண் 3

பிறந்த எண் 3

3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலவீனம் என்னவெனில் அவர்கள் தங்களின் செலவுகளை திட்டமிடுவதில் இவர்கள் எப்பொழுதும் கோட்டை விட்டுவிடுவார்கள். தன்னை விட சிறப்பாக செயல்படுபவர்கள் மீது இவர்களுக்கு எப்பொழுதும் பொறாமை இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் நிச்சயம் அவர்களின் இந்த பலவீனங்களை களைய வேண்டும்.

பிறந்த எண் 4

பிறந்த எண் 4

4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் பலவீனம் அதிக உணர்ச்சிவசப்படுவதாகும். இதனால் அவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். அதேசமயம் சிலசமயங்களில் மிகவும் பிடிவாதமாகவும் நடந்து கொள்வார்கள்.

MOST READ: வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?

பிறந்த எண் 5

பிறந்த எண் 5

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படும், இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். உடற்பயிற்சி மற்றும் உணவுமுறையில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிறந்த எண் 6

பிறந்த எண் 6

பிறந்த தேதி 6, 15 மற்றும் 24 ஆகா உள்ளவர்களின் பிறந்த எண் 6 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள். இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதுதான். தகுதியான நபர்களை மட்டும் நம்பும் பழக்கத்தை இவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் பிரச்சினைதான்.

பிறந்த எண் 7

பிறந்த எண் 7

7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இட்னஹ் எண்ணில் பிறந்தவர்கள் தங்களுக்கான விதிமுறைகளை தானே உருவாக்கி கொள்பவர்கள், மற்றவர்களின் கருத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் குறுகிய காலத்திலேயே வெற்றியை அடைந்து விடுவார்கள், இதனால் அவர்களுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதேசமயம் தன்னை விரும்புபவர்களை காயப்படுத்துவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

பிறந்த எண் 8

பிறந்த எண் 8

8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனால் அதிக சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். இவர்களை மற்றவர்கள் அடிக்கடி தவறாக புரிந்து கொள்வார்கள். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

MOST READ: நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டால் நம் முன்னோர்கள் பின்பற்றிய இந்த எளிய உணவுப்பழக்கங்களை பின்பற்றுங்கள்

பிறந்த எண் 9

பிறந்த எண் 9

9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். செவ்வாயால் ஆளப்படுவதால் இவர்கள் எப்பொழுதும் பதட்டமாகவும், கவலையாகவும் இருப்பார்கள். இவர்கள் கடினமாக உழைக்க கூடியவராக இருந்தாலும் எப்பொழுதும் இவர்களை சுற்றி எதிர்மறை சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும். மூர்க்கத்தனமும், முன்கோபமும் இவர்களிடம் அதிகமிருக்கும் அதுதான் இவர்களின் பலவீனமும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you need to stay away from, based on your birth number

Here are things you need to stay away from, based on your birth number.
Story first published: Tuesday, June 18, 2019, 11:20 [IST]