இராவணன் கூறும் பெண்களிடம் இருக்கும் இந்த மோசமான குணங்கள் பேரழிவை உண்டாக்குமாம் தெரியுமா?

இராவணனின் அழிவிற்கு காரணமாக இருந்தது பெண்ணாசைதான். ஆனால் இராவணன் பெண்களின் மோசமான குணங்கள் என்னென்ன என்பதை தன் ஞானத்தின் மூலம் வரையறுத்துள்ளார்.

இராமாயணத்தின் வில்லனான இராவணனை அசுரர்களின் அரசனாகவே நாம் அறிவோம். ஆனால் இராவணனுக்குள் எண்ணற்ற திறமைகள் மறைந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. எவ்வளவு திறமைகள் இருந்தாலும் கர்வம் ஒருவரின் தலைக்கேறிவிட்டால் அவர்கள் அழிவது உறுதி என்பதற்கு இராவணனே மிகசிறந்த உதாரணம் ஆவார்.

these bad qualities of women leads to destruction says Ravana

சிவபக்தியில் சிறந்து விளங்கிய இராவணன் சகல வித்தைகளையும் கற்று தேர்ந்தவராக இருந்தார். அந்த காலத்தில் இருந்த ஞானிகளில் இராவணன் அளவிற்கு ஞானம் பெற்றவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். இராவணனின் அழிவிற்கு காரணமாக இருந்தது பெண்ணாசைதான். ஆனால் இராவணன் பெண்களின் மோசமான குணங்கள் என்னென்ன என்பதை தன் ஞானத்தின் மூலம் வரையறுத்துள்ளார். இந்த பதிவில் இராவணன் கூறும் அழிவை ஏற்படுத்தும் பெண்களின் மோசமான குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராவணன்

இராவணன்

இலங்கையை ஆண்ட அசுர வேந்தன் இராவணன் பற்றி நாம் நன்கு அறிவோம். 10 தலைகளை கொண்ட இராவணன் 6 சாஸ்திரங்கள், 6 வேதங்கள் என அனைத்தையும் கற்று தேர்ந்தவராவார். ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் சீதையை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு தூக்கி சென்ற பாவத்திற்காக இன்றுவரை பலராலும் வெறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மண்டோதரி

மண்டோதரி

இராவணனின் மனைவியாக இலங்கையின் மகாராணியாக இருந்தவர் மண்டோதரி ஆவார். மண்டோதரியின் பயம் எப்பொழுதும் இராவணன் பற்றியதாகத்தான் இருந்தது. ஏனெனில் தன் கணவர் செய்யும் பாவங்களால் எப்போது அவர் உயிர் பிரியும் என்று அவர் பயந்துகொண்டே இருந்தார். அனைத்திற்கும் மேலாக இராவணன் சீதையை கவர்ந்து வந்தது அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மண்டோதரி இராவணனை எச்சரித்தார்.

இராவணனின் மறுப்பு

இராவணனின் மறுப்பு

மண்டோதரி கூறிய எதையுமே காதில் வாங்கி கொள்ளாத இராவணன் பெண்கள் பற்றிய தன்னுடைய கருத்தை மண்டோதரியிடம் பகிர்ந்து கொண்டார். அதன்படி பெண்களிடம் இருக்கும் சில குணங்கள் அவர்களின் கணவரின் அழிவிற்கு காரணாமாகும் என்று கூறினார்.

அதீத தைரியம்

அதீத தைரியம்

பெண்களின் தைரியம் என்பது எப்போதும் பாராட்டவும், மதிக்கவும் பட வேண்டியது ஆகும். ஆனால் இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். பெண்கள் தங்கள் தைரியத்தை சரியான நேரத்தில் தேவைப்படும் நேரத்தில் காட்ட வேண்டும். தவறான இடத்தில் காட்டப்படும் பெண்களின் தைரியம் அவர்களுக்கே பிரச்சினையில் முடியலாம்.

பொய்

பொய்

பெண்களுக்கு எளிதில் பொய் கூறும் பழக்கம் இருக்கும். இந்த குணம் அவர்களுக்கே பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். அவர்கள் கூறும் பொய்களால் அவர்களுக்கே என்றாவது ஒருநாள் ஆபத்து ஏற்படலாம். தன்னுடைய சுயலாபத்திற்காக பொய்கள் கூறும் பெண்களிடம் இருந்து எப்போதும் விலகியிருப்பதி நல்லது.

எளிதில் திசைமாறுவது

எளிதில் திசைமாறுவது

பெண்கள் எளிதில் கவனச்சிதறலுக்கு உள்ளாவார்கள், இந்த பழக்கம் அவர்களை எதிலுமே ஒருமுகமாக இருக்க விடாது. இப்படி எளிதில் கவனம் சிதறும் பெண்ணை பேசி ஏமாற்றுவது, அவர்களின் மனதை மாற்றுவது என்பது மிகவும் எளிதானதாகும்.

சதித்திட்டம்

சதித்திட்டம்

ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது மற்றவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டாமல் இருக்கமாட்டார்கள், தனக்கு சாதகமாக சூழ்நிலையை மாற்றிக்கொள்ள அவர்கள் எதையும் செய்வார்கள். மனதில் வஞ்சகத்துடன் இருக்கும் பெண்ணிடம் ஆண் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், காயமுற்ற பெண்கள் மிகவும் கொடூரமாக சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள்.

பயம்

பயம்

பயமும், தைரியமும் பெண்களுக்கு கூடப்பிறந்த குணங்கள் ஆகும். ஒருசமயம் மிகவும் தைரியசாலியாக இருக்கும் பெண்கள் மற்றொரு சமயம் மிகவும் பயப்படுவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்காத விஷயத்திற்கு அவர்கள் எப்போதும் பயப்படத்தான் செய்வார்கள். இந்த காரணத்தால் இவர்கள் எளிதில் இவர்களின் எதிரிகளால் வீழ்த்தப்படலாம்.

முட்டாள்தனம்

முட்டாள்தனம்

சிலசமயங்களில் பெண்கள் மிகவும் முட்டாள்தனமாக நடந்து கொள்வார்கள். சிறிதும் யோசிக்காமல் அவர்கள் அவசரத்தில் சில முடிவுகளை எடுப்பார்கள். அவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்தாலும் அதனை எடுப்பார்கள். இது சுயஅழிவிற்கு வழிவகுக்கும்.

கொடூரம்

கொடூரம்

பெண்கள் அவர்களை தவறாக நடத்தாதவர்களிடம் மட்டுமே அன்பாகவும், மன்னிக்கும் குணத்துடனும் பழகுவார்கள். பெண்கள் பொதுவாக மென்மையானவர்களாகவும் , அமைதியானவர்களாகவுமே உருவகப்படுத்தபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஒரு கொடூர முகமும் இருக்கிறது. ஒருவரிடம் அன்பாக பழகும் பெண்கள் அடுத்த நொடியை மற்றவர்களிடம் மற்றொரு முகத்தை காட்டுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, April 18, 2019, 14:50 [IST]
Desktop Bottom Promotion