Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா?
நமது கைகளில் இருக்கும் ரேகைகள் மட்டுமல்ல நமது கையின் அமைப்பும், வடிவமும் கூட நம்மை பற்றியும், நமது எதிர்காலம் பற்றியும் கூறக்கூடும்.
நமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில் இருக்கும் ரேகைகள் நமது எதிர்காலத்தை பற்றி கூறும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நமது கைகளில் இருக்கும் ரேகைகள் மட்டுமல்ல நமது கையின் அமைப்பும், வடிவமும் கூட நம்மை பற்றியும், நமது எதிர்காலம் பற்றியும் கூறக்கூடும். கைகளின் அமைப்புகளில் பலவகைகள் உள்ளது. இந்த பதிவில் உங்கள் கைகளின் வடிவம் உங்களை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

சதுர கை
சதுர கை என்பது உங்கள் மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை அனைத்தும் சதுரமாக சரியான வடிவத்தில் இருக்கும். இந்த வடிவ கைகள் கொண்டவர்கள் மென்மையானவராகவும், எத்ரதமானவராகவும் இருப்பார்கள். இவர்களின் பொறுமையும், பணிவும் இவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை பெற்றுத்தரும். இவர்களின் கைகள் பூமி கைகள் என்று அழைக்கப்படும். அனைவரையும் பேணி பாதுகாத்து அவர்களுக்கான உதவிகளை செய்வார்கள்.

கலவையான கைகள்
இந்த வகையான கைகள் இருப்பது மிகவும் அபூர்வமாகும், இந்த கைகளின் வடிவங்களும், இந்த கைகளில் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும் அதனால்தான் கைரேகை நிபுணர்கள் இதனை கலவை கைகள் என்று அழைக்கிறார்கள். கைரேகைகள் சதுரமாகவும், விரல்கள் நீளமாகவும் இருக்கும் இவர்களின் உருவத்திற்கும், செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பார்ப்பதற்கு ஜாலியாகவும், பொறுப்பற்றவராகவும் தெரியும் இவர்கள் உண்மையில் வலிமையானவர்களாகவும், ஆழமான சிந்தனைகள் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

உறுதியான கைகள்
இயற்கையாகவே உறுதியான கைகளை கொண்டவர்கள் சக்திவாய்ந்த ஆற்றலை கொண்டவர்கள் மேலும் வெளிப்படையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுறுசுப்பானவர்களாகவும், தாராள குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தான் செய்யும் அனைத்து செயல்களிலும் இறுதிவரை உறுதியாக இருப்பார்கள்.

கலை கைகள்
வட்ட வடிவிலும், மென்மையாகவும் காணப்படும் இந்த கைகள் பெண்களின் கைகளை போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இந்த வகை கைகளை கொண்டவர்கள் பெரும்பாலும் படைப்பாளிகளாகவும் தனது திறமைக்கு பாராட்டு பெறுபவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாகவே அமைதியான குணமும், கற்பனைத்திறனும் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள்.

அதிரடியான கைகள்
உங்கள் கைகளின் மணிக்கட்டு பகுதி சுருக்கமாக இருந்து, விரல் நுனிகளின் பக்கத்தில் அகலமாகவும் இருந்தால் உங்களின் கைகள் அசாதாரண கைகள் ஆகும். நீங்கள் அதிரடிகளை விரும்புபவர்களாகவும், வித்தியாசமான சாகசங்களை விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள்.

சூடான மற்றும் உலர்ந்த கைகள்
உங்கள் கைகள் எப்பொழுதும் சூடாகவும், உலர்ந்தும் காணப்பட்டால் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கைகளை நீங்கள் பல கடுமையான வேலைகளுக்கு பயன்படுத்துவீர்கள். நீங்கள் அதிக நீர் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் அதிக காரமான உணவுகளை சாப்பிடுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

வெளிர் கைகள்
மெல்லிய கைகளும், ரேகைகளும் எல்லைக்குட்பட்ட ஆற்றலை உணர்த்துகிறது. இவர்கள் மிகவும் பயந்த குணமுள்ளவராக இருப்பார்கள். ஆன்மீகத்தில் இவர்கள் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்தையும் திரைமறைவில் இருந்தே செய்ய விரும்புவார்கள், புகழ் வெளிவஹம் தன் மீது விழுவதை விரும்பமாட்டார்கள்.

சிவந்த கைகள்
சிவந்த கைகளும், கோடுகளும் வலிமையை குறிக்கிறது. இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள், சிலசமயம் இவர்களின் செயல்கள் அனைவரையும் ஓரங்கட்டுவதாக இருக்கும். கடின உழைப்பு, உற்சாகம் நிறைந்த இவர்கள் சிறிது கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வெளிப்புற செயல்களில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள், சொல்வதை விட செயலில் அதிக வேகம் காட்டுவார்கள்.

பெரிய கைகள்
பெரிய கைகளை கொண்டவர்கள் எப்பொழுதும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள் அதேசமயம் அதற்கான ஆளுமையையும் பெற்றவராக இருப்பார்கள். எந்தவொரு சிறிய செயலையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் . தலைவர்கள் பலரும் பெரிய கைகளை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்தையும் பொறுமையாக தொடங்குவார்கள் ஆனால் அதற்குப்பின் வேகமாக செயல்படுவார்கள்.

மிகப்பெரிய கைகள்
மிகப்பெரிய கைகள் என்பது அவர்களின் உருவத்திற்கும், அவர்களின் கைகளின் வடிவத்திற்கும் பொருத்தமில்லாததாக இருக்கும். இதன் அர்த்தம் இவர்கள் அளவுக்கதிகமான சுமையை தன் தலையில் சுமப்பார்கள். இதனால் இவர்களின் உடல் ஆரோக்கியம், மனஆரோக்கியம் இரண்டுமே பாதிக்கப்படும்.

சிறிய கைகள்
சிறிய கைகளை உடையவர்கள் விரைவாக செயல்படும் தன்மையும், சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தவொரு செயலையும் விரைவில் தொடங்கி விடுவார்கள் ஆனால் அதன் முடிவை பார்க்கும் பொறுமை இவர்களுக்கு சுத்தமாக இருக்காது. இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களின் கருத்துடன் ஒத்துப்போவார்கள்.

நீளமான விரல்கள்
நீளமான விரல்களை கொண்டவர்கள் பொறுமையும், காதலும் அதிகம் கொண்டவர்கள். சிக்கலான வேலைகளை கூட இவர்கள் எளிதில் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் குறுக்கு வழியில் செல்வதை விரும்பமாட்டார்கள்.

குட்டையான விரல்கள்
விரல்கள் குட்டையாக இருப்பவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது. அதேசமயம் இவர்களுக்கு காத்திருப்பதும் பிடிக்காது. இவர்கள் வேகமாக வேலை செய்யக்கூடியவர்களாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சிறந்த திட்டமிடுபவர்களாகவும், அனைவரையும் ஒருங்கிணைப்பவராகவும் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.



Click it and Unblock the Notifications
