Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
அகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு மத்தியில் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் தெரியுமா?
அகோரிகளின் சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் மிகவும் விசித்திரமானதாகவும், அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
இந்தியாவில் துறவறம் பூண்டவர்களுக்கென தனி விதிமுறைகள் உள்ளது. காவி உடுத்த வேண்டும், பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும், புலால் உணவை உண்ணக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. இதனை எதையும் கடைபிடிக்காமல் சாமியார் போர்வையில் ஊரை ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் இது எதையும் கடைபிடிக்காத அதேசமயம் தீவிர துறவறத்தில் இருக்கும் உண்மையான சாமியார்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அகோரிகள்.

அகோரிகளை வடஇந்திய புண்ணிய ஸ்தலங்களில் அதிகம் பார்க்கலாம். ஜடாமுடியுடனும், உடை அணிந்தும், அணியாமலும், கைகளில் மனித மண்டை ஓடுகளுடன் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருப்பார்கள். அகோரிகளின் சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் மிகவும் விசித்திரமானதாகவும், அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதில் முக்கியமானது பிணங்களை சாப்பிடுவது மற்றும் அவற்றுடன் உடலுறவு வைத்து கொள்வது. இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எங்கே வாழ்கிறார்கள்?
கருப்பு நிறமுள்ள சிவபக்தி உடைய கருப்பு உடையணிந்த நீண்ட முடி கொண்ட அகோரிகளை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் எப்பொழுதும் போதையில்தான் இருப்பார்கள், அவர்களின் கண்கள் எப்பொழுதும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் இறுதிச்சடங்குகள் நடக்கும் இடங்களில்தான் இருப்பார்கள். சிலர் மக்களிடம் இருந்து விலகி குகைகளிலோ, காடுகளிலோ, பாலைவனங்களிலோ வாழ்வார்கள்.

அகோரிகளின் நம்பிக்கை
அகோரிகள் பெரும்பாலும் மஹாகாலனான சிவபெருமானையும் அவரின் அழிக்கும் துணையான காளியையும்தான் வணங்குவார்கள். அகோரி ஒருவர் கூறும்போது இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு சக்தியின் வெளிப்பாடாகும்.ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு விதத்தில் திருப்திப்படுத்தவேண்டும்.ஆனால் சிவன் மற்றும் காளியை திருப்திப்படுத்துவது என்பது அனைவராலும் முடியாது. அதனை அகோரிகளால் மட்டும்தான் செய்யமுடியும்.

காளியின் தேவைகள் என்ன?
அகோரிகளின் நம்பிக்கை படி காளிதேவியை திருப்திப்படுத்துவது மது, இறைச்சி மற்றும் உடலுறவு ஆகும். இந்த மூன்றுமே சாதுக்களுக்கு தடை செய்யப்பட்டதாகும். இறைச்சி சாப்பிடுவது என்பது அனைத்தையும் சாப்பிடுவதற்கு சமம். அவர்களுக்கு இதில் எந்த எல்லையும் இல்லை அனைத்தும் ஒன்றுதான். எனவே அவர்கள் மனிதக்கழிவுகள், மனித சதைகளை தின்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கிறார்கள் ஆனால் ஒட்டு விதிவிலக்குடன்.

பிணங்களுடன் உறவு
அகோரிகளின் நம்பிக்கைகளின் படி காளி உடலுறவில் திருப்தி எதிர்பார்ப்பதால் அவர்கள் அதற்கு பொருத்தமான பிணம் ஒன்றை தேடி அதனுடன் உறவு கொள்கின்றனர். அகோரிகள் இதைப்பற்று கூறும்போது வெளியுலகத்திற்கு அருவருப்பாக தெரியும் இந்த பழக்கங்கள் உண்மையில் எளிமையானதுதான். இழிவான நிலையிலும் தூய்மையை கண்டறிய வேண்டும். அகோரியானவர் பிணத்துடன் உறவு வைத்துக்கொள்ளும்போது கூட கடவுளின் நினைவில் இருந்து விலகாமல் இருந்தால் அவர் சரியான பாதையில் செல்கிறார் என்று அர்த்தம் என அகோரிகள் கூறுகின்றனர்.

கற்பனைக்கு எட்டாத சடங்கு
அகோரிகளுக்கு மற்றுமொரு விசித்திரமான சடங்கு முறை உள்ளது. அதுதான் பிணங்களுக்கு மத்தியில் உறவு கொள்வது. இவ்வாறு உறவு கொள்வது அவர்களுக்கு பல அற்புத சக்திகளை அளிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இரவு நேரத்தில் இறந்த உடல்களுக்கு மத்தியில் அவர்களின் சாம்பல்களுக்கு நடுவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கில் ஈடுபடுத்தப்படும் பெண் உடல் முழுவதும் இறந்தவர்களின் சாம்பல் பூசப்படும், மேளங்கள் முழங்க மந்திரங்கள் ஓத இந்த சடங்கு செய்யப்படுகிறது.

இன்னும் இருக்கிறது
இந்த சடங்கில் ஈடுபடும் பெண் மாதவிடாய் காலத்தில் இருக்க வேண்டியது அவசியம். அதேசமயம் கட்டாயப்படுத்தி இந்த சடங்கை செய்யமுடியாது. பலமணி நேரங்களுக்கு நீடிக்கும் இந்த சடங்கு முடியும் வரை இருவரும் உச்சகட்டத்தை அடையக்கூடாது. அவ்வாறு இந்த சடங்கு முழுமைபெற்றால் தங்களுக்கு பல சக்திகள் கிடைக்கும் என்று இவர்கள் நம்புகிறார்கள். அகோரிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

அவர்கள் மனதில் வெறுப்பு இருக்கக்கூடாது
மற்றவர்களை வெறுப்பவர்கள் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பசு மற்றும் நாயுடன் உணவை பகிர்ந்து சாப்பிடுவது அவர்களுக்கு பிடிக்காது, மாறாக பிணங்களை எரிக்கும் இடத்தில் அமர்ந்து ஒரே கிண்ணத்தில் விலங்குகளுடன் உணவு உண்பார்கள்.விலங்குகள் தங்கள் உணவை அசுத்தப்படுதுவதாக அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம் ஈசனை அடைவது மட்டும்தான்.

இறந்தவர்களை கண்டு பயப்பட மாட்டார்கள்
அகோரிகள் பெரும்பாலும் இருப்பது இறந்தவர்களை எரிக்கும் இடத்தில் மட்டும்தான். அவர்களின் இரவும், பகலும் செல்வது அந்த இடத்தில் மட்டும்தான். சிவனை போலவே சாம்பல்தான் அவர்களின் உடையாக பெரும்பாலும் இருக்கிறது. பஞ்ச பூதங்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சாம்பல் அவர்களை அனைத்து தீமைகளில் இருந்தும் பாதுகாக்கும். இந்த நிலையில் இருப்பதை இவ்வித அவர்களுக்கு மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை.

மண்டை ஓடுதான் அவர்களின் அடையாளம்
அகோரிகள் பிணங்களில் இருந்து சேகரித்து வைத்து கொள்ளும் முதல் பொருள் மண்டை ஓடுதான். அகோரியாக விரும்பும் ஒருவர் முதலில் தன் குருவிடம் இருந்து மண்டை ஓட்டை பெற வேண்டும் அதற்கு பிறகுதான் தன்னுடைய அகோரி வாழ்க்கையை தொடங்க முடியும். அதற்கு பின் பிணங்களை சாப்பிடுவது, கங்கையில் குளிப்பது போன்றவற்றை செய்வார்கள். பேய்களும், ஆவிகளும் அவர்களின் உறவினர்களாக இருக்கும்.

அகோரிகளின் சின்னங்கள்
அகோரிகள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஜடாமுடியும், மண்டை ஓடும்தான். அகோரிகள் எப்போதும் முடி வெட்டமாட்டார்கள். முடி தன் முட்டி வரைக்கும் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள், கையில் மண்டை ஓடுகளை வைத்திருப்பார்கள், மனிதர்களின் எலும்புகளை ஊன்றுகோலாக வைத்து நடப்பார்கள். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் அகோரிகளை எளிதில் கண்டறிந்து விடலாம்.

மர்மமான மருந்துகள்
அகோரிகளிடம் இருக்கும் மர்மமான மருந்துகள் உலகம் முழுவதும் இருக்கும் விஞஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது. விஞ்ஞானத்தால் கூட குணப்படுத்த முடியாத நோய்களை அகோரிகளால் குணப்படுத்த முடியும். இதனை அவர்கள் மனித எண்ணெய் என்று கூறுகிறார்கள், மனித உடல்களை எரிக்கும் போது அதிலிருந்து எடுக்கப்படும் பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த மருந்துகளை மருத்துவ நெறிமுறைகளை கருதி அவர்கள் சோதனை செய்ய அனுமதிப்பதில்லை.

தாந்திரீகம் மற்றும் சூனியம்
அகோரிகளின் குணப்படுத்தும் சக்திகள் அவர்களின் தாந்திரீக சக்தியில் இருந்து கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இந்த சக்தியை எப்பொழுதும் தீயசெயல்களுக்காக பயன்படுத்துவதில்லை. தங்களை பார்க்க வருபவர்களின் உடலில் இருக்கும் நோய்களை தங்களுடைய சக்திகள் மூலம் ஈர்த்து குணப்படுத்த இவர்களால் முடியும். சில அகோரிகள் தாந்திரீக சக்திகளின் மூலம் சிவன் மற்றும் காளியை வழிபடும் போது தாங்கள் மேலும் சக்தியை பெறலாம் என்று நம்புகிறார்கள்.

மந்திரங்களும், கஞ்சாவும்
அனைத்து அகோரிகளுமே கஞ்சா புகைப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். கஞ்சா தங்களை அதிக கவனத்துடன் இருக்க வைப்பதாகவும், மந்திரங்களின் மீது அது கவனம் செலுத்த உதவுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். கஞ்சா போதையில் இருப்பதால் இவர்கள் எப்பொழுதும் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பதாக கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications