Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
உங்க ஆயுள்காலம் எவ்வளவு என்பதை உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகளின் எண்ணைக்கையே சொல்லும் தெரியுமா?
நாடி ஜோதிடம் போலவே நமது எதிர்காலத்தை கணக்கிட நம் முன்னோர்கள் உருவாக்கிய மற்றொரு சாஸ்திரம்தான் சாமுத்திரிகா இலட்சணம் ஆகும்.
நமது முன்னோர்கள் எழுதி வைத்த வேதங்களும், சாஸ்திரங்களும் நிகழ்காலத்தை வளமாக்குவது மட்டுமின்றி எதிர்காலத்தை அறிந்து கொள்ளவும் உதவும். அந்த வகையில் நம் முன்னோர்கள் கண்டறிந்த நாடி ஜோதிடம் நமது எதிர்காலத்தை அறிந்து கொள்வதில் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

நாடி ஜோதிடம் போலவே நமது எதிர்காலத்தை கணக்கிட நம் முன்னோர்கள் உருவாக்கிய மற்றொரு சாஸ்திரம்தான் சாமுத்திரிகா இலட்சணம் ஆகும். இதன்மூலம் நமது உடலில் இருக்கும் அடையாளங்களை வைத்தும், உறுப்புகளின் வடிவங்களை வைத்தும் நமது எதிர்காலத்தை கணக்கிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் நெற்றியில் இருக்கும் கோடுகள் உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

நெற்றிகோடுகள்
நெற்றிகோடுகளை வைத்து ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்று கூற இயலும். இந்த கோடுகள் ஒருவரின் தலைவிதியின் படியே ஏற்படும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் விதிக்கு ஏற்றபடி இந்த கோடுகளின் எண்ணிக்கை மாறுபடும். நெற்றியில் இருக்கும் ஒவ்வொரு கோடும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாகும்.

புதன் கோடு
புதன் கோடு புருவங்களுக்கு அருகில் இருக்கும் நீளமான கோடாகும். இது சிலருக்கு காதுகளை தொடும் அளவிற்கு கூட நீளமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், நினைவாற்றல் அதிகம் இருபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையானவராக இருப்பார்கள், ஒரு ரூபாயை கூட இவர்கள் வீணாக செலவழிக்க மாட்டார்கள்.

சுக்கிர கோடு
இது புதன் கோட்டிற்கு கீழேயும், இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும் இருக்கும். இந்த கொடு தீர்க்கமாக இருப்பவர்கள் அதிக பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும், மற்றவர்களை கவரும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவை அவர்களின் வாழ்க்கை மேம்பட பெரிதும் உதவும். எவ்வளவு தீர்க்கமாக இந்த கோடு இருக்கிறதோ அவர்கள் வாழ்க்கையில் அவ்வளவு உயரத்திற்கு செல்வார்கள்.

செவ்வாய் கோடு
குரு கோட்டிற்கு கீழேயும், நெற்றிக்கு நடுவிலும் இருக்கும் கோடுதான் செவ்வாய் கோடாகும். இந்த கோடு உணர்த்துவது என்னவெனில் இந்த கோடு இருப்பவர்கள் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவார்கள். தைரியம், பெருமை, தொலைநோக்கு எண்ணங்கள் இவர்களிடம் நிறைந்திருக்கும். ஆனால் இவர்களிடம் கோபம் அதிகமிருக்கும். பிரச்சினைகளில் இருந்து எப்படி வெளிவருவது என்று இவர்களுக்கு நன்கு தெரியும்.

சனி கோடு
இதுதான் அனைத்து கோடுகளுக்கும் மேலே இருக்கும் தலையும், நெற்றியும் இணையும் இடத்தில் இந்த கோடு இருக்கும். இந்த கோடு தீவிரமாக இருப்பவர்கள் பணம் சேர்ப்பதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள், எதுவும் இவர்களை தடுக்கும் முடியாது. நினைப்பதை அடைய இவர்கள் எந்த வேலையையும் செய்ய தயங்க மாட்டார்கள். இந்தகோடு அடர்த்தியாக இருப்பவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகும்.

குரு கோடு
குரு கோடு சனி கொடுக்கு கீழே இருக்கும் கோடாகும், பொதுவாக இது சனி கோட்டை விட பெரியதாக இருக்கும். இந்த கோடு அடர்த்தியாக இருப்பவர்கள் ஆன்மீகம் மற்றும் கல்வி இரண்டிலுமே சிறந்து விளங்குவார்கள். இவர்கள் பணத்திற்கு பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

சந்திர கோடு
இந்த கோடு இடது புருவத்திற்கு மேலே இருக்கும். இந்த கோடு அடர்த்தியாக எந்தவித தடங்கலும் இல்லாமலும் இருந்தால் அவர்கள் அளவுக்கதிகமான செல்வத்திற்கு சொந்தக்காரர் ஆவார்கள். இவர்கள் கலைத்துறை மூலம் நிறைய பொருள் ஈட்டுவார்கள்.

சூரிய கோடு
சந்திரகோடுக்கு நேர் எதிரில் இருக்கும் இந்த கோடு வலது புருவத்திற்கு மேலே இருக்கும். இந்த கோடு அடர்த்தியாய் இருப்பவர்கள் அதிக கற்பனைத்திறன் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று கூறுவார்களே அது இவர்களுக்குத்தான் பொருந்தும்.

ஆயுட்காலம்
நெற்றியில் குறைந்தது இரண்டு கோடுகளாவது அடர்த்தியாக இருந்தால் அவர்களின் ஆயுட்காலம் 60 முதல் 65 ஆண்டுகள் வரை இருக்கும். மூன்று கொடுகள் அடர்த்தியாக இருப்பவர்கள் 75 வயதுக்கு மேலே வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. கீழிருந்து 4 கோடுகள் வரை தெரிபவர்கள் 75 வயது வரை வாழ்வார்கள். 5 கோடுகள் தீர்க்கமாக எந்த தடங்கலும் இன்றி தெரிந்தால் அவர்கள் 100 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என்று சாமுத்திரிகா சாஸ்திரம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications