Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா?
அனுமன் மந்திரம் கூறுவதால் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்து மதத்தில் பலரும் பின்பற்றும் மற்றும் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது ஆஞ்சநேயர்தான். ஆஞ்சநேயரின் வீரம் மற்றும் வலிமை பற்றி நாம் நன்கு அறிவோம். கடினமான சூழ்நிலைகளிலோ அல்லது பயம் அதிகரிக்கும் தருணங்களிலோ ஆஞ்சநேயரின் பெயர் அல்லது மந்திரத்தை கூறும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

அனுமன் மந்திரம் கூறுவதால் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலம் மட்டுமின்றி ஆஞ்சநேயரிடம் அர்ப்பணிப்பு, குருபக்தி, புத்திக்கூர்மை என ஏராளமான சிறந்த குணங்கள் இருந்தது. இந்த பதிவில் அனுமன் மந்திரம் கூறுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வலிமையின் ஆதாரம்
வலிமைக்கும், சக்திக்கும் ஆதாரமாக இருப்பது அனுமன்தான். எனவே அவரின் மந்திரத்தை உச்சரிப்பது எந்த வகை பிரச்சினையையும் சமாளிக்கும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க அனுமன் மந்திரம் உதவுகிறது.

நெகிழ்வாக உணரச்செய்யும்
அனுமன் மந்திரம் கூறுவது உங்களை நெகிழ்வாக உணர செய்வதோடு தற்போதைய கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வரும் ஆற்றலை உங்களுக்கு தருகிறது.

ஆரோக்கிய மந்திரம்
பல மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து வெளிவர அனுமன் மந்திரம் உதவுகிறது. கடுமையான ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட அனுமன் வழிபாட்டால் மீண்டு வர வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

தீயசக்திகள்
ஒருவரின் வாழ்க்கையில் தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அனுமன் மந்திரத்தால் காப்பாற்ற இயலும். தீயசக்திகள் உங்களை நெருங்காமல் பார்த்து கொள்ளும் வேலையை கூட இது செய்யும்.

மன வலிமை
ஆஞ்சநேயர் உடல் வலிமையில் மட்டும் சிறந்தவர் அல்ல மன வலிமையிலும் ஈடு இணையில்லாதவர். கல்வி மற்றும் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை தீர்க்கமாகவும், தெளிவாகவும் எடுக்க ஆஞ்சநேயர் உதவுவார்.

எதிர்மறையை நீக்கும்
இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். அனுமன் வழிபாடும், மந்திரமும் உங்கள் ஆராவை சுத்தம் செய்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி உங்களுக்கு புது ஆற்றலை வழங்கும்.

பயத்தை நீக்கும்
ஆஞ்சநேயர் எப்பொழுதும் தனது பக்த்ர்களை ஆபத்தில் இருந்து பாதுகாப்பவராக இருக்கிறார். நமது வாழ்க்கையில் இருக்கும் பயத்தையும், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள இருக்கும் பயத்தையும் ஆஞ்சநேயர் நீக்குவார்.

கவனம் செலுத்த உதவுகிறது
அனுமன் மந்திரம் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் முழுகவனத்துடன் இருக்க உதவுகிறது. பூரண பக்தியுடன் இந்த மந்திரத்தை கூறும்போது நீங்கள் எதிர்பார்த்த முடிவை அடையலாம்.

கண்திருஷ்டி
அனுமன் மந்திரம் உங்களை கண் திருஷ்டியில் இருந்து பாதிக்கக்கூடும். அனுமனை வழிபடும் போது நீங்கள் எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் மற்றவர்களின் கண் திருஷ்டியால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.



Click it and Unblock the Notifications