Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
மே மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன தெரியுமா?
மே மாதத்தில்பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும் அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். ஏனெனில் குறையே இல்லாத மனிதன் இருக்க வாய்ப்பில்லை.
ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.

மே மாதத்தில்பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும் அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். ஏனெனில் குறையே இல்லாத மனிதன் இருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் மே மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சுயஉந்துதல் உள்ளவர்கள்
தோல்வி மற்றும் கடினமான நேரங்கள் இவர்கள் வாழ்க்கையில் சோதனைகளை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை இவர்களுக்கு பிறக்கும்போதே கூட பிறந்ததாகும். கடினமான சூழ்நிலைகளில் ஒரு அழுத்தம் தேவைப்படும் போது இவர்கள் அதனை மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கான அழுத்தத்தை அவர்களே கொடுத்து கொண்டே மேலே முன்னேறி வருவார்கள். இவர்களின் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

கவன ஈர்ப்பு
இவர்களை அனைவருக்கும் பிடிக்கும் அதுதான் இவர்களின் பலம்.இவர்கள் இருக்கும் இடங்களில் பெருமபாலும் இவர்கள்தான் அனைவரின் மையமாக இருப்பார்கள். உண்மையில் அனைவராலும் விரும்பப்படுவதை இவர்கள் மனதிற்குள் ரசிப்பார்கள்.

இலட்சியங்கள்
வாழ்க்கையில் உயரத்தை அடைவதை பற்றி அவர்கள் எப்பொழுதும் கனவு கண்டு கொண்டே இருப்பார்கள். அவர்களின் செயல்கள் எப்பொழுதும் எதார்த்தத்தை ஒத்ததாகவே இருக்கும். குருட்டுத்தனமான கனவை காணமாட்டார்கள், அடையமுடிந்த குறிக்கோள்களையே தங்கள் இலட்சியமாக கொள்வார்கள்.

அதிக பணம் செலவழிப்பார்கள்
அவர்கள் மிகவும் கம்பீரமானவர்கள் எனவே அதற்கு ஏற்றவாறு அதிக பணத்தை செலவழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். சிலசமயம் சமாளிக்க கூடிய அளவிற்கு செலவழித்தாலும் பல நேரங்களில் அளவிற்கு அதிகமாக செலவழித்து அதிக சுமையை ஏற்றிக்கொள்வார்கள். ஆனால் செலவை திட்டமிடுவதில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.

நெகிழ்வற்றவர்கள்
சிலசமயம் இவர்களின் அணுகுமுறைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். இவர்கள் பிடிவாதம் மற்றும் அணுகுமுறைகளில் மேன்மை இருக்காது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவர்களை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

உணர்ச்சிவசப்பட கூடியவர்கள்
உண்மைதான், இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். இவர்கள் மற்றவர்கள் முன் அழுவதை எப்போதும்ப் பார்க்க இயலாது, ஏனெனில் இவர்களுக்கு எப்போது, எங்கே கண்ணீரை மறைக்க வேண்டுமென்று நன்கு தெரியும். இவர்கள் பெரும்பாலான காரியங்களை இதயத்தில் இருந்து செய்வார்கள் இதனால் இவர்களுக்கு துன்பம் மட்டுமே மிஞ்சும்.

உழைப்பாளிகள்
இயல்பிலேயே இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள், நினைத்த இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள். ஆசையும், கனவும் மட்டுமின்றி அதனை அடைவதற்கான முயற்சியும், உழைப்பும் இவர்களிடம் சேர்ந்தே இருக்கும். சிலசமயம் குறிக்கோளிற்காக உலகை மறந்து உழைக்கவும் இவர்கள் தயாராய் இருப்பார்கள்.

ஓய்வில்லாதவர்கள்
இவர்கள் எப்போதாவது வேலைகளால் சோர்வடைவார்கள். மே மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஓய்வில்லாத வாழ்க்கையை வாழ்வார்கள் ஆனால் அதனை அவர்கள் ஒரு குறையாக நினைக்க மாட்டார்கள். கனவை நினைவாக்கும் ஆற்றல் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும்.

கோபக்காரர்கள்
இவர்கள் அதிகம் கோபப்பட கூடியவர்கள், சிறிய காரணங்களுக்கு கூட கடுமையாக கோபப்படுவார்கள். இவர்களிடம் இருக்கும் சில மோசமான குணங்களில் இதுவும் ஒன்றாகும். இவர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் அதனால் பலசமயம் அது கோபமாகவும் மாறும். இவர்களிடம் நெருக்கமாக இருப்பவர்கள் இவர்களிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

புரிந்து கொள்வது
மற்றவர்களை கவிழ்க்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்கள் இவர்கள். உண்மையில் தன்னை சுற்றியிருப்பவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதனை சரிசெய்ய முயலுபவர்கள் இவர்கள். இந்த குணம்தான் இவர்களை அனைவரும் விரும்பும் ஒருவராக மாற்றுகிறது. மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளையும், ரகசியங்களையும் இவர்களிடம் கூற விரும்புவார்கள் ஏனெனில் இவர்களுக்கு அதனை பாதுகாக்கவும் தெரியும், சரிசெய்யவும் தெரியும்.



Click it and Unblock the Notifications











