For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 2019 இல் மோடி அல்லது ராகுல் - யாரோட ஜாதகம் (நட்சத்திரம்) ஜோரா இருக்கு?

|

இரு தரப்பு மதிப்புமிக்க அரசியல் தலைவர்களைப் பற்றி முன் கணிப்பு செய்வதற்கு முன்னர், பொதுவாக அரசியல்வாதிகளின் ஜாதகம் மிகவும் நம்பகமானதாக இருப்பதில்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஆனால், நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நான் பயன்படுத்தப் போகிற ஜாதகங்களை மூத்த ஜோதிடர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்துகிறார்கள். ராகுல் காந்தியின் பிறப்பு விவரங்கள் அவர் பிறந்த மருத்துவமனையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

NEW YEAR FORECAST - MODI OR RAHUL

ஆனால், அரசியல்வாதிகள், பல்வேறு வகையான ஜோதிடர்களிடம் வேறுபட்ட பிறந்த விவரங்களை வேண்டுமென்றே விநியோகிக்கின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை. இருந்தாலும், ஒரு நம்பகமான பிறந்த நாள் விவரங்களைக் கொண்டு இந்தியாவின் இரண்டு உயர் அரசியல்வாதிகளின் 2019- ஆம் ஆண்டுப் பலன்களை மட்டும் கணிக்கிறேன் இங்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி ஒரு நல்ல வளர்ச்சிக்காலத்தில் நுழைய உள்ளார். அவர் மீது செவ்வாயின் வின்ஷோத்தாரீ தசா மற்றும் சந்திரனின் துணை அல்லது உள் தசையின் விளைவு உள்ளது. சூரிய - செவ்வாயின் கலவையின் அம்சங்களைப் போலவே, சந்திரன் வலுவான இராஜயோகங்களை வழங்குகிறார். ஏப்ரல் 2019 -ன் பாதி வரை செவ்வாய் மஹா தசையின் கடைசி வின்ஷோத்தாரீ தசையான சந்திரன் பலன்களை வழங்குகிறார்.

MOST READ: உங்க ஆண்குறியில் இந்த அறிகுறிகள் இருந்தா ஆண்குறி புற்றுநோய் வரலாம்... செக் பண்ணுங்க...

ராகு திசை

ராகு திசை

இப்பொழுது நடைபெற்ற மாநிலங்களுக்கான தேர்தல்களில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வென்றுள்ளது. ஏப்ரல் 2019 -ல் இரண்டாம் பாதியில் ராகுல் காந்தி ராகு திசையின் வின்ஷோத்திரி தசையின் விளைவில் இருப்பார். ஐந்தாவது வீட்டில் அமரும் ராகு அரசியல்வாதிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது, ஏனெனில் ஐந்தாவது வீடு அரசியல் பதவிகள் / அலுவலகங்களுக்கானதாக கருதப்படுகிறது. ராகு தனது சொந்த நட்சத்திரக் கூட்டத்தில் அமர்ந்துள்ளது மேலும் சனியின் அடையாளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

ராகுவின் இடத்தில அமர்ந்து ஆள்பவர் சனி தான். வியாழனின் பார்வை ராகுவின் மீது இருக்கிறது. ஆக மொத்தம் இவருடைய ராகு திசை அவருக்கு அனைத்து வகையிலும் சாதகமானதாக இருக்கிறது. எனவே, வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் அவர் சிறப்பாக அதாவது குறைந்தபட்சம் மற்ற எதிர்க் கட்சிகளை விட கூட்டணி கொண்டு சிறப்பாகச் செயல்படுவார் எனத் தோன்றுகிறது.

அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தில் பிரதமராக அமர்வாரா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடுமையானது. ஏனெனில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், சாத்தியமாகும் கூட்டணி வடிவத்தைப் பொறுத்தே அது அமையும். ஏனென்றால் வழக்கமான ஜோதிடத்தில், தேர்தல்கள் பிரகடனம் செய்யப்பட்ட பின்னரே பிரதம மந்திரியைப் பற்றிக் கணித்துக்கூற முடியும். தேர்தல் முன்னரே கூட அறிவிக்கப்படலாம்.

MOST READ: மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி பலவீனமான சந்திர தசையின் விளைவில் உள்ளார். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, இதே சந்திர வின்ஷோத்தாரீ தசா கட்டத்தில் தான் அவர் பிரதம மந்திரி ஆனார். சந்திரன் பலவீனமடைந்தாலும், ராஜயோகத்தை வழங்குகிறது. அதனால்தான் அவர் இந்தியாவின் மிக உயர்ந்த அலுவலகத்தை அடைந்தார். ஆனால் 2014- ஆம் ஆண்டில் அவர் வியாழனின் உள் சந்திர வின்ஷோத்திரி மஹா தசையின் விளைவாக இருந்தார். அந்த நேரத்தில் சனி ஒன்பதாவது இடத்தைக் கடந்து கொண்டிருந்தார் (லட்சுமி ஸ்தானம், விதியின் வீடு மற்றும் அரசியல் சாதனைகளின் வீடு).

ஜாதக அம்சம்

ஜாதக அம்சம்

ஆனால் இப்போது மோடிஜி ஏழின் தாக்கத்தில் இருக்கிறார், பன்னிரெண்டாவது கடவுள் வெள்ளியானது பத்தாவது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், அவர் சந்திரன் - வியாழன் அம்சத்தில் இருந்தார் ஆனால் இப்போது மற்றும் 2019- இல் அவர் சந்திரன் - வெள்ளியின் அம்சத்தில் இருப்பார் என்பதாகும். 21 பிப்ரவரி மற்றும் 13 ஏப்ரல் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவருக்கு ஒரு தீர்க்கமான குறியீட்டு சோதனை இருக்கும். சனி 31 சாமுதேயாய்க் அஷ்டாக் வர்காவிலும், வியாழன் 30- லும் பரிமாற்றம் அடைகின்றன.

MOST READ: தினமும் முட்டை சாப்பிட பிடிக்காதவர்கள் முழு புரதமும் கிடைக்க வேறு என்ன சாப்பிடலாம்?

அடுத்த பிரதமர் யாராக இருக்கும்?

அடுத்த பிரதமர் யாராக இருக்கும்?

நான்காவது ராசிக் கடவுளான வீனஸ் பத்தாவது வீட்டில் இருப்பதால், பிரதமர் பதவிக்கு வாய்ப்புகள் தெரியவில்லை, அதே போல 2014- இல் இருந்ததைப் போல அவரது கிரகங்கள் பலமாக இல்லை. எனவே அடுத்த பிரதமர் மோடி அல்லது ராகுலில் யார் என்பதைத் தெளிவாகக் கூற முடியாது. மூன்றாவது நபருக்குக்கூட வாய்ப்புகள் எப்போதும் உள்ளன. ஆனால் மோடியின் ஜாதகம் இன்னும் கூட வலுவாக இருப்பதையும் ராகுல் காந்தியின் ராசி இப்போது ஒரு சிறந்த ஜோதிட மண்டலத்தில் நுழைந்து ஏப்ரல் மாதத்திலிருந்து கிரகங்கள் வலுவாக இருக்கும் என்ற இரண்டையும் ஒப்புக் கொள்ளலாம். எனவே தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன், அடுத்த பிரதமரைப் பற்றி கணிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

NEW YEAR FORECAST - MODI OR RAHUL – WHOSE STARS ARE STRONGER IN 2019

here we are discussing about the new year forecast of modi and rahul whose stars are stronger in 2019.
Story first published: Tuesday, January 8, 2019, 15:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more