இந்த ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களாம்... உங்கள் ராசியும் இதுல இருக்கா?

கவனமின்றி செய்யும் அனைத்து செயல்களும் இறுதியில் தோல்வியிலேயே முடியும். இந்த கவனச்சிதறல் ஏற்பட காரணம் ஒரு செயலில் கவனம் செலுத்தாமல் ஒரே நேரத்தில் பல செயல்களை பற்றி சிந்திப்பதுதான்.

வாழ்க்கையில் வெற்றிபெற அனைவருக்கும் கவனம் என்பது மிகவும் முக்கியமானது. கவனமின்றி செய்யும் அனைத்து செயல்களும் இறுதியில் தோல்வியிலேயே முடியும். இந்த கவனச்சிதறல் ஏற்பட காரணம் ஒரு செயலில் கவனம் செலுத்தாமல் ஒரே நேரத்தில் பல செயல்களை பற்றி சிந்திப்பதுதான். இதனால் இறுதியில் ஒரு செயலை கூட வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போய் விடுகிறது.

most unbalanced zodiac signs according to astrology

இந்த சமநிலையில்லாத மனது பலருக்கும் பிறவி குணமாகவே இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு இந்த குணம் இயற்கையாகவே இருக்கும் என்றும், அவர்களே மாற்றிக்கொள்ள நினைத்தாலும் இந்த குணம் அவர்களை விட்டு போகாது. இந்த ராசிக்கார்கள் எப்பொழுதும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசித்த பின்பு முக்கியமான முடிவுகளை எடுப்பது நல்லது. எந்தெந்த ராசிக்கார்களுக்கு மனம் எப்பொழுதும் சமநிலையில் இருக்காது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கும்பம்

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் குழப்பமான மனநிலையுடன் இருப்பார்கள், என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவு செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். அவர்களின் இந்த அதீத பகுப்பாய்வின் காரணமாக தங்கள் வாழ்க்கைக்கு எது நல்லது எது கெட்டது என்று கண்டறிவதில் அதிக குழப்பத்துடன் இருப்பார்கள். ஒரு இலக்கை அடைய அவர்கள் மற்ற அனைத்தையும் கோட்டை விடுவார்கள், இறுதியில் அவர்களின் குழப்ப மனநிலையால் இலக்கையும் தொலைத்து விடுவார்கள். அவர்களின் சமநிலை இல்லாத மனதால் தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள்.

துலாம்

துலாம்

மற்ற அனைத்து ராசிகளையும் காட்டிலும் துலாம் ராசிக்கார்கள்தான் சமநிலையின்மையின் பிரதிநிதியாக இருக்கிறார்கள். அவர்களின் அளவீடுகள் எப்பொழுதும் சமமின்றியே இருக்கும். இவர்களின் குறிக்கோள்கள் எப்பொழுதும் உயர்ந்ததாகவே இருக்கும், ஆனால் அவர்கள் மீது அவர்களுக்கே இருக்கும் சந்தேகத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திப்பீர்கள். அவர்களின் வெற்றிக்கு தடையாக இருப்பது அவர்களின் சுயசந்தேகம்தான்.

மகரம்

மகரம்

பாதுகாப்பற்ற உணர்ச்சிதான் மகர ராசியில் பிறந்தவர்களின் வீழ்ச்சிக்கான காரணமாகும். இதனால்தான் அவர்கள் பெரும்பாலும் சோர்வாகவே காணப்படுவார்கள். அவர்களிடம் சிலசமயம் சூப்பர் நம்பிக்கை காணப்படும், ஆனால் அவர்களின் மோசமான முடிவுகளும், தவறான தேர்வுகளும் அவர்களின் தோல்வியை உறுதிப்படுத்தும். இவர்கள் அத்தி பூத்தாற் போல் எப்போதாவது வெற்றிபெறுவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

அதிக செயல்பாடுகள் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் இலட்சியத்தில் கவனம் செலுத்துபவராக இருப்பார்கள், ஒரே குறிக்கோளை மனதில் வைத்து அதற்காக உழைப்பார்கள். தனது இலட்சியத்தை அடைய எவ்வளவு கடினமான முயற்சியாக இருந்தாலும் அதை செய்து நினைத்ததை முடிப்பார்கள். அவர்களின் குறிக்கோளுக்காக உழைக்கும்போது மற்ற முக்கியமான விஷயங்களில் அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்தமாட்டார்கள். இறுதியில் அவர்களின் தடுமாறும் மனதால் அவர்களின் குறிக்கோளை தவிர வேறு எதுவும் அவர்களுடன் இருக்காது.

கன்னி

கன்னி

தங்களின் முடிவுகள் மீதும், தேர்வுகளின் மீதும் இவர்கள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். எப்போதுமே அவர்களின் தேர்வை விட சிறந்தது எதுவென்று சிந்தித்தே நிம்மதியை இழப்பார்கள். அவர்களின் இந்த தேடல் அவர்களை எப்பொழுதும் அவர்களுக்கு தேவையானவற்றில் இருந்து விலக்கியே வைத்திருக்கும். இதனால்தான் அவர்கள் எப்பொழுதும் தங்களின் உள்ளுணர்வை நம்பவே மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கான சூழ்நிலையை உருவாக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார்களின் சமநிலை இல்லாத மனதால் அவர்கள் மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ளவர்களும் பெரிதும் சிரமப்படுவார்கள். இந்த ராசியின் சின்னத்திற்கேற்ப அவர்கள் அடுத்தவர்களின் இரத்தத்தை உறிஞ்சுபவராக இருப்பார்கள். குடும்பத்தினரோ, நண்பர்களோ இவர்கள் எதிர்பார்க்கும்படி நடக்காத போது இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து தவறாக செய்வார்கள். இவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கமாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, January 19, 2019, 18:40 [IST]
Desktop Bottom Promotion