மகாபாரத போரில் கிருஷ்ணர் துரியோதனனுக்கு செய்த உதவிகள் என்னென்ன தெரியுமா?

நாம் நினைக்கும்படி கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு மட்டும் மகாபாரத போரில் உதவவில்லை, கௌரவர்களுக்கும் உதவினார்.

மகாபாரத போரை பற்றியும் அதனால் ஏற்பட்ட பேரழிவு பற்றியும் நாம் நன்கு அறிவோம். மகாபாரத போருக்கு பலரின் பேராசைகள் காரணமாக இருந்தாலும் அதனை தலைமேயேற்று நடத்தியது என்னவோ கிருஷ்ணர்தான். போரில் கிருஷ்ணரின் துணையும், உதவியும் இல்லையெனில் நிச்சயம் பாண்டவர்களால் போரை வென்றிருக்க இயலாது. நாம் நினைக்கும்படி கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு மட்டும் போரில் உதவவில்லை, கௌரவர்களுக்கும் உதவினார்.

Mahabharat war

உண்மைதான், மகாபாரத போரின் போது தர்மத்தின் பக்கமிருந்த பாண்டவர்களின் புறம் கிருஷ்ணர் இருந்தார். ஆனால் அவரின் மாபெரும் நாராயணி சேனையோ அதர்மத்தின் பக்கமிருந்த துரியோதனன் வசம் இருந்தது. அந்த மாபெரும் சேனையை துரியோதனனுக்கு வாங்கியதே கிருஷ்ணர்தான். படை தந்து கௌரவர்களின் பலத்தை ஏன் கிருஷ்ணர் அதிகரித்தார் என்ற கேள்வி நிச்சயம் அனைவருக்குள்ளும் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ணரிடம் உதவி

கிருஷ்ணரிடம் உதவி

போர் தொடங்குவதற்கு முன் கிருஷ்ணரிடம் உதவி கேட்க அர்ஜுனனும், துரியோதனனும் சென்றார்கள். முதலில் சென்ற துரியோதனன் உறங்கி கொண்டிருந்த கிருஷ்ணரின் தலை பக்கத்தில் அமர்ந்தான். பின்னால் வந்த அர்ஜுனன் கிருஷ்ணரின் கால் பக்கத்தில் கை கட்டி நின்றிருந்தான். தூக்கத்தில் இருந்து எழுந்த கிருஷ்ணர் முதலில் அர்ஜுனனைத்தான் பார்த்தார். எனவே அவனிடம்தான் முதலில் என்ன உதவி வேண்டுமென்று கேட்டார்.

துரியோதனனின் கோபம்

துரியோதனனின் கோபம்

முதலில் வந்த துரியோதனன் இதனை கேட்டு கோபமடைந்தான். நான்தான் முதலில் வந்தேன் என்று கூறி வாக்குவாதம் செய்தான். அதற்கு கிருஷ்ணர் நீ முதலில் வந்திருந்தாலும் நான் முதலில் பார்த்தது அர்ஜுனனைத்தான் என்று கூறினார். இருப்பினும் அர்ஜுனன் துரியோதனனுக்கே முதலில் உதவி கேட்கும் வாய்ப்பை விட்டுக்கொடுத்தான். கிருஷ்ணர் துரியோதனனிடம் ஆயுதம் ஏந்தாத நான் வேண்டுமா அல்லது என் நாராயணி சேனை வேண்டுமா என்று கேட்டார்.

துரியோதனனின் முட்டாள்தனம்

துரியோதனனின் முட்டாள்தனம்

நன்கு யோசித்த துரியோதனன் கிருஷ்ணருக்கு பதிலாக இரண்டு அக்ரோனி சேனைகளை கொண்ட நாராயணி சேனைதான் தனக்கு வேண்டுமென கூறினான். கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார். அர்ஜுனனோ கிருஷ்ணர் மட்டும் தன்னுடன் இருந்தால் போதும் என்று கூறிவிட்டான். கிருஷ்ணர் துரியோதனன் சேனையைதான் கேட்பான் என்று கிருஷ்ணர் நன்கு அறிவார். ஏனெனில் துரியோதனன் கிருஷ்ணரின் மகிமையாய் ஒருபோதும் உணரவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சித்ததே இல்லை.

கிருஷ்ணரின் திட்டம்

கிருஷ்ணரின் திட்டம்

இது கிருஷ்ணர் முன்கூட்டியே தீட்டிய திட்டம் ஆகும். தங்களுக்கு கிடைத்ததை கொண்டு அர்ஜுனனும், துரியோதனனும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்தனர். பாண்டவர்கள்தான் போரில் வெற்றிபெற வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தால் துரியோதனனுக்கு ஏன் தன்னுடைய படையை தரவேண்டும். துரியோதனனுக்கு எதுவுமே தராமல் பாண்டவர்களின் சேனை பலத்தை அதிகரித்திருக்கலாமே. கிருஷ்ணர் தீட்டிய திட்டம் என்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அவதாரத்தின் நோக்கம்

அவதாரத்தின் நோக்கம்

கிருஷ்ண அவதாரத்தின் நோக்கமே பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதும், பூமியில் உள்ள மாவீரர்களை அழித்து சமநிலையை ஏற்படுத்துவதும்தான். ஏனெனில் அந்த யுகத்தில் பல மாவீர்கள் அளவிலா சக்தியுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் ஆற்றலும், அஸ்திரங்களும் உலகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருந்தது. இதில் அவரின் அதிசக்திவாய்ந்த சேனையையும் அவர் அழிக்க எண்ணினார் அதனால்தான் அதனை துரியாதனனுக்கு அளித்தார்.

கிருஷ்ணரின் உதவி

கிருஷ்ணரின் உதவி

கிருஷ்ணரின் நாராயணி சேனை முழுவதையும் அழித்தது அர்ஜுனன்தான். இதனை கிருஷ்ணரின் உதவியுடன்தான் செய்தான். தன்னுடைய சேனையை அழிக்க கிருஷ்ணரே உதவினார். ஏனெனில் நாராயணி சேனையில் இருந்த ஒவ்வொரு வீரனும் பத்து வீரர்களுக்கு சமம். அவர்களை அழிக்கும் திறன் அர்ஜுனனிடம் மட்டும்தான் இருந்தது.

கிருஷ்ணர் ஏன் சேனையை கொடுத்தார்?

கிருஷ்ணர் ஏன் சேனையை கொடுத்தார்?

கிருஷ்ணர் சேனையை பாண்டவர்களுக்கு கொடுத்திருந்தால் இருபுறமும் சமமான படைபலத்துடன் இருந்திருக்கும். அதாவது கௌரவர் தரப்பில் நாராயணி சேனையை சேர்த்து மொத்தம் 11 அக்ரோனி சேனைகள் இருந்தது, பாண்டவர்கள் தரப்பில் 7 அக்ரோனி சேனைகள் மட்டுமே இருந்தது. ஒருவேளை கிருஷ்ணர் தனது சேனையை பாண்டவர்களுக்கு கொடுத்திருந்தால் இருபுறமும் 9 அக்ரோனி சேனைகள் இருந்திருக்கும்.

போர் முடிவு

போர் முடிவு

இவ்வாறு நடந்திருந்தால் போரின் இறுதியில் பாண்டவர்கள் படையில் அதிக வீரர்கள் இருந்திருப்பார்கள். அந்த சூழ்நிலையில் கிருஷ்ணரின் அவதார நோக்கம் நிறைவேறியிருக்காது. அதனை தவிர்க்கவே முக்காலமும் உணர்ந்த கிருஷ்ணர் தனது சேனையை துரியோதனனுக்கு வழங்கினார். இதனால் குறைந்த வீரர்களை கொண்ட பாண்டவ சேனை வெற்றி பெற்றபோது பல மாவீரர்களும், சேனைகளும் அழிக்கப்பட்டு சமநிலை ஏற்படுத்தப்பட்டது.

பிற காரணங்கள்

பிற காரணங்கள்

கிருஷ்ணர் ஆரம்பம் முதலே பாண்டவர்கள் தரப்பில்தான் இருந்தார். ஆனால் ராஜ்ஜியரீதியாக அவர் இந்திரப்பிரஸ்தம் மற்றும் அஸ்தினாபுரம் இரண்டு நாடுகளுடனும் நட்புறவிலேயே இருந்தார். சத்ரிய தர்மத்தின் படி நட்பு ராஜ்ஜியம் உதவி கேட்கும்போது அதனை நிச்சயம் செய்ய வேண்டும். அதனால்தான் கிருஷ்ணர் துரியோதனனுக்கு உதவி புரிந்தார்.

யாதவர்கள்

யாதவர்கள்

கிருஷ்ணருடைய நாராயணி சேனை மட்டும்தான் துரியோதனன் தரப்பில் போரிட்டதே தவிர சில யாதவர்கள் பாண்டவர்களின் தரப்பில்தான் இருந்தார்கள் .அதில் கிருஷ்ணருடைய மகன் பிரத்யுமனும் ஒருவன்.சாத்யகி அர்ஜுனன் தன்னுடைய குரு என்னும் ஒரே காரணத்திற்காக பாண்டவர் தரப்பில் போரில் கலந்து கொண்டான்.

உறவுமுறை

உறவுமுறை

கிருஷ்ணர் பாண்டவர் மற்றும் கௌரவர்கள் இருவருக்குமே உறவினர் ஆவார்.அதனால் அவர் எப்பொழுதும் அவர்களிடம் பாரபட்சம் காட்டியதில்லை. சொல்லப்போனால் துரியோதனனின் மனைவி பானுமதி கிருஷ்ணருடைய தீவிர பக்தை ஆவார். கிருஷ்ணர் பாண்டவர்கள் முற்றிலும் தூய்மையானவர்கள் என்றோ, கௌரவர்கள் முற்றிலும் தீயகுணங்கள் கொண்டவர்கள் என்றோ ஒருபோதும் சிந்தித்து இல்லை. கௌரவர்கள் தரப்பில் அதர்மம் சற்று அதிகமான இருப்பதாக மட்டுமே அவர் எண்ணினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion