Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
இந்த வருடம் அமாவாசை எந்தெந்த தேதிகளில் வருகிறது? இதோ ஃபுல் லிஸ்ட் உங்களுக்காக...
இங்கே 2019 ஆம் ஆண்டு எந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் அமாவாசை வருகின்றது என்பது பற்றிய முழு விவரத்தையும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரியப் படி அமாவாசை ஏன் மற்ற தினங்களை விடவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் அது தேய்பிறை நாள். அந்த நாளிலிருந்து புதிய நிலவு (வளர்பிறை) வளரத் தொடங்கும் என்பது பொருள்.

அதனால் தான் அது சிறப்பு வாய்ந்த நாளாகச் சொல்லப்படுகிறது. இந்த அமாவாசை நாள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவது வெவ்வேறு காரணங்களுக்காக முக்கியமான நாளாக அடையாளம் காணப்படுகிறது.

அமாவாசை
இந்து மதம் மற்றும் இன்னும் வேறு சில மதங்களிலும் அமாவாசை மிக முக்கிய புனித நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையும் புது நிலவின் தொடக்கமாக இருக்கும். ஒரு வருடத்துக்கு பனிரெண்டு அமாவாசை வந்து போகும்.
சில மாதங்களில் சில சமயங்களில் இரண்டு அமாவாசையும் வந்து போகும். சமயங்களைப் பொருத்தவரையில் இந்த ஒவ்வொரு அமாவாசைக்கும் அதன் தன்மைகளைப் பொறுத்து பெயர் வேறுபடும்.

முன்னோர் வழிபாடு
அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். தானம் செய்வதற்கும் மற்ற சில காரியங்களுக்கும் மிகச்சிறந்த நாளாக அமாவாசை இருக்கிறது. அத்தகைய நல்ல நாளான அமாவாசை இந்த வருடத்தில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் அமாவாசை வருகிறது என்கிற முழு விபரமும் இதோ உங்களுக்காக இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம்
ஜனவரி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு தர்ஷ அமாவாசை என்று பெயர். இந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அமாவாசை வருகிறது. ஜனவரி 5 ஆம் தேதி அதிகாலை 4.58 க்கு தொடங்குகிற அமாவாசை ஜனவரி 6 ஆம் தேதி காலை 6.58 க்கு நிறைவடைகிறது.

பிப்ரவரி மாதம்
பிப்ரவரி மாதத்தில் ஏற்படுகின்ற அமாவாசைக்கு மஹாளய அமாவாசை என்று பெயர். இந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகிற அமாவாசை பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு 11.52க்கு தொடங்குகிற அமாவாசை பிப்ரவரி 5 ஆம் தேதி அதிகாலை 2.33 வரை நீடிக்கும்.

மார்ச் மாதம்
மார்ச் மாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு சயித்ர கிருஷ்ண அமாவாசை என்று பெயர். இந்த மார்ச் மாதத்தில் வருகின்ற அமாவாசை மார்ச் 5 ஆம் தேதி புதன்கிழமையன்று வருகிறது. மார்ச் 5 ஆம் தேதி இரவு 11.52 தொடங்கி, 6 ஆம் தேதி இரவு 9.34 வரை தொடரும்.

ஏப்ரல் மாதம்
ஏப்ரல் மாதத்தில் உண்டாகிற அமாவாசை தர்ஷ் அமாவாசை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் 4 ஆம் தேதியன்று வியாழக்கிழமை அமாவாசை வருகிறது. ஏப்ரல் 4 ஆம் தேதி பிற்பகல் 12.51 மணிக்குத் தொடங்குகிற 5 ஆம் தேதி ஏப்ரல் பிற்பகல் 2.20 வரை நீளுகிறது. இந்த ஏப்ரலில் இரண்டு அமாவாசை வருகிறது. அது இதன் தொடர்ச்சியாக வரும் 5 ஆம் தேதியும் அமாவாசை இருக்கிறது.

மே மாதம்
2019 ஆம் ஆண்டு வருகிற அமாவாசையானது மே 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. சனிக்கிழமை அதிகாலை 4.04 மணிக்குத் தொடங்குகின்ற அமாவாசை மே 5 ஆம் தேதி காலை 4.15 வரை நீள்கிறது.

ஜூன் மாதம்
ஜெயெஸ்த அமாவாசை என்று ஜூன் மாதத்தில் வரும் அமாவாசை அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் வருகிற அமாவாசை 3 ஆம் தேதியன்று வருகிறது. ஜூன் மாதம் இரண்டாம் தேதி மாலை 4.40 மணிக்கு தொடங்குகிற அமாவாசை ஜூன் 3 ஆம் தேதி மாலை 3.32 மணிக்கு நிறைவடைகிறது.

ஜூலை மாதம்
ஜூலை மாதம் வருகின்ற அமாவாசை அசத கிருஷ்ண அமாவாசை என்று பெயர். அந்த மாதத்தில் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று வருகிறது. அப்படி இரண்டாம் தேதி அதிகாலை 3.06 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் மூன்றாம் தேதி நள்ளிரவு 12.46 மணிக்கு நிறைவு பெறுகிறது.

ஆகஸ்ட் மாதம்
பத்ரபட் கிருஷ்ண அமாவாசை என்ற பெயரில் ஆகஸ்ட் மாத அமாவாசை அழைக்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாத அமாவாசை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. ஜூலை 31 ஆம் தேதி காலையில் 8.41 மணிக்கு தொடங்குகின்ற அமாவாசை ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 8.41 க்கு முடிகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் கிரிகோரியன் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதே மாதத்தின் இறுதியில் இன்னொரு அமாவாசை வருகிறது. அது அஸ்வின் கிருஷ்ண அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.55 க்கு தொடங்குகிற இந்த அமாவாசை ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை 4.07 மணிக்கு நிறைவடைகிறது.

செப்டம்பர் மாதம்
செப்டம்பர் மாதத்தில் வரும் அமாவாசைக்கு கார்த்திக் கிருஷ்ண அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. வருகிற 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அதிகாலையில் 3.46 க்கு தொடங்குகிற அமாவாசை அதே நாளில் இரவு 11.56 மணிக்கு முடிகிறது.

அக்டோபர் மாதம்
அக்டோபரில் வரும் அமாவாசைக்கும் கார்த்திக் கிருஷ்ண அமாவாசை என்று தான் பெயர். 27 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 12.23 மணிக்குத் தொடங்கி, 28 அக்டோபர் காலை 9.08 மணிக்கு முடிகிறது. இதே நாளில் இன்னொரு வித அமாவாசை தொடங்குகிறது. அதற்குப் பெயர் மகாசிரிஷ கிருஷ்ண அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

நவம்பர் மாதம்
பாஷ அமாவாசை என்று அழைக்கப்படுகிற நவம்பர் மாத அமாவாசை நவம்பர் 25 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு 10.40 மணிக்குத் தொடங்கி, 26 ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 8.35 மணிக்கு நிறைவடைகிறது.

டிசம்பர் மாதம்
டிசம்பர் மாதத்தில் வருகிற அமாவாசை பாஷ அமாவாசை மற்றும் மஹா கிருஷ்ண அமாவாசை என்ற இரண்டு பெயர்களில் அழைக்கப்படுகிறது. டிசம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.17 மணிக்கு ஆரம்பித்து வெள்ளிக்கிழமை காலை 10.43 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நாளில் குறிப்பாக முன்னோர்களுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல் தானம் செய்வதற்கும் ஏற்ற புனித நாளாகக் கருதப்படுகிறது.
என்ன! இந்த வருடம் முழுக்க வருகிற அமாவாசை பற்றிய முழு லிஸ்ட்டும் கிடைச்சிடுச்சா?... இனிமேல் உங்க ஆன்மீக பயணங்கள், முன்னோர் வழிபாடு என எல்லாவற்றையும் பிளான் பண்ணுங்க...



Click it and Unblock the Notifications











