For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி விளக்கேத்துனா லக்ஷ்மியோட அருளும் அதிர்ஷ்டமும் உங்க வீடு தேடி வரும் தெரியுமா?

|

பூஜை என்றாலே அதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது விளக்காகும். விளக்கானது அறிவு, நேர்மறை சக்தி, ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கை வீட்டில் ஏற்றுவது புனிதமான ஒன்றாக இந்து மாதத்தில் கருதப்படுகிறது.தினமும் விளக்கேற்றுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருள், அறியாமை மற்றும் எதிற்மறை சக்திகளை விரட்டும் என்று கூறப்படுகிறது.

விளக்கு புனிதமான ஒன்று மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். விளக்கேற்றுவது உங்கள் வீட்டில் அமைதியை மட்டும் கொண்டுவருவதில்லை அதனுடன் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டத்தையும் சரிசெய்யக்கூடும். எப்படியெனில் விளக்கேற்றுவது உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவியை அழைத்துவரும். எப்படி விளக்கேற்றுவது உங்களுக்கு சிறப்பான நன்மைகளை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெய் தீபம்

நெய் தீபம்

வீட்டில் நெய் விளக்கேற்றுவது உங்கள் வாழ்க்கையில் செல்வம் மற்றும் அறிவை கொண்டுவரும். எந்தவொரு பூஜையும் சரி விழாவும் சரி இந்தியாவில் விளக்கு ஏற்றுவது இன்றி நடக்காது. இவ்வாறு செய்வதன் மூலம் கடவுள் நம்மை ஆசீர்வதிக்க நம் வீட்டிற்கே வருவதாக நம்பப்படுகிறது.

தீபாராதனை

தீபாராதனை

கோவில்களில் தீபாராதனை காட்டும்போது ஐந்து விளக்குகளை ஏற்றி கடிகாரம் சுழலும் திசையில் கடவுளின் சிலையை நோக்கி சுற்றுவார்கள். இவ்வாறு செய்வது அந்த இடத்தை சுற்றியிருக்கும் காற்றை சுத்தப்படுத்தும். இது கடவுள் மீதான நம்முடைய அர்ப்பணிப்பை விளக்குவதாக இருக்கும்.

விளக்கேற்றுவது உங்கள் வாழ்க்கையை மாற்றும்

விளக்கேற்றுவது உங்கள் வாழ்க்கையை மாற்றும்

உங்களுக்கு தெரியுமா நீங்கள் ஏற்றும் விளக்கு, அதற்கு உபயோகிக்கும் எண்ணெய், அதில் உபயோகிக்கும் திரி போன்றவை உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். வித்தியாசமான திரி மற்றும் வித்தியாசமான விளக்கு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

MOST READ: பெண்களின் முகத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டறியும் ரகசியம் தெரியுமா?

வாழை திரி

வாழை திரி

வாழைத்தண்டை கொண்டு திரி செய்து அதன் மூலம் விளக்கேற்றுவது நீங்கள் உங்களுக்கே தெரியாமல் செய்த தவறுகளுக்கு உங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பை பெற்றுத்தரும். இதுமட்டுமின்றி உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு அளித்த சாபங்களை நீக்கும்.

பஞ்சு திரி

பஞ்சு திரி

பஞ்சு திரி என்பது மிகவும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

பன்னீர் திரி

பன்னீர் திரி

லட்சுமி தேவியை மகிழ்ச்சிப்படுத்தும் மிகவும் எளிதான வழி இதுதான். ஒரு வெள்ளை துணியை எடுத்துக்கொண்டு அதனை பன்னீரில் ஊறவைக்கவும். பின்னர் அதனை எடுத்து காயவைத்து அதனை திரியாக பயன்படுத்தவும். இவ்வாறு தினமும் விளக்கேற்றுவது உங்கள் உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளை பெற்றுத்தருவதோடு உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் உண்டாக்கும்.

மஞ்சள் திரி

மஞ்சள் திரி

உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினைகள் சந்தித்தால் இது உங்களுக்கு தீர்வாக அமையும். மஞ்சள் நிற துணியில் தினமும் விளக்கேற்றுவது ஆண், பெண் இடையே எழும் பிரச்சினைகளை தீர்க்கக்கூடியதாக இருக்கும்.

MOST READ: இந்த ராசிக்கார்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

தாமரை தண்டு திரி

தாமரை தண்டு திரி

உங்களுடைய முந்தைய பிறவிகளின் பாவங்கள் அனைத்தையும் போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் உங்களுக்கு இந்த வழி உதவியாக இருக்கும். தாமரை தண்டை திரி போல கத்தரித்து காயவைத்து அதில் நெய்தீபம் ஏற்றவும்.

சிவப்பு மற்றும் மஞ்சள்

சிவப்பு மற்றும் மஞ்சள்

சிவப்பு நிற துணியில் திரி தயாரித்து விளக்கேற்றுவது திருமணம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அனைத்து தடங்கல்களையும் நீக்கும், புதிய மஞ்சள் துணியில் விளக்கேற்றுவது உங்களுக்கு பார்வதியின் அருளை பெற்றுத்தரும்.

விளக்கின் அடையாளம்

விளக்கின் அடையாளம்

நெய் மற்றும் அதன் சுடர் லட்சுமி தேவியை குறிக்கும், சுடரிலிருந்து வரும் ஒளியானது படிப்பின் கடவுளான சரஸ்வதி தேவியை குறிக்கிறது, இதிலிருந்து வரும் வெப்பமானது தீமையை அழிக்கும் துர்கையை குறிக்கிறது. எந்தெந்த எண்ணெயை பயன்படுத்துவதால் என்னென்ன பலன் கிடைக்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தூய நெய்

தூய நெய்

மற்ற எண்ணெய்களை காட்டிலும் நெய் தீபமேற்றுவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இது மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க தங்கம் அணியாம இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்லது இல்லைனா பிரச்சினைதான்...!

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

விநாயகரை வணங்கும் போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ளுங்கள். ஏனெனில் விநாயகருக்கு மிகவும் பிடித்த இது உங்களுக்கு அவரின் அருளை பெற்றுத்தரும்.

எள் எண்ணெய்

எள் எண்ணெய்

எள் எண்ணெய் பயன்படுத்துவது உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளையும், தீய சக்திகளையும் விரட்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபடுவது உங்களுக்கு சனிபகவானின் பலனை பெற்றுத்தரும்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது உங்கள் வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும், கற்பூர எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது மகிழ்ச்சியையும், புகழையும் பெற்றுத்தரும். விளக்கேற்றும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

திரிகளின் எண்ணிக்கை

திரிகளின் எண்ணிக்கை

விளக்கேற்றும் போது எப்பொழுதும் மூன்று திரிகளை உபயோகிக்கவும் இது லட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்கை அம்மன் மூன்று பேரின் இணைப்பையும் குறிக்கும். விளக்கேற்றிய பின் கையில் இருக்கும் எண்ணெயை தலையில் தடவாதீர்கள், ஏனெனில் இது உங்களுக்கு பணக்கஷ்டத்தை ஏற்படுத்தும். இதனை உங்கள் துணியின் மீது தடவுவதும் உங்களுக்கு தீங்கைதான் ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக இந்த எண்ணெயை துடைக்க ஒரு துணியை எப்பொழுதும் பூஜையறையில் வைத்து விடுங்கள்.

MOST READ: உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா? அதன் பின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

விளக்கின் திசை

விளக்கின் திசை

வடக்கு திசை நோக்கி விளக்கேற்றுவது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். இவ்வாறு விளக்கேற்றி லட்சுமி தேவியை வழிபடும் போது அது உங்கள் அஷ்ட செல்வங்களையும் பெற்றுத்தரும். கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றுவது உங்களுக்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். மேற்கு திசை நோக்கி விளக்கேற்றுவது உங்களின் கடன் பிரச்சினைகளை குறைப்பதோடு, வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க செய்யும். இந்த திசை நோக்கி எப்போதும் விளக்கேற்ற கூடாது ஏனெனில் இது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: lakshmi wealth money ghee oil
English summary

Lighting diyas in these ways will attract Goddess Lakshmi

Lighting diyas in these ways will attract Goddess Lakshmi and keep away the evil from your house.