Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ஒவ்வொரு விரலுக்கும் ஒரு கிரகத்துடன் தொடர்புள்ளது. அது ஒவ்வொன்றும் நமது ஆளுமையின் மீதும், செயல்பாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அனைத்து விரல்களும் ஒரே மாதிரி இருக்காது என்று கூறுவது முழுவதும் உண்மை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளத்திலும், வடிவத்திலும் இருக்கும். உங்கள் விரலின் நீளங்கள் மட்டுமின்றி அவற்றின் சில பண்புகளும் அவற்றை வித்தியாசப்படுத்தி காட்டும். உங்கள் விரல்கள் உங்களின் ஆளுமையை காட்டும் கண்ணாடியாகவும் இருக்கிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ஒவ்வொரு விரலுக்கும் ஒரு கிரகத்துடன் தொடர்புள்ளது. அது ஒவ்வொன்றும் நமது ஆளுமையின் மீதும், செயல்பாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் விரல்கள் உங்களை பற்றி என்னென்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

சுண்டு விரல்
கைரேகை சாஸ்திரத்தின் படி சுண்டு விரலானது புதன் கிரகத்தின் கீழ் வரக்கூடியது. அதன்படி சுண்டு விரலின் நீளம் மிகவும் குறைவாக இருபவர்களுக்கு பொறுமை என்பது இருக்காது. சுண்டுவிரல் சற்று நீளமாக இருப்பவர்களுக்கு இரக்கம், கருணை போன்ற குணங்கள் குறைவாக இருக்கும் என்று அர்த்தம். சீரற்ற வடிவமுடைய சுண்டு விரலை கொண்டவர்களை ஒரு போதும் நம்பக்கூடாது. ஏனெனில் அவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் உங்களை ஏமாற்ற தாயாரை இருப்பார்கள்.

நீளம்
ஒருவேளை சுண்டு விரலானது மோதிர விரலின் நகம் வரை நீளமாக சென்றால் அவர்கள் வாழ்க்கையில் தெளிவான இலட்சியம் உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சிறந்த மருத்துவர்களாய் வர வாய்ப்புள்ளது. இந்த அமைப்புடையவர்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் உடையவர்களாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் வாழ்க்கையில் பணமழையில் நனைவார்கள்.

இடது கை அல்லது வலது கை
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆணின் வலது கையும், பெண்ணின் இடது கையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தாங்கள் அதிகம் உபயோகிக்கும் கையைத்தான் ஜோதிடத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

நடுவிரல்
உங்களின் நடுவிரலானது சனி கிரகத்துடன் தொடர்புடையது. நடுவிரல் மிகவும் நீளமாக இருப்பவர்கள் அசாதாரணமான அதேசமயம் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

மோதிர விரல்
உங்களின் நடுவிரல் மோதிர விரலை விட நான்கில் ஒருமடங்கு பெரியதாக இருந்தால் அது நல்லதாகும். அவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை அடைவார்கள். ஒருவேளை மோதிர விரல் நடுவிரலை விட நீளமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அவமானங்கள்
நடுவிரல் மிகவும் நீளமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல அவமானங்களை சந்திக்க நேரிடும். ஒருவேளை மோதிர விரலும், நடுவிரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்களால் சரியான முடிவெடுக்க இயலாது. மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள்.

விரல் இடைவெளி
மோதிர விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் இடைவெளி மிகவும் குறைவாக இருந்தால் அவர்கள் அதிக சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். அதேசமயம் இடைவெளி மிகவம் அதிகமாக இருந்தால் அவர்கள் அதிக அலட்சிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆள்காட்டி விரல்
ஆள்காட்டி விரல் சூரியனுடன் தொடர்புடையது. ஒருவேளை ஆள்காட்டி விரல் நடுவிரலை விட நீளமாக இருந்தால் அவர்களின் சிந்தனைகள் மிகவும் பெரியதாக இருக்கும். அவர்கள் மற்றவர்கள் தொடமுடியாத உயரத்தை அடைவார்கள்.

விரலின் நீளம்
ஆள்காட்டி விரலும், நடுவிரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கையில் யாரும் குறுக்கிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

சிறிய ஆள்காட்டி விரல்
ஆள்காட்டி விரல் மிகவும் சிறியதாக இருப்பவர்கள் தந்திரமானவர்களாகவும், இரக்கமில்லவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் செல்வத்தை அடைவதற்கு தவறான எந்த வழிமுறைகளை வேண்டுமென்றாலும் பின்பற்றுவார்கள்.

கட்டைவிரல்
ஒருவேளை ஆள்காட்டி விரல் கட்டை விரலை நோக்கி வளைந்திருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள்.

துரதிர்ஷ்டம்
ஆள்காட்டி விரல் நடுவிரலை நோக்கி வளைந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் துரதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.

நீளமான விரல்கள்
அனைத்து விரல்களும் நீளமாக இருப்பவர்கள் அவர்கள் காதல் மற்றும் பொறுமை அனைத்தும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பிடிவாத குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

குட்டையான விரல்கள்
குட்டையான விரல்களை கொண்டவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது. அவர்கள் வாழ்க்கையில் அனைத்து முடிவுகளையும் வேகமாக எடுக்க நினைப்பார்கள். மற்றவர்களுடன் ஒத்துப்போக கூடியவர்களாகவும், கற்பனைத்திறன் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
