Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா
உங்கள் வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பணப்பிரச்சினைகளை தீர்ப்பதுடன் உங்கள் வீட்டிற்கு நல்ல வாஸ்துவை ஈர்க்கும்.
அனைவருக்குமே அதிக பணத்தின் மீது ஆசை இருக்கும். இந்த உலகத்தில் நினைத்த படி வாழ்வதற்கும் அடிப்படை தேவைகள் முதல் ஆடம்பர தேவைகள் வரை அனைத்தையும் நிறைவேற்றி கொள்ள பணம் என்பது மிகவும் அவசியமானதாகும். பணம் சம்பாதிப்பது என்பது இந்த உலகத்தில் சிலருக்கு மிகவும் சுலபமான வழி ஆனால் சிலருக்கோ அது மிகவும் கடினமானதாக இருக்கிறது.

சிலருக்கு எவ்வளவு உழைத்தாலும் வீட்டில் பணம் சேராது, அதற்கு காரணம் அவர்களின் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சினை ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பணப்பிரச்சினைகளை தீர்ப்பதுடன் உங்கள் வீட்டிற்கு நல்ல வாஸ்துவை ஈர்க்கும். இந்த பதிவில் உங்கள் வீட்டில் வைக்கும் எந்தெந்த பொருட்கள் நல்ல வாஸ்துவை கொண்டுவரும் என்று பார்க்கலாம்.

அனுமன் சிலை
பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட அனுமன் சிலையை வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்கவும். இந்த சிலையை தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கும்.

லக்ஷ்மி குபேரர் படம்
உங்கள் வீட்டின் நுழைவாயிலில் லட்சுமி மற்றும் குபேரர் இருக்கும் படத்தை மாட்டி வைக்கவும். ஸ்வஸ்திக் சின்னத்தையும் மாட்டி வைக்கலாம். இது உங்கள் வீட்டில் இருக்கும் பணத்திற்கு பாதுகாப்பாய் அமையும். உங்கள் வீட்டில் இருக்கும் பணம் தேவையில்லாமல் வெளியே செல்வதை இது தடுக்கும்.

வாஸ்து கடவுள்
உங்கள் வீட்டில் வாஸ்து கடவுளின் சிலையையோ அல்லது உருவப்படத்தையோ வைத்து வழிபடுவது உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் நீக்கும். இது உங்களின் சூழலை சுத்திகரித்து உங்கள் வீட்டின் பொதுவான மனநிலையை மேம்படுத்தும். இது உங்கள் வீட்டில் தீயவிளைவுகளை அகற்றி உங்களின் பணநெருக்கடியை தீர்க்கும்.

மண்பானை
உங்கள் வீட்டின் வடக்கு மூலையில் மண்ணால் செய்யப்பட்ட பானையில் தண்ணீரை நிரப்பி வைக்கவும். இது நீங்கள் சம்பாரிக்கும் பணத்தை உங்கள் வீட்டிலேயே தங்க வைக்க உதவும். இந்த பானை எப்பொழுதும் நீரால் நிரம்பியிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது எப்பொழுதும் மூடியிருக்கும்டி பார்த்து கொள்ளவும்.

உலோக மீன் அல்லது ஆமை
உங்கள் வீட்டில் உலோகத்தால் செய்யப்பட்ட மீன் அல்லது ஆமை உங்கள் வீட்டில் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாகும். இது வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் நீக்குவதோடு குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

பிரமிட்
உங்கள் வீட்டில் அனைவரும் அதிக நேரம் இருக்குமிடத்தில் வெள்ளி அல்லது செம்பால் செய்யப்பட்ட பிரமிட்டை வைத்திருந்தால் அது உங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும் படி செய்யும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

கடைகளுக்கு
நீங்கள் கடையோ அல்லது வியாபாரமோ வைத்திருந்தால் உங்கள் பணப்பெட்டி வடக்கு திசையை நோக்கி இருக்கமாறு வைத்திருக்கவும். இது உங்கள் கடையில் எப்பொழுதும் பணவரவு இருக்கும்படி பார்த்துக்கொள்ளும்.

அதிக வெளிச்சம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் கடையில் கூர்மையான விளக்குகளை நிறுவினால் கடைகளில் ஒப்பந்தங்கள் விரைவில் முடியும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் வீட்டில் இது போன்ற கூர்மையான விளக்குகளை நிறுவுவதை தவிர்க்கவும்.

துடைப்பம்
வீட்டின் படிக்கட்டிற்கு அடியில் ஒருபோதும் ஷூ, துடைப்பம் போன்றவற்றை ஒருபோதும் வைக்காதீர்கள். இவ்வாறு வைப்பது வீட்டின் வாஸ்துவை கெடுப்பதுடன் உங்கள் வீட்டில் வறுமையையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
