Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இறந்துபோன அம்மா, அப்பா பிணங்களை தோண்டி மேக்கப் போட்டு விழா கொண்டாடும் மக்கள்
பிணங்களை தோண்டி எடுத்து மேக்கப் போட்டு விழா எடுக்கும் இந்தோனேசிய பழங்குடிகள் பற்றி தான் இங்கே பார்க்கவிருக்கிறோம். அது பற்றிய முழுமையான தொகுப்பு தான் இது.
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தான் டோராஜென் மக்கள். இவர்கள் இறப்பு என்பது மனிதனுக்கு முடிவல்ல. அதைத்தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. அவர்களுடன் நமக்கு உறவு இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
அதனால் ஒவ்வொரு வருடமும் தங்கள் வீட்டில் இறந்து போன முன்னோர்களின் பிணங்களைத் தோண்டியெடுத்து அவைகளுக்கு தலைசீவி மேக்கப் போட்டு, உடை மாற்றி கொண்டாடுகிறார்கள். அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பழங்குடிகள்
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் தான் டோராஜென் இன மக்கள். பொதுவாக பழங்குடியின மக்களுக்கு வெவ்வேறு நம்பிக்கைகளும் அவர்கள் கடைபிடிக்கிற சடங்குகளும் இருக்கும். அந்த வகையில் இந்த டோராஜென் பழங்குடியின மக்களுக்கும் ஒரு வித்தியாசமான நம்பிக்கை இருக்கிறது.

இறந்து போன முன்னோர்
இவர்கள் தங்களுடைய வீடுகளில் இறந்து போனவர்களை மிகவும் மரியாதையாகக் நினைக்கிறார்கள். மனிதர்கள் இறந்து போனவுடன் அவர்களுக்கு நம்முடன் இருக்கும் உறவு என்பது முடிவடைந்து போவதில்லை. அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அவர்களுக்கு நாம் வாழும் காலம் வரையிலும் மரியாதை கொடுப்பது தான் நம்முடைய உறவுக்கும் நமக்கும் நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று மனதார நம்புகின்றனர்.

இறந்தவர்கள் உடல்
இந்த நம்பிக்கையின் காரணமாக தங்களுடைய வீட்டில் இறந்த முன்னோர்களின் உடல்களை சில ஆண்டுகள் வரை தங்களுடைய வீட்டிலேயே புதைத்துப் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சில முக்கிய திருவிழா போன்ற தினங்களில் இவர்களுக்கு தங்களைப் போலவே மரியாதை செலுத்துகிறார்கள். தங்கள் வீட்டில் இறந்தவர்களுடைய உடல்களை பார்மால்டிஹைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பதப்படுத்தி வைக்கிறார்கள்.

அறுவடைத் திருவிழா
ஆண்டுதோறும் நம்மைப் போலவே எல்லா நாடுகளிலும் அறுவடைத் திருவிழா நடத்தப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய அறுவடைத் திருவிழாவில் இந்த பழங்குடிகள் தங்களுடைய வீட்டில் இதற்கு முன்னால் இறந்து போனவர்களுக்கு மிக முக்கியமான மரியாதை செலுத்துகிறார்கள். இந்த அறுவடைத் திருவிழா தங்களுடைய முன்னோர்களின் உடல்களோடு உலா வந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.

மேக்கப் போட்டு விடுவது
இந்த பழங்குடியின மக்கள் தங்களுடைய பதப்படுத்தப்பட்ட முன்னோர்களின் உடல்களை முழுக்க அலங்காரம் செய்கிறார்கள். தலை சீவி விட்டு, மேக்கப் போட்டு விடப்படுகிறது. சிகரெட் பிடிப்பவர்களாக அவர்களுக்கு சிகரெட்டும் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பேஷனாக உடை அணிவித்து மகிழ்கிறார்கள்.

தாய்க்கு ஹேர்கட்
இந்த பழங்குடியினத்தை சேர்ந்த மார்டன் லபி என்பவர் தன்னுடைய தாய்க்கு வருடா வருடம் ஹேர்கட் செய்துவிடுகிறார். இவரும் இவருடைய குடும்பத்தினரும் புதிய ஆடைகள் அணிவித்து வருடா வருடம் திருவிழாவின் போது மரியாதையை செலுத்தி வருகிறது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் அந்த தாய் 1997 ஆம் ஆண்டு இறந்திருக்கிறார். அப்போதிருந்து இன்றுவரை தொடர்ந்து வருடா வருடம் மரியாதை செலுத்தப்படுகிறது.

இரண்டு கிராமங்கள்
இந்த இரண்டு கிராமங்களிலும் வாழும் மக்கள் தங்களுடைய இறந்து போன அம்மா, அப்பாக்களை பார்மால்டிஹைடு திரவத்தைப் பயன்படுத்தி உடல்களைப் பதப்படுத்தி வைக்கிறார்கள். இவர்கள் புது ஆடைகள் மட்டுமின்றி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு சிகரெட் வைத்து வாயில் பற்ற வைக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுக்கு உணவுகளும் கொடுக்கிறார்கள்.

ஊர் சுற்றும் பிணம்
இந்த ஊரில் ரேபாங்க் என்னும் பெண்மணி ஒருவர் 1990 ஆம் ஆண்டு இற்நது போயிருக்கிறார். அப்போதிருந்து இப்போது வரையிலும் அவருடைய மகன் புதிய ஆடைகள் அணிவித்து மேக்கப் போடுவதோடு மட்டுமல்லாமல் திருவிழா சமயங்களில் தன்னுடைய தாயை தோலில் சுமந்து கொண்டு, ஊருக்குள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார். இறந்து சில மாதங்கள், வாரங்கள் அல்லது ஒருசில வருடங்கள் பதப்படுத்தி வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் 1990 ஆம் ஆண்டிலிருந்து வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

செல்பிக்கள்
தங்களுடைய இறந்து போன தாத்தா, பாட்டிகளை அலங்காரங்களுடன் பார்த்து மரியாதை செலுத்துவதோடு அவர்களுடைய வாரிசுகள் செல்பிக்கள் எடுத்துக் குவிக்கிறார்கள்.

கி.பி.800
இந்த திருவிழாக்களும் மரபு முறைகளும் ஏதோ 1990 களுக்குப் பின்பு தான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதில் சில உடல்களை கார்பன் வயது கணிப்பு மூலம் ஆய்வு செய்த போது, இந்த உடல்களின் காலம் கிட்டதட்ட கிபி.800 ஆண்டுக்குச் செல்கிறது.

வாழும்போது
இதில் ஒருவரின் உடல் மிகவும் ஆச்சர்யப்படும் படி மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அதாவது அவர் வாழும் போது எப்படி இருந்தாரோ அதேபோல ஆடைகள் அணிவித்து, அதேபோன்று மேக்கப் செய்யப்பட்டு அந்த உடலை நிற்க வைத்து அதற்கு அருகில் அவருடைய பழைய புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. இவரும் 1990 களுக்கு முன்பாக இறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
