For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

நியூமராலஜியில் மூன்றாம் எண்ணுக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்கள் பற்றிய முழுமையான தொகுப்பு தான் இது.

|

எண்களின் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்களை அறிந்து கொள்ள எண்கணிதம் உதவுகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கான ஆட்சி எண் கணக்கிடப்படவேண்டும். இந்த ஆட்சி எண் அடிப்படையில் ஒரு தனிநபரின் குணங்களை எளிதாக புரிந்து கொள்ள இயலும். ஒவ்வொரும் ஆட்சி எண்ணுக்குரியவரும் ஒரு குறிப்பிட்ட குணநலம் கொண்டிருப்பார்கள்.

Numerology

அந்த விதத்தில் எண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவரின் குணநலம் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூமராலஜியில் எண்

நியூமராலஜியில் எண்

ஆட்சி எண்ணை எப்படி கணக்கிடுவது என்பது தெரியாமல் இருந்தால் அதனைக் கணக்கிடும் எளிய முறையை இப்போது நாங்கள் கூறுகிறோம்.

உங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்காக எண்ணாக கணக்கிடுவதன் மூலம் உங்கள் ஆட்சி எண்ணை அறிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த நாள் 9, செப்டம்பர் , 1984 என்றால், உங்கள் ஆட்சி எண்ணைக் கணக்கிடும் முறை இதோ,

9+9+1+9+8+4= 40; 4+0=4.

உங்கள் ஆட்சி எண் 4.

MOST READ: இனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...

அவர் படைப்பாற்றல் மிக்கவர்

அவர் படைப்பாற்றல் மிக்கவர்

ஆட்சி எண் 3ஐக் கொண்டவர், படைப்பாற்றல் மிக்கவர். இவரின் தகவல் தொடர்பு ஆற்றல் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கவிதை, நடிப்பு, எழுத்து, கலை , இசை என்று எல்லாவற்றிலும் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள்.

சுற்றி இருப்பவரை எளிதில் கவருவார்

சுற்றி இருப்பவரை எளிதில் கவருவார்

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய செயலை செய்து தன்னைச் சுற்றி இருப்பவரைக் கவரும் முயற்சியில் இறங்குவார். இதன் மூலம் அவரின் பன்முக ஆற்றல் மற்றவர்களுக்கு விளங்கும். எந்தவொரு விஷயத்தையும் செய்யாமல் சிவனே என்று அமரும் தன்மை இவர்களுக்கு சிறிதளவு கூட கிடையாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூகத் தொடர்பு இவர்கள் பலம்

சமூகத் தொடர்பு இவர்கள் பலம்

மற்றவர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு இவர்களுக்கு மிகப் பெரிய வலிமை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மிகக் கடினமான யோசனைகளைக் கூட மிக எளிதாகவும் மிகப் பெரிய பிரயத்தனம் இல்லாமலும் இவர்களால் வெளிப்படுத்த இயலும்.

MOST READ: பக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி? படிச்சு தெரிஞ்சிக்கங்க...

நேர்மறைக் குணம் கொண்டவர்

நேர்மறைக் குணம் கொண்டவர்

எண் 3ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள். தியாக மனப்பான்மைக் கொண்டவர். மற்றவரின் நலனுக்காக தனது சௌகரியங்களை இழக்கவும் தயங்க மாட்டார். இவரின் கவர்ந்திழுக்கும் குணநலம், சுற்றி இருப்பவரை இவர் பக்கம் ஈர்க்கும். ஒட்டு மொத்தமாக கூறினால், வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நேர்மறை எண்ணத்துடன் வாழ்வார்.

இவரின் பலவீனம்

இவரின் பலவீனம்

மிகவும் சிறிய விஷயத்திற்கும் கோபம் கொண்டு தங்கள் உணர்ச்சிகளை இழந்து எரிச்சலடைவார்கள். கடினமான சூழ்நிலையில் , பித்து பிடித்தது போல் நடந்து கொள்வார்கள், மனச்சோர்வுக்கு ஆளாவார்கள். மறுபுறம், மிகுந்த நேர்மறைக் குணம் கொண்டவர்கள், பேசுவதை நிறுத்தவே மாட்டார்கள்.

MOST READ: கிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...

அதிர்ஷ்டம் அளிக்கும் விஷயங்கள்

அதிர்ஷ்டம் அளிக்கும் விஷயங்கள்

அதிர்ஷ்ட தனிமம் - ஆகாயம்

அதிர்ஷ்ட நாள் - செவ்வாய் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட கல் - நீலக்கல்

அதிர்ஷ்ட எண் - 12

அதிர்ஷ்ட மாதம் - மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்

அதிர்ஷ்ட உலோகம் - தங்கம்

அதிர்ஷ்ட எழுத்து - C, G, L, மற்றும் S

அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Importance Of Number Three In Numerology

The personality traits of individuals based on their ruling numbers according to numerology makes it easy to understand them. People born under the ruling number three have their particular traits.
Desktop Bottom Promotion