Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
இந்த நட்சத்திரத்துல பிறந்தவங்களுக்குத்தான் சொந்த தொழில் செட் ஆகுமாம்..மத்தவங்க ரிஸ்க் எடுக்காதீங்க..
ஜோதிட சாஸ்திரத்தில் உங்களை பற்றி துல்லியமாக கணக்கிட உங்களுடைய நட்சத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த ராசிக்கு அடுத்து முக்கிய இடம் வகிப்பது நமது நட்சத்திரம்தான். நட்சத்திரங்கள் நமது வாழ்க்கையின் மீதும் எதிர்காலத்தின் மீதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஜோதிட சாஸ்திரத்தில் உங்களை பற்றி துல்லியமாக கணக்கிட உங்களுடைய நட்சத்திரம் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற கணிப்புகளைத்தாண்டி நட்சத்திரங்கள் உங்களின் எதிர்காலம் எந்த துறையில் சிறப்பாக இருக்கும் என்பதை கணக்கிடக்கூடியவை. அதன்படி எந்த துறையில் வேலை அல்லது தொழில் செய்வது உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் என்று நட்சத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து விடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கான சிறந்த துறை எதுவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பரணி
" பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம் " என்று கூறுவார்கள். அது உண்மைதான், இவர்களுக்கு தொழில்நுட்ப வேலைகள், காவல்துறை, வியாபாரம் என இவர்கள் கைவைக்கும் அனைத்திலும் வெற்றிபெறுவார்கள். தீர யோசித்து அதற்கு பின் செயலில் இறங்குவது நல்லது.

கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவகம், நகைத்தொழில், ஆன்மீகம் தொடர்பான பணிகள் மற்றும் ஜோதிடம் போன்ற துறைகளில் பணியாற்றினால் அவர்களின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.

ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு போக்குவரத்து துறையில் நல்ல எதிர்காலம் இருக்கும். மேலும் மிருகங்கள் தொடர்பான வேலைகள், கண்ணாடி தொடர்பான வேலைகள் போன்றவற்றில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல தொழில்களில் சிறந்து விளங்குவார்கள். வாசனை தொழில், விவசாயம், இசைத்துறை, ஆசிரியர் மற்றும் கட்டட அமைப்பாளர் போன்ற துறைகளில் பணியாற்றுவது இவர்க்ளுக்கு நல்லது.

திருவாதிரை
இவர்கள் ஜோதிடம் மற்றும் கிரகை போன்றவற்றில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. இவர்கள் மற்றவர்களின் மனதை படித்து அவர்களுக்கு உதவுவதில் சிறந்து விளங்குவார்கள்.

புனர்பூசம்
புனர்பூச நட்சித்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிலைகள் செய்வது, எந்திரவியல், உணவு தயாரிப்பு மற்றும் உணவக உரிமையாளர் போன்ற பணிகள் பொருத்தமானதாக இருக்கும். இவர்கள் பிறக்கும் போதே நிர்வாகத்திறனுடன் பிறந்தவர்கள் ஆவர்.

பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசியல்தான் சிறந்த துறை. தலைவராகும் தகுதி இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்வதிலும், போட்டியிட்டு வெல்வதிலும் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.

ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரத்திற்கு கீழ் பிறந்தவர்கள் நிதித்துறை, பங்குசந்தை, மருந்துகள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற துறையில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது.

மகம்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த மருத்துவராக வர வாய்ப்புள்ளது. குறிப்பாக தோல் மற்றும் குழந்தைநல மருத்துவராக இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கற்பிக்கும் பணியும் இவர்களுக்கான நல்ல தேர்வுதான்.

பூரம்
பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த இசைக்கலைஞராகவும், மற்ற கலைத்துறையிலும் சிறந்து விளங்குபவராக இருப்பார்கள். நடனக்கலை, சிற்பக்கலை போன்றவையும் வழக்கறிஞர், திருமண ஆலோசகர் போன்ற துறையும் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தரும்.

உத்திரம்
இவர்களுக்கு கட்டிட அமைப்பும், தீயணைப்பு துறையும், விவசாயமும் சிறநத துறைகள். மேலும் ஓவியம் வரையும் திறமையும் இவர்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது.

அஸ்தம்
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணி வியாபாரத்தில் இறங்கினால் கொடிகட்டி பறப்பார்கள், மேலும் நகை, ஹோட்டல் போன்றவையும் இவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இவர்களுக்கு உருவாக்குவதிலும், வடிவமைப்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.

சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வங்கிப்பணி, மின்சாரத்துறை, பத்திரிக்கை துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் எழுத்துக்கென்று தனிசக்தி இருக்கும்.

ஸ்வாதி
விளையாட்டுத்துறையில் தீவிரமாக இறங்கினால் இவர்கள் நிறைய சாதிப்பார்கள், குறிப்பாக மல்யுத்தம் இவர்களுக்கு சிறந்த தேர்வு. அரசாங்க பணிக்கு செல்ல இவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.

விசாகம்
பேசும் வேலை என்றால் மிகவும் பிடித்ததாக இருக்கும். எனவே இவர்கள் பேச்சாளராகவோ, தொலைக்காட்சி அல்லது வானொலியில் பெரிய இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. இராணுவம், விமர்சகர் போன்றவை இவர்களுக்கான வேறுசில தேர்வுகளாகும்.

அனுஷம்
உளவு பார்ப்பது, ஜோதிடம் பார்ப்பது போன்றவை இவர்களின் சிறந்த முன்னேற்றத்திற்கான துறையாகும். புகைப்படம் எடுப்பது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது, சொந்த தொழில் செய்வது போன்றவை இவர்களுக்கான வேறு வாய்ப்புகள்.

கேட்டை
நிர்வாக வேலைகள், அரசாங்க வேலைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு போன்றவற்றில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் இவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

மூலம்
காவல்துறை, அரசியல், உயிரியல் தொடர்பான வேலைகள் மற்றும் எந்திரங்கள் தொடர்பான வேலைகள் இவர்களுக்கான சிறந்த துறைகள். வேலைகளை நம்பாமல் சொந்த தொழிலில் ஈடுபடுவதும் இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

பூராடம்
கடல் தொடர்பான வேலைகள் மற்றும் கலை தொடர்பான வேலைகளில் இவர்கள் தாராளமாக இறங்கலாம். உடை வடிவமைப்பது, வீட்டை வடிவமைப்பது,அலங்காரம் தொடர்பான வேலைகளை இவர்கள் செய்யலாம்.

உத்திராடம்
சட்டத்துறை, ஜோதிடம், உளவியல் மற்றும் விமானம் போன்றவை இவர்களுக்கான முதன்மை தேர்வு. பாதுகாப்புத்துறை மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் இதிலும் அவர்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

திருவோணம்
கற்பிக்கும் பணிதான் இவர்களுக்கான முதன்மையான துறையாகும். மொழிபெயர்ப்பு, நடிப்பு, மற்றும் கதை சொல்லுவது இவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் துறைகள். விவசாயம் இவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுப்பதாக இருக்கும்.

அவிட்டம்
இசைத்துறையிலும், நிர்வாகத்துறையிலும் இவர்கள் பெரிய உயரங்களை தொடுவார்கள். தொழில்நுட்பத்துறை மற்றும் ஆராய்ச்சிகளில் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உத்திரவாதமாக கிடைக்கும்.

சதயம்
இவர்களுக்கு மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை இரண்டுமே சிறப்பான தேர்வுகளாகும். மறுசுழற்சி செய்யும் வேலைகள், மெக்கானிக் வேலைகள் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும்.

பூரட்டாதி
இறப்பு தொடர்பான வேலைகள், மந்திர வித்தைகள், அமானுஷ்யம் தொடர்பான வேலைகள் இவர்களுக்கு சிறந்தவையாக இருக்கும். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகளை செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.

உத்திரட்டாதி
இவர்கள் யோகா மற்றும் உடற்பயிற்சி கற்றுத்தருவது ஆன்மீகம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவது போன்றவை நல்ல எதிர்காலத்தை உருவாக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு தானம் செய்வதில் சிறநதவராக இருப்பார்கள்.

ரேவதி
இவர்களுக்கு அபார கற்பனை ஆற்றல் இருக்கும். எனவே இவர்களுடைய கற்பனைத்திறனுக்கேற்ற பணியில் ஈடுபடுவது இவர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்கித்தரும். கட்டுமான தொழில் மற்றும் விவசாயம் அடுத்த நல்ல தேர்வுகளாக இருக்கும்.



Click it and Unblock the Notifications