Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
உங்கள் கை ரேகையை வைத்து உங்களுடைய காதலர் யார் என்று கணித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதுபற்றிய ஒரு விளக்கமான பதிவு தான் இது.
நமது கைரேகையை வைத்தே நம்முடைய தொழில், வாழ்க்கை, செல்வசெழிப்பு போன்றவற்றை கணித்து விடலாம். அதே மாதிரி கைகளில் உள்ள சில ரேகைகள் நமது காதல் வாழ்க்கையை பத்தி சொல்லுகிறது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த காதல் ரேகை அல்லது திருமண ரேகை நமது உள்ளங்கைகளில் சுண்டி விரலுக்கு கீழே உள்ள கிடைமட்ட ரேகை ஆகும். இந்த இதய ரேகையைக் கொண்டு நமது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

காதல் ரேகை
இந்த காதல் ரேகையின் நீளம் மற்றும் பிளவு களைக் கொண்டு உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் எந்த மாதிரியான நபர்கள் என்பதை காண இயலும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா இல்லையா என்பதை இதை எடுத்துக் கூறுகிறது. சரியான நபரை தேர்ந்தெடுக்கவும் இந்த கைரேகை ஜோதிடம் உதவுகிறது.

குறுகிய காதல் ரேகை
இதய ரேகையின் நீளம் சிறியதாக இருந்தால் அதாவது அதன் நீளம் நடுவிரல் வரை மட்டும் நீடித்து இருந்தால் அவர்கள் சுயநலமிக்கவர்களாகவும், இரக்கமற்ற, குறுகிய மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இதனால் உறவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க மாட்டீர்கள். இதனால் உங்கள் காதல் வாழ்க்கை சுமூகமாக செல்லாது. தனியாக இருக்க நேரிடும்.

நீண்ட காதல் ரேகை
உங்கள் காதல் மிக நீளமாக அதாவது உள்ளங்கையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நீடித்து இருந்தால் நீங்கள் முகத்திற்கு நேரே நேரடியாக பேசக் கூடிய நபர்கள்.காதல் வாழ்க்கையில் குறுக்குவழியை வெறுப்பீர்கள். இயற்கையாகவே காதல் ததும்பும் பேர்வழிகள் நீங்கள். ஆனால் அது தான் உங்கள் பலவீனமே. உறவில் விரிசல் ஏற்படும் போது அதை உங்களால் தாங்க இயலாது. இதயம் நொறுங்கிப் போய் விடுவீர்கள்.உறவில் ரெம்ப உண்மையாகவும் இருப்பீர்கள்.

காதல் ரேகை வியாழன் மேட்டில் அமைந்தால்
உங்கள் காதல் ரேகை வியாழன் மேடு வரை நீண்டு இருந்தால் நீங்கள் காதல் கனவு, நிறைய எதிர்ப்பார்ப்புகள் கொண்ட பேர்வழிகளாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது உங்கள் நினைப்பாக இருக்கும்.
காதல் ரேகை வியாழன் மேட்டிற்கு இடையில் சனி மேட்டில் இருந்தால்
காதல் ரேகை வியாழன் மற்றும் சனி மேட்டிற்கு இடையில் அமைந்து இருந்தால் உண்மையான காதல் மற்றும் அன்பு கொண்டு இருப்பீர்கள். காதல் உறவில் உங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவீர்கள்.

காதல் ரேகையில் பிளவு
காதல் ரேகையின் நுனியில் பிளவு ஏற்பட்டு அது கீழ்நோக்கி இருந்தால் காதலுக்காக நீங்கள் எதையும் தியாகம் செய்யக் கூடியவர்கள் என்று அர்த்தமாம்.

காதல் ரேகையில் மூன்று பிளவு
காதல் ரேகையின் நுனியில் மூன்று பிளவுகள் காணப்பட்டால் நீங்கள் அமைதியை விரும்பும் நபர்கள். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கை வழக்கத்தை விட கொஞ்சம் கடினமாகவே அமையும்.

காதல் ரேகையில் அதிக பிளவு
உங்கள் காதல் ரேகையின் நுனியில் அதிக பிளவு தென்பட்டால் நீங்கள் ஒரு உண்மையான காதல் வாழ்க்கையை பெற முடியும். எப்பொழுதும் காதலில் மாறாமல் இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
