Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
இந்த பொருட்களை உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுத்தால் லட்சுமி தேவி உங்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுப்பார்
பெண்களை மதித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வீட்டில்தான் லக்ஷ்மி தேவி வசிக்க விரும்புவார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
" பெண்கள் நாட்டின் கண்கள் " என்று ஆயிரம் வசனங்கள் பேசினாலும் நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவில்தான் பெண்களை லட்சுமியின் உருவம் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ அவர்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

உண்மையில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லம்தான் அனைத்து செல்வங்களும் நிறைந்ததாக இருக்கும். பெண்களை மதித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வீட்டில்தான் லக்ஷ்மி தேவி வசிக்க விரும்புவார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. பெண்களுக்கு கணவர்கள் கொடுக்கும் சில பரிசுகள் அவர்களின் இல்லத்திற்கு செல்வம் தேடிவரும் என்று கூறப்படுகிறது. செல்வத்தை ஈர்க்க மனைவிக்கு என்னென்ன பரிசு கொடுக்கவேண்டும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

சிவப்பு நிற துணி
கணவன் மனைவிக்கு சிவப்பு நிற துணியை பரிசாக கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு இடையேயான காதலை மட்டும் அதிகரிப்பதில்லை, இது லட்சுமி தேவியை ஈர்க்கும் ஒரு விஷயமாகும்.அந்த குடும்பத்திற்கு செல்வம் தேடிவரும்.

மற்றவர்களுக்கு
தனது மனைவியை தவிர அம்மா மற்றும் சகோதரிக்கும் ஆண்கள் சிவப்பு நிற ஆடையை பரிசாக கொடுக்கலாம். ஆனால் ஒரே நிபந்தனை சகோதரிக்கு வழங்கும் போது ஆவர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும்.

நகைகள்
அனைத்து பெண்களுக்கும் நகைகள் பிடிக்கும். நகை பரிசாக மட்டுமின்றி அது ஒரு முதலீடாகவும் இப்போது மாறியிருக்கிறது. கணவன் மனைவிக்கு பரிசாக நகையை கொடுக்கும்போது அது முதலீடாக மட்டுமின்றி லட்சுமியின் அருளையும் பெற்றுத்தரும்.

என்ன பரிசு கொடுக்க வேண்டும்?
பொதுவாக மனைவிக்கு தங்க நகைகளை பரிசாக கொடுப்பது நல்லது. ஒருவேளை உங்களால் தங்க நகை வாங்க இயலவில்லை என்றால் வெள்ளி நகையையாவது வாங்கி கொடுங்கள். பெரிய நகைகளுக்கு பதிலாக அடிக்கடி சின்ன சின்ன நகைகளாக வாங்கி கொடுங்கள்.

அலங்கார பொருட்கள்
கணவன் மனைவிக்கு அலங்கார பொருட்கள் வாங்கி தருவது அவர்களின் உறவை மேலும் வலிமையானதாக்கும். திருமணமான பெண் என்று அடையாளப்படுத்தும் குங்குமம், வளையல், பொட்டு போன்றவற்றை அடிக்கடி வாங்கிக்கொடுங்கள்.

மரியாதை
இந்த உலோக பரிசுகள் தவிர விலை கொடுத்து வாங்க இயலாத பெரிய பரிசு ஒன்று உள்ளது. அந்த பரிசுதான் அன்பும், காதலும். இந்த பரிசை மட்டும் கொடுத்து விட்டால் போதும் உங்கள் இல்லம் மகிழ்ச்சியானதாக மாறிவிடும். இப்படியிருக்கும் வீட்டில் லட்சுமி தேவி நிலைபெற்று இருப்பார். இது மட்டுமின்றி லட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் இரு வழிகளும் உள்ளது.

அஷ்டலக்ஷ்மி மந்திரம்
தினமும் 8 முறை மஹாலக்ஷ்மி அஸ்தகத்தை கூறுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரும். வாழ்க்கையில் அதிக பணப்பிரச்சினை இருந்தால் மஹாலக்ஷ்மி அஸ்தகத்தை 80 முறை கூறவும்.

நெய்விளக்கு
தினமும் மாலை உங்கள் வீட்டில் நெய்விளக்கேற்றி வைப்பது உங்களை எதிர்மறை சக்திகள் நெருங்காமல் பார்த்து கொள்ளும். உங்கள் பூஜையறையில் நெய்விளக்கேற்றும் போது அதனுடன் தேங்காயையும் வைத்து வழிபடவும்.

துளசியை வழிபடுங்கள்
தினமும் துளசியை வழிபடுவது உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளை பெற்றுத்தரும். துளசி செடி நன்றாக வளரும் இடத்தில் அனைத்து கடவுளும் வசிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. தினமும் காலையில் துளசியை வழிபடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications