Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா?
கம்ப இராமாயணத்திற்கும், வாலமீகி இராமாயணத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது. இராவணன் சீதையை தீண்டாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் அதனை படிக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தும். எவ்வளவு திறமைகள், ஆற்றல், பலம் இருந்தாலும் பெண்ணாசை ஒருவனை அழித்து விடும் என்பதற்கு இராவணன் மிகசிறந்த உதாரணம் ஆவார்.

கம்ப இராமாயணத்திற்கும், வாலமீகி இராமாயணத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது. இராவணன் சீதையை தீண்டாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான உண்மையான காரணம் இராவணன் பெற்றிருந்த சாபம்தான். இந்த பதிவில் இராவணனுக்கு யார் சாபம் கொடுத்தார்கள், என்ன சாபம் கொடுத்தார்கள் என்றார் பார்க்கலாம்.

அசோகவனத்தில் சீதை
இராவணன் சீதையை கவர்ந்து சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சீதையை அவர் பிணைக்கைதியாக வைத்திருக்கவில்லை. அதற்கு பதிலாக தன் விருந்தாளியாக பெண் அரக்கிகளின் கண்காணிப்பில் ஒரு வருடம் அசோக வனத்தில் வைத்திருந்தார். அந்த ஒரு வருடத்தில் இராவணன் ஒருபோதும் சீதையை தீண்ட முயற்சிக்கவில்லை. அதற்கு காரணம் விருந்தோம்பல் அல்ல மரணம் மீதான பயம்.

இராவணன்
அசுர வேந்தனான இராவணன் பிறப்பால் ஓர் அந்தணன் ஆவார், சிவபெருமான் மீதான அவரின் பக்தி என்பது ஒப்பிட முடியாத ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தில் மட்டும் வல்லவராக இல்லாமல் இராவணன் ஈடுஇணையற்ற மாவீரனாகவும் இருந்தார். அவரது ஞானமும், அறிவும் வேதங்களுக்கு அப்பாற்பட்டது.

மோட்சம்
சீதையை கட்டாயப்படுத்தி தீண்டினால் தனக்கு உடனடியாக மரணம் ஏற்படும் என்பதை இராவணன் முன்கூட்டியே அறிந்திருந்தார். அவ்வாறு செய்தால் தன்னால் மோட்சத்தை அடைய முடியாது, மேலும் திருமாலின் அவதாரமான இராமனால் தான் வதைக்கப்படும் வாய்ப்பை இழப்போம் என்று இராவணன் உணர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இராவணனின் முற்பிறவியில் அவன் திருமாலின் அவதாரத்தால் வதைக்கப்பட வேண்டும் என்ற சாபம் பெற்றிருந்தார்.

ரம்பை
இராவணன் எல்லையில்லா பெண்ணாசை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். சீதையின் சுயம்வரத்திற்காக மிதிலைக்கு சென்றபோது வழியில் தனது சகோதரர் குபேரனை பார்க்க சென்றார். அப்போது வனத்தின் வழியே செல்லும்போது அங்கே ரம்பை குபேரனுக்காக காத்திருந்ததை இராவணன் பார்த்தார்.

சாபத்தின் காரணம்
ரம்பையின் அழகில் மயங்கிய இராவணன் காமத்தின் மிகுதியால் ரம்பையை பலாத்காரம் செய்துவிட்டார். அதன்பின் அதேநிலையில் ரம்பையை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

நல் குபேரன்
நல் குபேரன் தன் மனைவியை சந்திக்க வந்தபோது அங்கே அலங்கோலமான கோலத்தில் கிடந்த ரம்பையை கண்டு அதிர்ச்சியடைந்தார். ரம்பையின் இந்த நிலைக்கு காரணம் யாரென கேட்டபோது அதற்கு ரம்பை இராவணனின்க் பெயரை கூறினார்.

கொடூரமான சாபம்
தனது சகோதரனை நினைத்து கோபமும், வெட்கமும் அடைந்த நல் குபேரன் இனி எந்தவொரு பெண்ணையும் அவளின் விருப்பமின்றி தீண்டினால் அந்த கணமே இராவணன் எரிந்து சாம்பலாகி விட வேண்டும் என்று சாபமிட்டார். இதனால்தான் இராவணன் சீதையை கட்டாயப்படுத்தாமல் தன் அரண்மனையை விட்டு தொலைவில் சீதையை அசோகவனத்தில் தங்கவைத்தார்.



Click it and Unblock the Notifications