For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓம் நமசிவாய - ஓம் சிவாய நமஹ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதை எப்போ சொல்லணும்?

ஓம் நமசிவாய, ஓம் சிவாய நமஹ என்பவற்றுக்கு இடையே இருக்கின்ற வேறுபாடு என்ன, எது சக்தி வாய்ந்தது என்பது குறித்து தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

|

"ஓம் நமசிவாய" மற்றும் "ஓம் சிவாய நம" ஆகிய இரண்டு மந்திரங்களும் மகாதேவர், சிவபெருமானைக் குறிக்கும் ஒரு மந்திரம் ஆகும். இந்த இரண்டு மந்திரங்களும் ஒரே மாதிரி தோன்றினாலும் இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று நினைத்தாலும், ஓம் நமசிவாய மற்றும் ஓம் சிவாய நம என்ற இரண்டு மந்திரகளுக்கும் அதன் பொருளில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு.

Om Namah Shivaya

பொதுவாக "நம" என்ற சொல் கடவுளின் பெயருக்கு பின்னால் குறிப்பிடப்படும். குறிப்பாக, இறைவனை நாம் நேரடியாகக் குறிப்பிடும்போது இவ்வாறு பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு, நாம் ஸ்ரீ ராமரைக் குறிக்கும்போது "ஓம் ராமாய நம" என்று வழிபடுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்கள்

இந்த இரண்டு மந்திரங்களுக்கும் ஒரே விதமான பொருள் என்று சிலர் நம்புகின்றனர். இவை இரண்டுமே சிவபெருமானை வணங்கும் மந்திரம் ஆகும். கடவுளை ஈர்ப்பதற்கு வெறும் பெயர் கொண்டு அழைப்பதை விட பாடல் பாடுவது சிறப்பானதாக இருக்கும். அதனால் அடிப்படையில், "ஓம் சிவாய நம" என்பது நேரடியாக அவரை அழைப்பது போன்றதாகும்.

"ஓம் நமசிவாய" என்பது ஒரு கவிதை வடிவம் ஆகும். வேதங்களின்படி, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனித்துவமான தாளம் உண்டு என்பதை நாம் உணர்ந்திருக்கலாம்.

இருப்பினும், "ஓம் சிவாய நம" மற்றும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரங்களின் உண்மையான விளக்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

MOST READ: உங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா? இதோ பாருங்க...

ஓம் நமசிவாய - ஸ்துல பஞ்சாக்ஷரம்

ஓம் நமசிவாய - ஸ்துல பஞ்சாக்ஷரம்

உலக நோக்கங்களை அடைவதற்காக இந்த ஓம் நமசிவாய என்ற மந்திரம் ஜெபிக்கப்படுகிறது.

ஓம் சிவாய நம - சூக்ஷம பஞ்சாக்ஷரம்

ஓம் சிவாய நம - சூக்ஷம பஞ்சாக்ஷரம்

ஓம் சிவாய நம என்ற மந்திரம் உலகத்தில் இருந்து விடுதலை பெற்று மோக்ஷத்தை அடைய ஜெபிக்கும் மந்திரமாகும்.

வள்ளலார் ஸ்வாமிகள் கூறுவது என்னவென்றால், ஒரு நபர் புனிதமான விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டவுடன், அவர் "சிவாய நம" என்று ஜெபிக்க வேண்டும். இந்த மந்திரம் அந்த பக்தருக்கு நல்ல பேச்சு, நல்ல நட்பு, நல்ல குணம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை வழங்குகிறது.

MOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்? அதான் டுவிஸ்ட்...

விளக்கம்

விளக்கம்

இந்த மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொன்றைக் குறிப்பிடுகிறது. "ந" என்ற எழுத்து பெருமையைக் குறிக்கிறது, "ம" என்ற எழுத்து மனதில் உள்ள அழுக்குகளைக் குறிக்கிறது, "சி" என்ற எழுத்து சிவபெருமானைக் குறிக்கிறது, "வா" என்ற எழுத்து சக்தி தேவியைக் குறிக்கிறது மற்றும் "ய" என்ற எழுத்து ஆத்மாவைக் குறிக்கிறது. அதனால், நாம் "சிவாய நம" என்று கூறும்போது, ஆத்மாவைக் குறிக்கும் "ய" என்ற எழுத்து மத்தியில் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் பெருமை மற்றும் மனதின் அழுக்கு ஆகியவை "நம" என்னும் எழுத்தில் அடங்குகிறது. "ய" என்ற எழுத்தின் மறுபக்கம் சிவபெருமான் மற்றும் சக்தி தேவி ஆகியோரைக் குறிக்கும்

MOST READ: குபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...

என்ன பலன் உண்டாகும்?

என்ன பலன் உண்டாகும்?

"சிவா" என்ற எழுத்துக்கள் உள்ளன. எனவே, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிக்கும் கட்டம் இது. நமக்கு சலனம் உண்டாக்கும் பக்கம் திரும்பப் போகிறோமா அல்லது இறைவன் பக்கம் திரும்பப் போகிறோமா? "ய" என்ற எழுத்து "வா" என்ற எழுத்துக்கு அடுத்து உள்ளது. அதாவது, சக்தி தேவி, சிவபெருமானை விட கருணை மிக்கவள். தவறிழைக்கும் குழந்தை தனது தந்தையை நெருங்க அஞ்சும்.

அதனால் முதலில் தனது தாயிடம் சென்று மன்னிப்பு கேட்கிறது, தனது குழந்தையை கடுமையாக தண்டிக்க வேண்டாம் என்று தந்தையிடம் தாய் சிபாரிசு செய்கிறாள். அதே போல், சிவபெருமானின் கோபம் பக்தனை நேரடியாக தாக்காமல் இருக்க பார்வதி தேவி உறுதி செய்கிறாள். நமக்காக அவர் சிவபெருமானிடம் பேசுகிறார். சிவபெருமானின் கருணையைப் பெற, முதலில் நாம் பார்வதி தேவியிடம் செல்ல வேண்டும். இதன் மூலம் சிவபெருமானின் கருணை நமக்கு தானாகக் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Difference between “Om Namah Shivaya” and “Om Shivaya Namah'

Om Namah Shivaya’ and ‘Om Shivaya Namah’ are mantras dedicated to Mahadeva, Lord Shiva. Although it appears and considered that there’s not much difference in ‘Om Namah Shivaya’ and ‘Om Shivay Namah’, there’s a slight difference in their meanings.
Story first published: Friday, June 14, 2019, 12:12 [IST]
Desktop Bottom Promotion