Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய தாராள மனப்பான்மையால் உங்கள் மீதான மதிப்பு மற்றவர்களிடம் அதிகரிக்க ஆரம்பிக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பு உண்டு. மனதுக்குள் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் உருவாகும். சாஸ்திரங்கள் பற்றிய ஞானம் மேம்படும். உங்களுடைய திறமைகள் மூலம் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம்
உங்களுடைய பொருளாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களின் செயல்களால் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்
உத்தியோகத்தில் நீங்கள் அடுத்தவர்களை நம்பிச் செயல்பட வேண்டாம். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோர்களாக இருந்தால், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

கடகம்
போட்டிகளில் பங்கேற்று அதனால் மறற்வர்களுடைய பாராட்டைப் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடித்து, அதன்மூலம் வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் முறையில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

சிம்மம்
வேலை நிமித்தமாக அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் அமைதிப் போக்கினைக் கடைபிடியுங்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெற்றோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி
நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். பண வரவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க ஆரம்பிக்கும். பணிகளில் பதட்டம் இல்லாமல் செயல்படுங்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறையும். சம வயதினரிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும்.

துலாம்
தொழில் சம்பந்தப்பட் ஆவணங்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுக் கூட்டப் பேச்சுக்களில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படும்.

விருச்சிகம்
தலைமைப் பதவிகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். கால்நடைகளிடம் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு வெற்றி உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட பணிகளில் நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

தனுசு
தொழிலில் புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். விவாதங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல்கள் உருவாகும். சங்கீதம் தொடர்புடைய விஷயங்களில் ஆர்வமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்.

மகரம்
குடும்ப உறுப்பினர்களின் மூலமாக, உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நீங்கள் நினைத்த பணிகளில் எதிர்பார்த்த அளவுககு வெற்றியும் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் மனம் மகிழ்ச்சி அடையும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கும்பம்
வர்த்தகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கொஞ்சம் கவனம் தேவை. தேவையில்லாத வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். மனைவியின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் வேகத்தைக் குறைப்பது நல்லது. சக பணியாளர்களிடம் அமைதிப் போக்கினை கடைபிடியுங்கள்.

மீனம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்கின்ற செயலில் சின்ன சின்ன காரியத்தடைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கால தாமதம் உண்டாகும்.



Click it and Unblock the Notifications