Latest Updates
-
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
எந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பொதுக் கூட்டங்களில் பேசும்போது உங்களுக்கு அமோகமான ஆதரவுகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை தொழிலில் பரிசோதனை செய்து பார்ப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
தொழிலில் உங்களுடைய திறமையினால் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவாகாரங்களில் சிறு சிறு தடைகள் மற்றும் தாமதங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்
பொது நல காரியங்களில் ஆடுபடுகிறவர்கள் கொஞ்சமட அமைதி காப்பது நல்லது. புதிதாக ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் பெரியோர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுங்கள். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய பேச்சுத் திறமையினால் லாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களுடைய ஆதரவினால் சுபிட்சங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத் திறமையினால் அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
சமூக சேவை புரிகின்றவர்குளுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பயிணில் தேவையில்லாத அலைச்சல்கள் மற்றும் விரயச் செலவுகள் ஏற்படும். திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமானதாக வந்து அமையும். வாகன வசதிகள் மேம்படும். உங்களுடைய திறமைகளின் மூலமாக பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி அதிகரிக்கும். வேளாண் தொழிலில் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் உண்டாகும். உங்களுடைய சிந்தனையின் போக்கினில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர சகோரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏதும் செய்யாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
இசை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மக்கள் தொடர்பு துறையில், உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களுடைய ஆதரவினால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தந்தையின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புதிய இலக்கினை நிர்ணயித்து பயணம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கவலையினால் மனதில் சோர்வு உண்டாகும். நண்பர்களுடன் வீண் விதாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கால்நடைகளிடம் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த இழுபறி நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத் தன்மை உண்டாகும் வாய்ப்பு உண்டாகும்.உடல் சோர்வின் காரணமாக பணியை கொஞ்சம் கால தாமதமாக செய்து முடிப்பீர்கள். சுப செய்திகளின் மூலமாக சுப விரயங்கள் ஏற்படும். தாய் மற்றும் தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கிறது.

மகரம்
மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடுமு்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் உங்களைத் தேடி வரும். ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் மனதில் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் மேலோங்கி நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மீனம்
வியாபாரம் சம்பந்தப்பட்ட கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications