Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
குருவின் பார்வை இன்றிலிருந்து உச்சத்தில் இருக்கப் போகும் அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் யார்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்குச் சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். வாகனங்களில் பயண்ஙகள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கை தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வணிகத்துறையில் இருக்கின்றவர்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பெரும் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட வகையில்புதுிய நட்புகள் கிடைக்கும் உங்களுடன் பிறந்தவர்கள் மூலம் உங்களுக்கு நிதானங்கள் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
விவசாயத் துறை மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிகின்றவர்களுக்கு கொஞ்சம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். வெளியிடங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கவனம் தேவை. உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார வரவுகளில் உங்களுக்கு சின்ன சின்ன கால தாமதங்கள் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். உங்களுடைய நீண்ட கால பிரச்சினைகளுக்கு உங்களுக்குச் சுமூகமான தீர்வைக் கொடுக்க முயற்சி செய்வீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மீகப் பயணங்கள், புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமாகவும் இருக்கும்.

கன்னி
தொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மேம்பட்டு காணப்படும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்களுக்கு அனுகூலமான முடிவுகள் உண்டாகும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்பினால் நன்மை ஏற்படும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் பெரும் ஆதாயங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவு உங்களுக்கு திருப்திகரமாக வந்து சேரும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருங்கள். சேமிப்புகள் தடைபட்டு போகும். நீங்கள் கையில் எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பதில் சின்ன சின்ன கால தாமதங்கள் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்கு முன்பாக நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த சுப செய்திகள் மூலம் உங்களுக்கு எதிர்பாராத சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலம் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
குடும்பத்தில் நல்ல சுப காரியங்கள் நடக்கும். அதனால் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும். புதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிதாக சொத்தோ வாகனங்களுா வாங்க நினைப்பவர்கள் தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள். அதற்கான பாராட்டுக்களும் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் மற்றவர்களைக் கவர்வீர்கள். உங்களுடைய பொருளாதார மேன்மைக்கான முயற்சிகளால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். வீடு மற்றும் மனை விருத்திக்கான செயல்திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு எந்த காரியமாக இருந்தாலும் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல திருப்தியான சூழல் உருவாகும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களுக்குள் இருந்த சங்கடமான சூழல்கள் மறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலம் நிறமும் இருக்கும்.

கும்பம்
பிரிந்து சென்ற உறவினர்களோ நண்பர்களோ இணைவதற்கான சூழல் உருவாகும். எதிர்பாலினத்தவர்களால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். தடைபட்டு வந்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு இது சாதகமான நாளாகவே அமையும். மனதுக்குள் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மீனம்
வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். மாணவர்கள் கல்வித்துறையில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். முக்கிய உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. அடுத்தவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகலாம். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் தேவையில்லாத வீண் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











