Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இன்னைக்கு எந்த ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு? எந்த திசையில காத்திருக்கு?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். கடிதத்தின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். தூர தேசப் பயணங்களின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வாகனங்களின் மூலம் தனலாபம் உண்டாகும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய ஆட்களுடைய நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் மூலமாக பெருமை அடைவீர்கள். திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் உள்ளவர்களின் ஆதரவினால் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். புதிய செயல் திட்டங்களைத் தீட்டி, அதற்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
தொழில் மேம்பாட்டுக்காக நண்பர்களுடைய உதவிகளைப் பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். அறிவு பெருகும். ஞானம் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீங்களே எதிர்பாராத வியாபாரங்கள் உண்டாகும். அயல்நாட்டு வேலை வாய்ப்புகளின் மூலம் லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

சிம்மம்
அந்நியர்களின் மூலமாக நீங்கள் எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வாக்குறுதிகளால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை வெளிப்படும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி
மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு குழப்பங்களால் மனதில் சோர்வு உண்டாகும். உங்களுடன் பிறந்தவர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடியினால் மந்தத்தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
மனதில் துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். மனைவியின் உதவியினால் தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நிர்வாகத்தில் உள்ள குறைகளைக் களைவீர்கள். கால்நடைகள் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறங்களாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய வாரிசுகளின் மூலமாக உங்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் மூலமாக சோர்வுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

தனுசு
மனதுக்குள் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட பணிகளில் இழுபறி நிலை உண்டாகும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத பேச்சுக்களிளைத் தவிர்ப்பது நல்லது. அந்நியர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். மூத்த உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
பதவி உயர்வுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பொது கூட்டங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கு ஆதரவுகள் பெருகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட இலக்குகளினுடைய முடிவுகளால் சிந்தனையில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்களால் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நேர்மையானவராக இருந்தீா்கள் என்றால் உங்களுடைய மதிப்புகள் உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருக்கும் னவலைகள் தீரும். நில விருத்திகள் உண்டாகும். தொழில் மற்றும் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications