Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு மட்டும் கையில ஏன் காசு தங்க மாட்டேங்குது தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய வாக்குத் திறமையினால் உங்களுக்கு லாபம் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் உதவிகளின் மூலமாக உங்களுக்குத் தொழிலில் உண்டான பிரச்சினைகள் தீரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களை விரைவில் செய்து முடிப்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். பொருளாதார வரவில் இருந்து வந்த தடைகள் விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பெற்றோர்களுடைய ஆதரவினால் இதுவரை மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உங்களுடைய எண்ணங்களின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வாகனங்களின் மூலம் சில வீண் விரயச் செலவுகள் உண்டாகும். வெளியூா் பயணங்களை மேற்கொள்வீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் நட்பு உங்களுக்குக் கிடைக்கும். நிர்வுாகத் துறையில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கிற பொழுது கூடுதல் நிதானம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பொழுது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்காது. உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் உங்களுடைய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
நீங்கள் நினைத்தபடி உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். புதிய நபர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். பெரிய மகான்களுடைய ஆசிகள் உங்களுக்குக் கிடைக்குமு். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவினால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கானள திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
தொழிலில் உங்களுடைய வாடிக்கையாளர்களிள் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். சுய தொழில் புரிகின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் புத்துணர்ச்சி அடையும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நீண்ட நாள் எண்ணங்கள் சிறப்பாக நடந்து முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி
மாணவர்கள் கல்வி பயில்கின்ற விதங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும். தொழிலில் பல புதிய தொழில் நுட்பங்களைக் கற்பதில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகத் துறையில் உள்ளவர்குளுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம். கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனதில் சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கத் தொடங்கும். தொழில் துறையில் உண்டான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய புதிய முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கியததில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் கூடுதல் நிதானம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிக்ள உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் நீங்கள் இதுவரை இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். வேலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைச் சுமூகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். வேலையில் உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற முன்னுரிமை உங்களுக்கு வழங்கப்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். செய்கின்ற செயல்களில் பதட்டம் ஏதுமின்றி செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
அடுத்தவர்களை விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல்கள் உருவாகும். வெளியூா் தொழில் முயற்சிகள் சுமாரான பலன்களையே தரும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் முடிவுகளை எட்ட கால தாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் உங்களைத் தேடி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தொழிலில் மேன்மையான சூழல்கள் அமையும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட வேலைகளை இனிதே செய்து முடிப்பீர்கள். அதில் வெற்றியும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். போட்டிகளில் உங்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு ஆன்மீகப் பணியாற்றுவீர்கள். வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்ப்புகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











