Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த ஒரு ராசிக்காரங்க இன்னைக்கு ஒருநாள் வீட்டை பூட்டக்கூடாது... அது எந்த ராசி? எதுக்கு?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதில் லாபமும் அடைவீர்கள். பெற்றோர்களின் உறவினர்களின் வழியே கிடைக்கும் ஆதரவினால் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து போதும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். பரம்பரை சொத்துக்களில் இதுவரையிலும் இருந்து வந்த பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும். நீங்க்ள எதிர்பார்த்த பண வரவு கைக்கு வந்து சேரும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் யாவும் உங்களுக்குக் கைக்கொடுக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் வலுவுடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருநு்து வந்த பிரச்சினைகள் குணமாகும். உங்களுடைய எதிர் பாலினத்தவர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகலாம். வெளியூர் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். சுப காரியங்கள் நடப்பதால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்வீர்கள். தொழிலில் உங்கள் மேல் மற்றவர்களின் மதிப்பு உயரும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த நெருக்கங்கள் அதிகரிக்கும். உங்களுடைய நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவே உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்
உடன் பிறப்புகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வீடு மற்றும் புதிய மனைகள் வாங்குவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஆட்களுடைய அறிமுகமும் அனுகூலங்களும் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். இறைவழிபாடு மன நிம்மதியைத் தரும். உறவினர்கள் உங்களுடைய சுய தொழிலுக்கு உதவி செய்வார்கள். பொது சுவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் சில மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். வாகனங்கள் பழுது பார்க்கும் நிறை உண்டாகும். வாழ்க்கை பற்றிய கூடுதல் பொறுப்புணர்வு உண்டாகும். உங்களுடைய எதிரிகளாலும் உங்களுக்கு இன்று சாதகமான பலன்கள் உண்டாகலாம். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் தீர்ந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வேலையில் உள்ள ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உடமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றுகின்ற எண்ணங்களால் மன சோர்வு உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான நிலை உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். இறை வழிபாட்டை மனம் நாடும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
நீங்கள் எதிர்பார்த்திருந்த பண வரவுகள் உங்களுக்கு வந்து சேருவதற்கு கொஞ்சம் கால தாமதமாகும். பொருளாதாரச் சிக்கல்கள் பனி போல விலகிப் போகும். அடுத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாகப் பேசுவது நல்லது. நண்பர்களின் வாயிலாக தேவையற்ற விரயச் செலவுகள் வந்து போகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன மனக்கசப்புகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்ற உங்களுக்கு பணியில் மிக மேன்மையான சூழல்கள் உண்டாகின்றன. நண்பர்களின் மூலம் சுப காரியச் செய்திகள் வந்து போகும். நீங்கள் செய்கின்ற வேலைகளில் பெரியோர்களுடைய முழுமையான ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஆதரவும் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டுக்கு உறவினர்கள் வருகை இருக்கும். போவார்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பயணங்கள் வெற்றியைத் தேடித்தரும். அதனால் இன்னைக்கு வீட்டை அடைக்காமல் வைத்திருங்கள். தொழில் ரீதியாக புதுப்புது சிந்தனைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications