Latest Updates
-
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இன்னைக்கு உங்க ராசிக்கு எந்த திசையில இருந்து அதிர்ஷ்டம் வரப் போகுதுனு தெரிஞ்சிக்கணுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
இதுவரைக்கும் வசூலாகாமல் இருந்த பணம் ஒருவழியாகக் கைக்கு வந்து சேரும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். புதிய தொழில்கள் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளைப் பெறுவீர்கள். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். அரசியல் துறையில் இருக்கிறவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய எதிர்பார்ப்புகள் யாவும் இன்று நிறைவேறும். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுக்கு முழு திருப்தி ஏற்படும். நீங்கள் செய்கின்ற தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளுககு திருமண வரன்கள் அமையும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதனால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் இருக்கும்.

மிதுனம்
இதுவரைக்கும் தடைபட்டு வந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உறவினர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். மருத்துவம் சம்பந்தப்பட்ட செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பிரிந்து போன நண்பர்கள் தானாகவே உங்களிடம் வந்து சேருவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் இருக்கும்.

கடகம்
மூட நம்பிக்கைகள் அதிகரிப்பின் காரணமாக முக்கியமாக எடுக்க வேண்டிய முடிவுகளில் உங்களுக்குக் கால தாமதம் ஏற்படும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களிடம் கொஞ்சம் அமைதியாகச் செல்லுவது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். உங்களுடைய புதிய முயற்சிகளில் சின்ன சின்ன இன்னல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் உங்களுடைய பொருளாதாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. உங்களுடைய புதிய வேலைக்கான முயற்சிகளில் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் இருக்கும்.

கன்னி
புதிதாக பொருட்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உங்களுக்குப் பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். புதிதாக வீடு, மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய நபர்களுடைய வருகையினால் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் இருக்கும்.

துலாம்
வீட்டில் உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய தொழிலுக்கு ஆதரவாக இருப்பார்கள். பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். திடீரென்று உங்களுக்கு யோகம் அடிக்கும். அதன்மூலம் உங்களுக்கு நீங்கள் எதிர்பாராத திடீர் செயல்பாடுகள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீல நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

விருச்சிகம்
வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது வேகமாகச் செல்லாதீர்கள் . நிர்வாகத் துறை சம்பந்தப்பட்ட முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகளை கேட்பது நல்லது. வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது தான் நல்லது. முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணியில் பொறுப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

தனுசு
உங்களுடைய நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரமும் உங்களுக்கான பதவி உயர்வும் உண்டாகும். வேலையில் உங்களுடைய சக ஊழியர்களுடைய ஆதரவினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கலை மற்றும் கல்வித் துறையில் இருக்கின்றவர்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் இருக்கும்.

மகரம்
நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் வெற்றியாக முடிவடையும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் உள்ளவர்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செயல்கள் உண்டாகும். இதுவரையிலும் தடைபட்டு வந்த காரியங்கள் ஒரு முடிவுக்கு வந்து சுபமாக முடிவடையும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

கும்பம்
மனதுக்குள் ஒருவிதமான குழப்பங்கள் உண்டாகும். உங்களுடைய உதிர் பாலினத்தவர்களுடன் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்காக வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றங்கள் உண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

மீனம்
நீங்கள் செய்கின்ற வேலைகளில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்க ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுடைய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். உங்களுக்கு வாகனச் சேர்க்கைகள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications