Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
குருபகவானின் ஆசிபெற்ற நான்கு ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? அது இவங்க தான்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பீர்கள். பொருளாதார வரவுகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். உங்களுக்கான நல்ல வாய்ப்புகளும் புதிய சூழல்களும் உருவாகும். உங்களுடைய குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுக்கான செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய பயணங்களால் லாபம் பெருகும். நீங்கள் எதிர்பாராத புதிய சந்திப்புகள் நிகழலாம். உங்களுடைய அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் உங்களுக்கு மேலோங்கும். நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். அதனால் எதிலும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நீஞ்கள் எதிர்பார்க்காமலேயே தனவரவு வந்து சேரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கூடுதல் கனிவுடன் பழகுங்கள். உத்தியோகம் தொடர்பாக வெளியூா் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்குக் காலதாமதமாகக் கிடைக்கும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றும் அதீத புரிதல் உண்டாகும். உங்களுடைய சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதாயமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பாராத சுப விரயச் செலவுகளும் உங்களுக்கு ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
எதிலும் அதீத சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வியாபாரங்கள் தொடர்புடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் இருநு்த கவலைகள் குறைந்து உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்களுடைய உத்தியுாகத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நினைத்த பலன்களைக் கொடுக்கும். வாகனங்கள் வாங்குகின்ற பொழுது உங்களுக்கு பெரும் யோகம் உண்டாகும். புதிதாக சொத்துக்கள் வாங்குவது பற்றிய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்டு வந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
நீண்ட நாட்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். வேலையைப் பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் உங்களுக்குக் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சி பிறக்கும். நீங்கள் எதிர்பாராத தன வரவு உங்களுககுக் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
தேவையில்லாத வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களுடைய உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் கொஞ்சம் அமைதியான போக்கினைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆன்மீகப் பயண்ஙகள் மனதுக்கு ஆறுல் அளிக்கும். முக்கிய வேலையில் உங்கள் ஞாபக மறதி தலையிட்டு அந்த வேலையைத் தாமதப்படுத்தும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய பழைய கடன்கள் முழுவதும் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனைவி வழியில் உங்களுடைய உறவுகளின் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் போட்டிகளைச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வெளியூா் தொடர்புடைய தொழில்கள் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிதாக பொருள்கள் வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்குச் சுப செய்திகள் வந்து சேரும். மற்றவர்களுக்காக சில முக்கியப் பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்கள் செல்ல திட்டம் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு
அரசு சம்பந்தப்பட்ட வழியில் நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும் உங்களுடைய பிள்ளைகளின் மூலம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. அது தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க உதவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கத் தொடங்குவீர்கள். பரம்பரைச் சொத்து பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட எதிர்ப்புகள் வந்து போகும். தாய்வழி உறவினர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முக்கிய உத்தியோகத்தில் உள்ள அதிகாரிகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களின் பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

கும்பம்
மனதுக்குள் பெரும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்குத் திறமைக்கு ஏற்ப நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். உங்களுடன் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பரம்பரை சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு நல்ல தீர்வு உண்டாகும். புதிதாக வாகனங்கள் வாங்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ப நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
குடும்பத்தில் இதுவரையிலும் இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் மனம் உற்சாகமடையும் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்துச் செய்து முடிப்பது நல்லது. நீங்கள் செய்கின்ற புதிய முயற்சிகள் யாவும் பலன்களை தருவதற்குக் கொஞசம் கால தாமதமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











