இந்த ராசிக்காரர் இன்னைக்கு ரசம் மட்டும் சாப்பிடவே கூடாதாம்... அது எந்த ராசிப்பா?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

ஒரு நாளைத் துவங்குகின்ற பொழுது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் எடுத்த காரியத்தில் உள்ள சின்ன சின்ன இடர்பாடுகள் விலக ஆரம்பிக்கும். உங்களுடைய வியாபாரத்தில் பொருளாதார வரவு மேம்பட்டு காணப்படும். உறவினர்களுடைய வருகையினால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் உங்களுடைய திறமைக்கு ஏற்ற அளவு பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்குள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுடைய நண்பர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய செயல்பாடுகளின் மந்தத் தன்மை காரணமாக கொஞ்சம் வேலைகள் நிலுவையில் இருக்கும். முக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுவீர்கள். மாணவர்களுடைய நினைவாற்றலினால் உயர்வு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

வெளியூா் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு உடல் சுார்வு உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் கொஞ்சம் இழுபறியான சூழல்கள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற வேலையில் அடுத்தவர்களுடைய விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் எதிர்பாராத வகையில் உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் உங்களுக்குச் சாதகமானதாக முடியும். வியாபாரத்தைப் பொருத்தவரையில் நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கும். ஆன்மீகத்தில் எண்ணங்கள் போகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்வதால் ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட காரியங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு பண வரவு அதிகமாகும். நீங்கள் வியாபாரத்தில் சில நுட்பமான முறைகளைக் கையாளுவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புளிப்பு உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய பெற்றோர்களின் வழியில் கொஞ்சம் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் உங்களுடைய பங்கு தாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, நலம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். பணியில் முக்கிய ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு மற்றும் மனை விருத்திக்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு பணி உயர்வு கிடைக்கும். வெளியூா் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

புதிய நபர்களுடைய அறிமுகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் உங்களுடைய மறைமுக எதிரிகளைக் கண்டுபிடிப்பீர்கள். உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

வீட்டில் உங்களுடைய பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். மிகவும் துணிச்சலுடன் புதிய புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். அனுபவ ரீதியான அறிவு உங்களுக்குக் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய தொழிலில் இருந்த சின்ன சின்ன மனச்சங்கடங்கள் நீங்கி, உங்கள் மீதான நன் மதிப்பு கூடும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனக்கவலைகள் தீர ஆரம்பிக்கும். மனை விருத்தி உண்டாகும். உங்களுக்கு பிரபலமானவர்களுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களுடன் பிறந்த சகோதரர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, February 5, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion